Social Icons

Pages

Featured Posts

Tuesday, November 12, 2013

Who is this Callum Macrae

இந்த கலம் மெக்ரே எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு சார்பான விதத்தில் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த கலம் அநீதி இழைக்கப்பட்ட சமூகங்களில்; புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே தோண்டி எடுத்தவர் என்று சொல்பவர்களும் இல்லாமல் இல்லை.

நைஜீரியாவிலும், ஸ்கொட்லாந்திலும் வளர்ந்த இவர் தற்போது பிரித்தானியாவின் ஊடகவியலாளராக இனங்காணப்படுகின்றார். குறிப்பாக ஈராக், உகண்டா, ஹைட்டி, செனகல், ஜோர்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை இவர் தனது ஆவணப் படங்கள் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

ஈராக் யுத்தத்தில் பிரிட்டிஷ் துருப்புக்களால் சிறைக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், இரகசியக் கொலைகளையும் விளக்கும் On Whose Orders என்ற ஆவணப் படத்தின் மூலமாகவும், ஈராக் யுத்த காலத்தில் பல பில்லியன் ஈராக் பணம் கூட்டுப்படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வர்ணிக்கும் Iraq's Mission Billions (2006) என்ற தொகுப்பும், உகண்டாவின் சிவில் யுத்தம் தொடர்பான Unreported World (2003) என்ற தொகுப்பும், இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய Sri Lanka's Killing Fields மற்றும் No Fire Zone: The Killing Fields of Sri Lanka (2013) என்ற தொகுப்பும் கெலம் மெக்ரேயின் தயாரிப்புக்களாகும்.

பிரித்தானியாவில் தனது குடும்பத்தோடு வாழ்ந்து வந்தாலும், அந்நாட்டின் யுத்தக் குற்றங்களையும் கூட இவர் தொட்டுக் காட்டியவர் என்பதற்க சான்றுகள் உண்டு.

ஆனால், இவர் தொழில் ரீதியாக ஒரு ஊடகவியலாளர் போலவே, ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கின்றார். அதனால், அவரின் காணொளிகளின் அசல் தன்மை குறித்து சிலரை சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

Saturday, July 21, 2012

“போருக்கு பின்னரான அபிவிருத்தி” சர்வதேச மாநாடு - யாழ்.பல்கலைக்கழகம்

அன்பு வணக்கங்களோடு மற்றுமொரு வலைப்பதிவில் நீண்ட இடைவேளைக்கு பின் உங்களோடு இணைகின்றேன்.



போருக்குப் பின்னரான அபிவிருத்தி எனும் தலைப்பிலான யாழ். பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு யாழ். நகரில் உள்ள "ரில்கோ' ஹோட்டலில் ஆரம்பமாகி இடம் பெற்றது.


இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றினார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் தலைமையில் மாநாடு இடம் பெற்றது. மாநாட்டுக்கு  விசேட விருந்தினராக இந்திய தூதரக அதிகாரி அசோக் கே. காந்தாவும் அதிதிப் பேச்சாளராக களனிப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அழைக்கப்பட்டனர்.

இவ் ஆய்வு மாநாட்டில் விருந்தினர்கள் மற்றும் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் சிறி. சற்குணராஜா ஆகியோரது உரைகள் இடம்பெற்றன. மாநாட்டின்  இறுதியில் விருந்தனர்களுக்கு யாழ்ப்பாண  பல்கலைக்கழக இலட்சினை பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.







 இவ் சர்வதேச மாநாட்டுக்கு  வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பேராசிரியர்கள் துறைசார் நிபுணர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக குறிப்பிட தக்க  பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள், பீடாதிபதிகள், வடமாகாண கல்வி அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் “போருக்கு பின்னரான அபிவிருத்தி” எனும் தொனிப் பொருளிலான சர்வதேச  மாநாட்டு ஆரம்ப நிகழ்வில் அழைக்கப்பட்ட அதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பதிவுகளை உங்களோடு பகிர்கின்றேன்...... 






Jaffna university international research conference 20-21 july 2012. Ashok k kantha – High commissioner of india.

"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 2012இல் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். யுத்தம் முடிவடைந்த சூழலில் தகுதியை மேம்படுத்துகின்றோம். இதில் பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்துள்ள 700க்கும் மேம்பட்ட விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் பங்குபற்றுகின்றனர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெறும் இம்மாநாடு இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது. இது  துணைவேந்தர் தலைமையில் அழகாக திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆய்வு மாநாடு. இவ் ஆய்வு மாநாடு யுத்தம் முடிவடைந்த  சூழலில் இலங்கையில் உட்கட்டமைப்பு தகுதியை கட்டியெழுப்பும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

2009 இல் இருந்து 15 தடவைகளுக்கு மேல் யாழ்ப்பாணம் வந்துள்ளேன். 3 தசாப்த யுத்தத்pன் பின் இங்கு இடம்பெற்றுள்ள அபிவருத்திகள் ஆழமாக என்னை கவர்ந்துள்ளது.


