உலகத்தில் ஆங்காங்கு அரும்பொருட்காட்சிச் சாலைகளில் மட்டுமே தற்போது காணப்படும் மானிஸ்மைனர், கேம்பிறிச் இரக கார்கள் யாழ்ப்பாணத்தில் இன்னமும் போக்குவரத்தில் ஈடுபடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்.. யாழ்ப்பாணத்து மக்கள் பலர் இந்த வகைக் கார்களைக் கண்டு ஆச்சரியத்தில் வாய்பிளந்திருக்கலாம். ஆனால் பலருக்கு இது ஒரு ஆச்ரியமாகசேவ இருக்கிறது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கார்கள் இன்னமும் உள்ளனவா? அதுவும் யாழ்ப்பாணத்து வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனவா என்று புருவமுயர்த்தும் பலர் இன்னமும் இருக்கின்றனர்.
யாழ்ப்பாண போதன வைத்திய சாலையலக்கு முன்பாக நோயாளர்களை ஏற்றி இறக்கும் சவாரியில் இப்போதும் இந்த கார்கள் ஈடுபடுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிகாலத்திலேயே இந்த கார்களின் பயன்பாடு யாழ் மண்ணில் இருந்தது.
1960 ஆம் அண்டு இங்கிலாந்து தயாரிப்பான மானிஸ் மைனர் வகையினை சேர்ந்த காரினை வாங்கினேன். யாழ்ப்பாணத்தில் டக்ஸி சங்கம் இருந்த போது அதில் நூற்றிஐம்பது கார்கள் இருந்தன. ஆனா இப்ப இது குறைஞ்சு கொண்டு போச்சுது. என்று வேதனையுடன் கூறினார் நாகராச என்ற கார் சாரதி.
தற்போது அதிகளவான ஆட்டேக்கள் வந்ததற்க்கு பிறகு எங்களுக்கு உழைப்பு குறைஞ்சிற்று. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே உழைப்பு இருக்கும் ஓட்டோ சவாரிக்கு எவ்வளவு பணமோ அதே பணம் வாங்கிறம் அதவிட கூட வாங்கினால் எங்களுக்கு சவாரி நடக்காது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பழைய மொடல் கார் என்று பார்த்தவுடன் சவாரிக்கு வருவாங்க. ஆனா இதே காரினை வைச்சு இன்னும் ஐம்பது வருடம் ஓட முடியும் என கூறினார்.
கார் சவாரி பற்றிய தகவலினை மானிப்பாயை சேர்ந்த ஜெகதீசிடம் கேட்ட போது
நான் இந்த பழைய மொடல் காரினை வைச்சு இருபத்தைந்து வருடமாய் ஓடுறன். முன்ப யாழ்ப்பாணத்தில அதிகளவான கார்கள் இருந்தன ஆனா இப்ப பதினைந்து கார்கள் மாத்திரமே சவாரியில் ஈடுபடுவது இப்போதைய காலத்தில லீசிங்கில அதிகமாய் ஆட்டோக்ககள் வந்ததால யாருமே கார் பக்கம் வாராங்க இல்ல ஓட்டோ பக்கம் தான் போறாங்க அதோட அம்புலன்ஸ் வண்டிகளை யாழ்ப்பாண வைத்தியசாலையினர் ஒழுங்குபடுத்தி இருப்பதனால் யாருமே கார் சவாரி பக்கம் வருவதில்ல என்னுடைய கார் ஆரம்பத்தில பெற்றோல்ல தான் ஓடினது ஆனா இப்ப மண்ணென்ணையில் ஓடுறார்.
முன்பெல்லாம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு போறது என்றா இந்த காரினையே சவாரிக்கு பயன்படத்துறது ஆனா இப்ப யாழ்ப்பாணத்து ஆக்கள் காசதானே பாப்பாங்க இதனால அதிகமாய் காசுகுடுத்து சவாரி செய்வதை தான் விரும்புறாங்க. ஆனா உல்லாச பிரயானிகளுகம் வைத்திய சாலைக்கு போகின்ற பெண்களுமே தங்களின் வசதிக்காக இப்பவும் இந்த காரினை பயன்படத்துறாங்க. என்றார்
அந்தக் காலத்தில் இத்தகைய கார்கள் ஒரு நபரின் கௌரவச் சின்னமாக இருந்தது. ஆனால் இன்று இவற்றை வாய்பிளந்து வெடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் மக்கள். இத்தகைய பழைய ரக கார்களில் சவாரி செய்வதை கௌரவக் குறைவாகக் கூட இன்னும் பலர் பார்க்கின்றனர்.