நான் நேரடியாகவும் அவற்றைக் கண்டுள்ளேன். 3 லட்சமாக இருந்த உள்ளுரிலேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஐயாயிரமாக குறைந்துள்ளது. இங்கு மீள் கட்டுமானம் இடம்பெறுவதையும் கண்டுள்ளேன். இருந்தும் இப்போதும் புனர்நிர்மாணம், இணக்கப்பாடு என்பன சவாலாகவே உள்ளன. நல்ல நாடாகிய இலங்கை புனர்நிர்மாணம், இணக்கம், சமாதானம் என்பவற்றை அடையும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்போது நல்ல காலத்தை நோக்கி இந் நாடு சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்த பிரஜைகளும் எல்லாவற்றிலும் சம பங்காளர்களாகவே இருப்பர்.


புனர்வாழ்வு, பாதுகாப்பு, ஐக்கியம், இவை அனைத்தும் செய்யப்பட வேண்டியது. இது இலங்கை அரசின் வேலைத்திட்டமாகும். இங்கு அயல்நாட்டு, வெளிநாட்டு பங்காளர்களாக வந்திருக்கும் உங்களின் பங்கு இத்தருணத்தில் எத்தகைய உதவியை வழங்கலாம் என்பதாகும்.
நாங்கள் இந்தியர்கள். நல்ல அயலவர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இங்கு வந்துள்ளோம். ஏங்களது உறவு பிரத்தியேகமானது. 
இலங்கையின் நண்பர்கள் என்ற விதத்தில்தான் நாம் எமது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். நாமாக எங்களுக்கென வேலைத்திட்டங்களை வைத்திருக்கவில்லை.


2009ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற பகுதியாகிய புல்மோட்டை பகுதியில் நடமாடும் வைத்தியசாலை ஒன்றை நாடாத்தினோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்த காலத்தில் காயப்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டது. முகாம்களுக்கு தற்காலிக கொட்டகைகளையும், குடும்ப தேவைகளுக்கான உதவிகளையும் வழங்கினோம்.


1.1மில்லியன் பெறுமதியான கூரைத்தகடுகள், 400,000 சீமெந்து பொதிகளும் வழங்கியிருந்தோம். இது அந்த நேரத்திற்கான தேவையாக இருந்தது.
கண்ணிவெடி அகற்றுவதும் அப்போது பெரும் தேவையாக இருந்தது. முகாம்களில் இருந்து மீண்டுவருவோருக்கு வாழ்வாதாரங்களை மீளமைப்பு செய்வதும் பெரும் தேவையாக இருந்தது.


விவசாய தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதற்கு காணி பெரும் பிரச்சனையாக இருந்தது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்ததும், வளம் பாதிக்கப்பட்டிருந்ததும் பெரும் பிரச்சனையாக இருந்தது.
அத்தோடு இலங்கை, எம்மிடம் செயற்கை உறுப்புகளையும் தர வேண்டும் எனவும் எங்களிடம் கோரியிருந்தது. இருபது வயதுப் பெண்ணொருவர் இரண்டு கால்களையும் இழந்தவர், அவருக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்ட பின் முகத்தில் புன் சிரிப்புடன் அவர் சென்றதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. 


இப்போது எமது செயற்பாடுகள் குறுகிய காலத் தேவைகளில் இருந்து நீண்ட காலத் தேவைகளுக்கு மாறியுள்ளது. இலங்கை ஜனாதிபதியுடன் நாங்கள் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து திட்டமிட்டதில் ஒன்று  வட பகுதிக்கான போக்குவரத்தை மீள சீரமைப்பதாகும். நாம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டின்படி 18 மில்லியன் ருபா புகையிரதப்பாதை சீரமைப்புக்காக வழங்க இணங்கியுள்ளோம். சுருக்கமாக சொல்கின்றேன், இந்தப் புகையிரதப்பாதை சீர்படுத்தல்கள் மிகவும் சிறப்பாக முன்னேற்றகரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் நம்புகின்றேன் 2014ன் முற்பகுதியில் யாழ்தேவிப் புகையிரதானது  மீள ஆரம்பிக்கப்படும் என. இதற்கமைவாக பளைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான புகையிரப்பாதை புனரமைப்பு 2013ல் முடிவடையும். அதே போல பளைக்கும் தலைமன்னாருக்குமான புகையிரதப் பாதை புனரமைப்பும் நிறைவடையும்.


காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்படுகின்றது. தெற்கு ரயில்வே செயற்திட்டத்தை இன்னும் ஆறு மாதங்களில் நிறைவு செய்து அரசிடம் கையளிக்கவுள்ளோம். இவையனைத்தும் இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியத்துவமானவை. புலாலி விமான நிலைய ஓடு பாதை உள்ளுர் தேவைகளுக்கும், பிராந்திய தேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளது. மற்றுமொரு பெரிய திட்டமாக வீடமைப்புத் திட்டம் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 6000 வீடுகள் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1000 வீடுகள் பூர்த்தியடையும். 


கடந்த ஜூலை 13ம் திகதி 43ஆயிரம் வீடுகள் அமைப்பதற்காக 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இது இவ்வருடத்திற்குள் பூர்த்தியடையும். அத்துடன் இந்த வருட இறுதிக்குள் வலுவற்றோருக்கான வீடமைப்புத்திட்டமாக 6000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
மூன்றாவது பகுதியாக வைத்தியசாலை அபிவிருத்தி. இது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அபிவருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டும் நிறைவடைந்தும் உள்ள நிலையில் தற்போது வவுனியா வைத்தியசாலையிலும் இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு வடமாகாணத்தின் நிர்வாகத்துறையினதும், இலங்கை அரசின் ஆதரவும் கிடைத்துள்ளது.


கல்வியைப் பொறுத்தவரை தெற்காசியாவுக்கு முன்னுதாரணமாக யாழ்ப்பாணம் இருந்தது. யுத்தம் முடிவடைந்த படியால் மீண்டும் அந்நிலைக்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
துணைவேந்தர் கூறியதைப் போல மிகவும் மகிழ்ச்சியாகவே இவ் வேலைத்திட்டங்களில் நாம் பங்கு கொள்கின்றோம்.
கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டோம். கிளிநொச்சியில் பொறியியல் பீடம் அமைக்க 600 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளோம். அத்துடன் விவசாய பீடமும் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.


இந்தியாவிலுள்ள முன்னணி நிறுவனங்களுடன் கட்டட அபிவிருத்திகள் மற்றும் வேறு சில அபிவிருத்திகள் தொடர்பாக உடன்பாடுகளை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கான முயற்சிகளை செய்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பாராட்டுகின்றேன்.
79 பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளன. இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றோம். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பயன்படுத்த வேண்டும்.
கலாசார தொடர்புகளை யாழில் மேற்கொள்வதற்கு ஆர்வமாகவுள்ளோம். அந்த வகையில் அப்துல்கலாம் இங்கு வருகைதந்திருந்தார். யாழில் காலாசார நிலையங்களை மீளமைக்கவுள்ளோம். இலங்கையில் உள்ள கட்டட நிர்மாணிகளுக்கிடையில் இடம் பெற்ற போட்டியில் முதல் இடத்தை பெற்றவரின் திட்டத்தின் படி இக்கட்டடம் அமையவுள்ளது.
நாங்கள் இப்போது திருக்கேதீஸ்வர கோவிலின் புனர்நிர்மாண வேலைகளுக்கு உதவி வழங்கவுள்ளோம். அந்த வேலைத்திட்டம் வருகின்ற மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


அச்சுவேலியில் சிறுகைத்தொழி;ல் முயற்சிகளில் பங்கேற்கவுள்ளோம். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆர்வமாகவுள்ளார்.
பொருளாதார முன்னேற்றம் பிராந்திய அடிப்படையில் வடமாகாணத்தில் வளர்ச்சியடைய வேண்டும். இது இந்தியாவுடன் தொடர்புபட்டது. குறிப்பாக தென்னிந்தியாவுடன் அதிகமாக தொடர்புபட்டது. கொழும்பில் இருந்து 100க்கு மேற்பட்ட கம்பனிகள் இவ் வேலைத்திட்டங்களில் ஈடுபடவிருக்கின்றன. இதற்கு காரணம் இங்கு பயன்படுத்தப்படாத வளங்கள் நிறையவுண்டு. 
நான் உறுதியாக நம்புகின்றேன். இலங்கைக்கு ஒளிமயமான எதிர்காலமுண்டு. அதிலும் யாழ்ப்பாணத்திற்கு ஒளிமயமான காலமுண்டு.
நான் உறுதியாக சொல்கின்றேன். 