ஆயினும் பல மில்லியன் பெறுமதியான புதிய ரக கார்கள் இருந்தாலும் யாழப்பாணம் வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வன இந்த வகை பழைய கார்களே…பழமையின் பெருமை தெரிந்தவர்கள் அவர்கள்..
ஆம்.. யாழ்ப்பாணத்து மக்கள் பலர் இந்த வகைக் கார்களைக் கண்டு ஆச்சரியத்தில் வாய்பிளந்திருக்கலாம். ஆனால் பலருக்கு இது ஒரு ஆச்ரியமாகசேவ இருக்கிறது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கார்கள் இன்னமும் உள்ளனவா? அதுவும் யாழ்ப்பாணத்து வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனவா என்று புருவமுயர்த்தும் பலர் இன்னமும் இருக்கின்றனர்.
யாழ்ப்பாண போதன வைத்திய சாலையலக்கு முன்பாக நோயாளர்களை ஏற்றி இறக்கும் சவாரியில் இப்போதும் இந்த கார்கள் ஈடுபடுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிகாலத்திலேயே இந்த கார்களின் பயன்பாடு யாழ் மண்ணில் இருந்தது.
1960 ஆம் அண்டு இங்கிலாந்து தயாரிப்பான மானிஸ் மைனர் வகையினை சேர்ந்த காரினை வாங்கினேன். யாழ்ப்பாணத்தில் டக்ஸி சங்கம் இருந்த போது அதில் நூற்றிஐம்பது கார்கள் இருந்தன. ஆனா இப்ப இது குறைஞ்சு கொண்டு போச்சுது. என்று வேதனையுடன் கூறினார் நாகராச என்ற கார் சாரதி.
தற்போது அதிகளவான ஆட்டேக்கள் வந்ததற்க்கு பிறகு எங்களுக்கு உழைப்பு குறைஞ்சிற்று. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே உழைப்பு இருக்கும் ஓட்டோ சவாரிக்கு எவ்வளவு பணமோ அதே பணம் வாங்கிறம் அதவிட கூட வாங்கினால் எங்களுக்கு சவாரி நடக்காது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பழைய மொடல் கார் என்று பார்த்தவுடன் சவாரிக்கு வருவாங்க. ஆனா இதே காரினை வைச்சு இன்னும் ஐம்பது வருடம் ஓட முடியும் என கூறினார்.
கார் சவாரி பற்றிய தகவலினை மானிப்பாயை சேர்ந்த ஜெகதீசிடம் கேட்ட போது
முன்பெல்லாம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு போறது என்றா இந்த காரினையே சவாரிக்கு பயன்படத்துறது ஆனா இப்ப யாழ்ப்பாணத்து ஆக்கள் காசதானே பாப்பாங்க இதனால அதிகமாய் காசுகுடுத்து சவாரி செய்வதை தான் விரும்புறாங்க. ஆனா உல்லாச பிரயானிகளுகம் வைத்திய சாலைக்கு போகின்ற பெண்களுமே தங்களின் வசதிக்காக இப்பவும் இந்த காரினை பயன்படத்துறாங்க. என்றார்
அந்தக் காலத்தில் இத்தகைய கார்கள் ஒரு நபரின் கௌரவச் சின்னமாக இருந்தது. ஆனால் இன்று இவற்றை வாய்பிளந்து வெடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் மக்கள். இத்தகைய பழைய ரக கார்களில் சவாரி செய்வதை கௌரவக் குறைவாகக் கூட இன்னும் பலர் பார்க்கின்றனர்.
ஆயினும் பல மில்லியன் பெறுமதியான புதிய ரக கார்கள் இருந்தாலும் யாழப்பாணம் வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வன இந்த வகை பழைய கார்களே…பழமையின் பெருமை தெரிந்தவர்கள் அவர்கள்..

No comments:
Post a Comment