இங்கு அபிவிருத்தி நன்றாக நடைபெறுகின்றது. ஒளிமயமான வாழ்விற்கு அபிவிருத்தி அவசியம். ஆனால் அபிவிருத்தி மட்டும் போதாது ஐக்கியமும் தேவை. அதற்கு எல்லோருக்கும் சமவுரிமை, சமபங்கு என்பன தேவை. இலங்கை ஒரு அழகான நாடு. முனித திறமையும் வளமும் மிக்க நாடு. இந்நாடு ஐக்கியமாக இருக்கும் போது தெற்காசியாவில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் சிறப்பான நாடாகவிருக்கும்.
இங்கு ஐக்கியம் உருவாவதற்கு LLRC சுற்றுக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் தீர்வுத்திட்டங்கள் இலங்கைச் சமூகத்தினாலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இம்மாநாடு முக்கியமானது. இந்தியா எல்லா உதவிகளையும் செய்யும். இந்தியா எவ்வாறு உதவ வேண்டும் என்பதெல்லாம் உங்கள் விருப்பம், உங்கள் முன்னுரிமை, உங்கள் தேவைப்படியே உள்ளது."



Jaffna university international research conference 20-21 july 2012.
S.P.thisanayaka – Minister, High Education.


இது வடக்கு கிழக்கில் மனித வள அபிவிருத்தியை ஏற்படுத்தும் ஒரு மாநாடு. இது யுத்தம் முடிவடைந்த சூழலில் இடம்பெறுகின்றது. சமூக பொருளாதார அபிவிருத்திக்கு மாத்திரமில்லாமல் அமைதிக்கும், சமூக வாழ்விற்கும் உரியதாகும். இது மனித வள அபிவிருத்தியிலும் பௌதீக முறையிலும் ஸ்தாபனங்களுக்கிடையிலான நல்லுறவிலும், ஸ்தாபனங்களை கட்டியெழுப்புவதிலும் உண்டாகின்றது.

விவசாயம், அடிப்படை விஞ்ஞானம், முகாமைத்துவம், சுகாதாரக் கல்வி, சமூக விஞ்ஞானம், தகவல் தொடர்பாடல், போன்ற துறைகளின் ஊடாக கடந்த கால பிரச்சனைகளையும் இன்றைய நாட்களின் சவால்களையும் பார்க்க வேண்டும். இது போன்று தனியார் துறையிலும் பொதுத்துறையிலும் மனித வள அபிவிருத்தி இந்த வெளிச்சத்தில் காணப்பட வேண்டும்.
ஊலக பொருளாதாரத்திற்கு ஏற்ப எமது அறிவை பெருக்க வேண்டும். இந்த மாநாட்டை கூட்டி சர்வதேச நிலைக்கு அறிவை வளர்ப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.


இன்றுள்ள உலகம் முன்னெப்போதும் இல்லாததை விட போட்டியானதாகும்.
இம் மாநாட்டை கூட்டியதற்காக துணைவேந்தர், சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு நான் நன்றியுடையவனாக உள்ளேன். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் எமது நாட்டைப் பற்றி அறிந்திருப்பார்கள் என நம்புகின்றேன்.
ஏல்லோருக்கும் என் நன்றி உரித்தாகட்டும்.


Jaffna university international research conference 20-21 july 2012.

Douglas devananda -Ministry of Traditional Industries and 
Small Enterprise Development

யாழ்ப்பாணப்ப பல்கலைக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட  சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டிலே நாங்கள் இன்று ஒன்று கூடியிருக்கிறோம். எங்கள் நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் முயற்சியில்  ஒரு படிக்கல்லா இந்த மாநாடு இருக்கும் என்று நம்புகிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இங்கு கூடி போருக்கு பின்னரான சூழ்;நிலையில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் முகம் கொடுக்கும் சவால்கள்  என்ற தலைப்பில் ஆராயவுள்ளீர்கள்.

நாங்கள் மிகப்பெரிய முரண்பாட்டில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறோம். 3 தசாப்பங்களுக்கு மேலாக எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக நாங்கள் பல்வேறு வழிகளில்  பாதிக்கப்பட்டுள்ளளோம்.

பெருமளவு மனித வளங்களை இழந்துள்ளோம், பாரிய இடப்பெயர்வுகளைச் சந்தித்தோம். உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். இவற்றை விட வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல இழப்புகளை நாங்கள் சந்தித்துள்ளோம். 

எங்கள் கண் முன்பாகவே பலர் செத்து வீழ்ந்ததை கானும் துர்பாக்கியம் எமக்கு வாய்ததது. தினந்தினம் எனது மக்கள் வாhத்தைகளால் வர்ணிக்க முடியாதளவு துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

நீடித்த போர் ஆயிரக்கணக்கான விதவைகளை, வலுவழந்தவர்களை உருவாக்கியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி அல்லலுறுவதற்கும் இந்தப் போர் காரணமாக இருந்தது.

இந்த வலிகளும் வேதனைகளும் இன்னனும் எங்கள் நெஞ்சைவி;ட்டு அகலவில்லை.

இன்று இத்தகைய நீடித்த அவலங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. காயங்கள் ஆறிக்ககொண்ட இருக்கின்றன. தற்போது மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழிகாட்டலுடன் அபிவிருத்தி மீள்கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருக்கின்றன.

விசேடமாக போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நாடுகள் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி வருகின்றன. குறிப்பாக எமது அயல் நாடான இந்திய மிகக் கூடிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாடு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல்கலைக்கழகம் கல்விச் செயற்பாட்டையும் தாண்டி தற்போதைய சூழல் மற்றும் தேவை குறித்து தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது.

மேலும்  போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் முகம் கொடுக்கும் சவால்கள் குறித்தும் ஆராய்வதற்கான முதற் படியை எடுத்து வைத்துள்ளது. விசேடமான மனித ஆற்றல் விருத்தி தொடர்பாக பாதையில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தக் காலத்தில் ஆற்றல் விருத்தி என்பது பாரம்பரியத்தையும் தாண்டி புதிய தொழில்நுட்பப் புரட்சியுடாக முன்னெடுக்கப்படுகிறது. உலகில் பல நாடுகள், ஆற்றல் விருத்தி சம்மந்தமான துறையை முன்னெடுப்பதற்க்கு உதவ தயாராக உள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது ஆற்றல் விருத்தி தொடர்பாக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட முனைந்திருப்பது நாட்டின் அபிவிருத்திக்ககு மிக முக்கிய பங்காற்றும்.

நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு தவறுகளை இழைத்துள்ளோம் எங்களினுடைய தமிழ் தலைவர்கள் உறுதியான சரியான முடிவுகளை மேற்கொள்ள தவறிவிட்டனர். உதாரணமாக 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உருவாக்க போவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் தமிழ் தலைவர்கள் குறிப்பாக தமிழர் ஐக்கிய முன்னணி இதiனை கடுமையாக எதிர்த்தது. அதற்க்கான காரணம் அவர்கள் குறிப்பிட்டது, பேரளவிலான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி தமிழ் மக்களை அரசு முட்டாளாக்க பார்ப்பதாக கூறினர்.

1974 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இதனை எதிர்த்து நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் முன்பாக இரண்டு நாள்; உண்ணா விரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக திறப்பு விழாவில் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களால் அதனை நிறுத்த முடியவில்லை. உள்ளுரில் தயார் செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றை யாழ் பல்கலைக்கழக முதலாவது துணைவேந்தர் கே. கைலாசபதி வீட்டின் மீது வீசி எறிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

தமிழ் தலைமைகளின் இந்த முடிவு தவறானது என வரலாறு தற்போது நிரூபித்துள்ளது. தற்போது குடா நாட்டின் மிக முக்கிய பங்கை யாழ் பல்கலைக்கழகம் வகிக்கின்றது. தங்களினுடைய திட்டங்களுக்கு ஏற்ப பல்கலைக்கழகத்தை நிறுவவில்லை என்பதனாலயே தமிழர் ஐக்கிய முன்ணனி இதனை எதிர்த்தது. இவ்வாறு தமிழ்த் தலமைகளால் எடுக்கப்பட்ட பல தவறான முடிவுகளால் கடந்தகாலங்கனளிலும் அண்மையிலும் தமிழ் சமுகம் பாரிய விலைகொடுக்க நேருட்டது.

நாங்கள் இந்த பாதையை பின்பற்றி செல்ல விரும்பவில்லை எங்களினுடைய பிரச்சினைகளை எந்தப் பாதை ஊhடாக தற்போது தீர்த்துக்கொள்ள முடியும் என்ற உண்மையை தமிழ் சமுகம் நன்றாக அறிந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு பல்கலைக்கழம் அமைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டதன் பலனை தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கின்றனர். இந்த ஒழுங்கை பின்பற்றியே எமது அரசியல் பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வு காண நினைக்கின்றோம். இனி மேலும் எமது பிரச்சினைகளுக் தீர்வு காண்பதற்க்கான வாய்ப்புக்களை இழந்து விட நாங்கள் தாயாராக இல்லை. இது தான் எங்கள் கட்சியின் கொள்ளை எங்கள் முன் உள்ள ஒவ்வொரு வாய்ப்புக்களையும் எமது சமுகத்தின் நன்மைக்காக சிறப்பாக பயன்படுத்தி கொள்ள விரும்புகின்றோம்.
அதற்காகவே 13 வது திருத்த சட்டத்தினை அமுல் செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அடுத்த கட்டமாக இந்த சட்டமூலத்தில் மேலதிக உரிமைகளை நாங்கள் வலியுறித்தி பெற முடியும். அதன் மூலமாக இறுதி அரசியல் தீர்வு ஒன்றை நாங்கள் அடைந்து கொள்ள முடியும். இறுதியாக இங்கே இருக்கின்ற விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உண்மையுடனும், உறுதியுடனும், மனிதாபிமானத்துடனும் சேவையாற்றுங்கள்.

உங்களுக்கு இருக்கின்ற அறிவை பயன்படுத்தி இந்த நாட்டை
 மீள கட்டியெளுப்ப உதவுங்கள். 


ஹோட்டலில் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடுகள் ஆரம்பமாகின. விவசாயம், பிரயோக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவம், கல்வி,  சுகாதாரம், மருத்துவ அறிவியல், தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,தூய அறிவியல், சமூக அறிவியல் ஆகிய துறைகளில் அறிஞர்களின் ஆய்வுகள்,கட்டுரைகள் என்பன இரண்டு நாள் மாநாட்டிலும் முன்வைக்கப்பட்டன.... 

Monday, April 30, 2012

யாழ்ப்பாண கள்ளு “மிச்சம் நல்லம்”

யாழ்ப்பாணம் என்பது இலங்கை தீவின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  பிராந்தியமாகும். இதனுடைய கலாசாரங்கள, பண்பாடுகள், வாழ்கை கோலங்கள் யாவையுமே மாறுபட்டவை இவையே இன்று வரைக்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை பேணி பாதுகாக்கின்றன. என்று கூறலாம்.

யாழ்ப்பாணம் என்றதுமே அதனுடை அடையாளமாக அடையாளப்படுத்தப்படுவது பனை வளமே. இந்த பனை வளத்த்;pல் இருந்து பெறப்படுவது கள்ளு. இதனுடைய முக்கியத்துவம் யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல தென் பகுதி மக்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் அதி முக்கியத்துவமிக்க பானமாக உள்ளது.


யாழ்ப்பாண குடா நாடு இப்போது ஒரு சுற்றுலா தளமாக மாறிக்கொண்டு வருகின்றது. பல இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த இடமாக மாறி விட்டது. யாழ்ப்பாணத்தின் தொன்மைகள், அதனுடைய அழகை, உணவு முறைகளை அனுபவ ரீதியாக அனுபவிப்பதற்க்கு நாள் தோறும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம்.




யாழ்ப்பாண காலநிலையென்பது எப்போதும் ஒரு வெப்பமான காலநிலை. அந்த வெப்பமான காலநிலையில் வெப்பத்தன்மையினை குறைப்பதற்க்கு கணிசமான தென்னிலங்கை உல்லாச பயணிகள், இந்த குடாநாட்டின் தனித்துவமிக்க பானமான கள்ளினையே நாடுகின்றனர்.

யாழ்ப்பாண கள்ளினை ஆய்வுரீதியாக உட்படுத்திய போது இது ஒரு மதுபான வகையினை சார்ந்தது அல்ல என்றும் ஆனால் இது ஒரு மென் பான வகையினை சார்ந்தது. என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.





யாழ்ப்பாண கள்ளு பற்றி கீரிமலை கூவில் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கூறும் போது…




1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் கீரிமலை கோவிலுக்கு வரும் உல்லாச பயணிகள் குறிப்பாக சிங்களவர்கள் இங்க வந்து கள்ளு வாங்கி குடிப்பாங்க அப்போதைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இந்த கூவில் கிராமம் தான் கள்ளுக்கு பிரபல்யம் வாய்ந்தது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் வருவாங்க. இதைவிட யாழ்ப்பாணத்தில இருக்கிற எல்லா இடத்தில இருந்து அந்தியோட்டி கிரியை செய்வதற்க்காக கிரீமலை கோவிலுக்கு வருபர்கள் இங்க வந்து கள்ளு குடிச்சிற்று தான் போவாங்க. அன்றைய காலப்பகுதியில் ஒரு போத்தல் கள்ளின் விலை 15 ரூபா தான். கூவில் கிராமத்தில 60 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தது எல்லாருமே சீவல் தொழில் தான் செய்வார்கள்.

இந்த தொழிலினை பரம்பரைத் தொழிலாக கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு தலமுறை கடந்து செய்யிறம் ஆனால் 1990 ஆண்டு இடம்பெயர்ததால் இப்ப இந்த கிராமத்தில சீவல் தொழில் செய்யுறது குறைஞ்சிட்டு. என்று கூறியதோடு, இந்த கிராமத்து கள்ளு ஏன் அதி சிறப்பு வாய்ந்தது என்றால் அல்லது மக்கள் ஏன் அதிகம் விரும்புறாங்க என்றா, கீரிமலை கடற்கரையின் மண் வள தன்மை. இதனால் கள்ளு அதிகம் பாணி தன்மை கொண்டது. இதன் காரமாண அதிகம் விரும்புறாங்க. இதை விட பனை மரம் சீவுறவங்களின் திறமை இந்த கள்ளின் ருசிக்கு காரணம்.
போட்டி போட்டுக்கொண்டு முந்தின காலத்தில பனை மரம் சீவுவம். ஒரு நாளைக்கு முப்பது மரம் ஏறுவம். நான் பதினேளு வயசில சீவல் தொழிலினை ஆரம்பிச்சனான். ஆரம்பத்தில நன்பர்களோடு சேர்தே பனை மரம் ஏற பழகிக் கொண்டனான்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில புகையிரதம் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது தபால் கொண்டு வருகின்ற வாடிக்கையாளர்களும் அடிக்கடி கள்ளு குடிக்க வருவார்கள்.

மாசி, ஆவணி காலப்பகுதியில் தான் அதிகளவு கள்ளு பனையில உற்பத்தியாகும். அந்த காலத்தில உற்பத்தி அதிகமாகிறதால வருமானமும் கூடும். என்று கூறினார்

யாழ்ப்பாண குடா நாட்டின் பரம்பரை தொழிலில் இதுவும் ஒன்று. ஆனால் குடாநாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் இந்த கள்ளு உற்பத்தியினை பார்த்து பிரம்மிப்பு அடைபவர்களும் இருக்கின்றார்கள். இருந்தும் இத்தொழிலினை செய்கின்ற சமுகத்தினை ஒரு வித்தியாசமான கண்னோட்டத்தில் பார்க்கின்ற வர்க்கமும் எங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு, இதற்கெல்லாம் சாதியக்கட்டமைப்பு யாழ்ப்பாணத்தோடு இன்னமும் ஒன்றிபோய் உள்ளதென்பது தெட்டதெளிவு.



யாழ்ப்பாண கள்ளின் ருசி பற்றி தென்னிலங்கை சுற்றுலா பயணி பஸ்னாயக்கா கூறும் போது…


எங்களுக்கு யாழ்பாணத்து மண்ணுமேல இருக்கிற விருப்பத்தை விட யாழ்ப்பாண கள்ளின் மேல தான் அதிக விருப்பம். “மிச்சம் நல்லம்”  தென் பகுதில இருக்கிற நம்மட ஆக்கள் வட பகுதி கள்ளினை தான் அதிகம் விரும்புவாங்க.இது ஒரு தனித்துவமான கள்ளு என்றாதால இதில ஒரு கொள்ளைப்பிரியம்.
அதனுடைய சுவையினை பாக்கணும் என்று தீராத ஆசை ரொம்ப நாளா எங்களுக்கு. அது தான் எங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டம். நாங்கள் வேலனை, கீரிமலை, தவறணைகளுக்கு போனால் முதலில கொஞ்சம் கள்ளினை எடுத்து ருசி பாப்பம் அதில கடுமையாக இனிப்பும் இருக்க கூடாது, கடுமையாக புளிப்பும் இருக்க கூடாது. அப்படி இருந்தா உடனும் வாங்கி குடிப்பம்.
எங்கட இடத்தில இருக்கிற கள்ளு இத்துள் கள்ளு அதில பெரிதாக நாட்டம் கொள்ளுறது இல்ல. எங்களுக்கு யாழ்ப்பாண கள்ளில எப்படி ஆசை வந்தது என்றா? பனங்கள்ளு குளிர்மையாக இருக்கும் அதோட உடம்பையும் குளிராக வைச்சிருக்கும் என்பதை அறிஞ்சு இங்க வந்தம். யாழ்ப்பாணத்துக்கு வந்தா சனி, ஞாயிறு தினங்களில் தான் கள்ளு தவறணைக்கு குடும்பத்தோட வருவம்.
எங்கட தென் பகுதியில இருக்கிற தென்னங்கள்ளு  உடம்புக்கு கூடாது. கித்துல்லா, இத்துல்லா  என்று இரண்டு வகையான கள்ளு இருக்கு அது கொஞ்சம் தான் தென் பகுதில இருக்கு. அதனால அதுக்கு தனித்துவம் இல்ல. ஆனா யாழ்ப்பாணத்தில அதிகம் பனை தானே இங்குள்ள கள்ளு குருதி சுற்றோட்டத்தை இயல்பாக இயைபாக்கம் அடைவதற்க்கு இது உதவியா இருக்கு. அதவிட நம்மட பசங்களுக்கு நாம இதை குடிக்க கொடுப்பம் ஏனென்றால் இதில மருத்துவ குணம் இருக்கு தானே. இதனால யாழ்ப்பாண கள்ளில அலாதி பிரியம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிகமாக பனை வளம் கொண்ட பிரதேசங்களாக ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு பிரதேசங்களே யாழ் அரச அதிபரினால் அடையாளப்படுத்தப்படுள்ளது. இதனை விட யாழ்ப்பாணத்தில் கள்ளிக்கு அதிக கிராக்கியினை கொண்டது கீரிமலையில் உள்ள “கூவில்” கிராமம். அத்தோடு ஊர்காவற்துறை, நெடுந்தீவு என்பனவும் கிராக்கியில் முன்னணியில் உள்ளன.
கள்ளு பனை மரத்தில் இருந்து எடுக்கும் முறை பற்றி வேலனையை சேர்ந்த சந்திரன் கூறுகையில்…

முதலில பனையினை பதப்படுத்துவம். பதப்படுத்திய பின்னர் அதில் இருந்து கள்ளு வருவதற்க்கு ஆறு நாட்கள் எடுக்கும். ஆறு நாட்களும் பாளையினை பதப்படுத்துகின்ற வேலை நடைபெறும். இதற்க்கு பிறகு பாளையில் இருந்து கள்ளு வர ஆரம்பிக்கும் அந்த கள்ளினை முற் கள்ளு என்று சொல்லுவம் ஆனா அதனை பாவனைக்கு எடுக்கிறது இல்ல. பிறகு பதப்படுத்திய பாளைக்கு முட்டி கட்டுவம். மறு நாள் காலையில ஒரு போத்தல் அல்லது இரண்டு போத்தல் கள்ளினை எடுக்க கூடியதாக இருக்கும். பின்னர் அதனை தவறனையில் கொண்டுவந்து விற்பனை செய்வம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழம் நடாத்திய ஆய்வில் காலையில் பனை மரத்தில் இருந்து இறக்குகின்ற கள்ளில் அற்ககோல் நொதிப்பு தன்மை காணப்படாது. இந் நிலையில் இக் கள்ளினை  மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் நன்பகல் 1.00 மணியினை தாண்டியவுடன் வளியின் தாக்கம் காரணமாக இக் கள்ளில் அற்ககோல் நொதிக்க ஆரம்பிக்கும். இவ் வேளை கள்ளினை வாங்கி குடிப்பவர்கள் அதனை அளவோடு பாவிப்பார்களானால் உடலுக்கு எத் தீங்கினையும் ஏற்படுத்ததாது.

ஆனால் அதிகமாக குடிக்கும் போது போதை நிலமைக்கு தள்ளிவிடும.; தை, மாசி, பங்குனி மாதங்களில் இந்த பனங்கள்ளு சீசன் களை கட்டும். கள்ளினை சண்டை போட்டு வாங்குகின்ற நிலமையினை ஒவ்வொரு கள்ளு தவறரணையிலையும் காணலாம். ஆனால் இதில் இன்னுமொரு வேடிக்கை என்ன வென்றால் யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டு வெள்ளை இனத்தவரும் குடா நாட்டு கள்ளினையும் ருசித்து பார்க்க தவறுவதில்லை.
யாழ் மாவட்டத்தினை பொறுத்த வரையில் அதிகமாக பல கீழ் மட்ட குடும்பங்களின் சுயதொழிலில் உழைப்பினை ஈட்டி கொள்வது. இந்த கள்ளு உற்பத்தி தான். என்று கூறிக் கொண்டாலும் யாழ்ப்பாண மண்ணின் தனித்துவத்தில் கள்ளின் செல்வாக்கு அதிகம்.

அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றி பிணைந்ததாக உள்ளது. இக் குடா நாட்டின் மூல வளமான பனை அதன் அடியில் இருந்து நுனி வரை அனைத்துமே பயனள்ள முடிவு பொருட்களாக கிடைக்கின்றன.
யாழ் மண்ணை பற்றியும், யாழ்ப்பாணத்தானை பற்றியும் இம் மண்ணை விட்டு போகும் போது நல்லதோர் அனுபவத்தினை பகிர்ந்து கொள்வதற்க்கு யாழ்ப்பாண கள்ளின் சுவையினையும் கூற மறக்கமாட்டார்கள்..