Social Icons

Pages

Saturday, April 28, 2012

புண்பட்ட நெஞ்சினை புகைவிட்டால் ஆத்துமா???

புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது எமது சமுகத்திற்க்கு மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தினாலேயே பற்றிக்கொண்;டது. இதனால் இந்த தீய பழக்கத்தினை தவிர்ப்பதற்க்கான அறவழிகள் எமது பழைய இலக்கியங்களில் காணப்படவில்லை.

நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்க புதுப்புது கலாசாரங்களும் புரைபோட்டு ஓடிக்கொண்டு இருக்கின்றன. போதைப்பொருள் பாவனைகளும் இன்று மீதமாகி விட்டன. இதல் புகைப்பிடித்தல் மனித உயிரினத்துக்கு கேடுவிளைவிக்கும் பொருள் என்று யாவரும் தெரிந்ததே! ஆனால் இதனை புரிந்தும் புரியாமல் தவறு இழைக்கின்றார்களா? இம் மானிடர் என்று எண்ண தோண்றுகின்றது.
ஓவ்வெரு வருடமும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகின்றது. உலக வல்லரசுகளில் இருக்கின்ற புகையிலை பாவனையாளர்களுக்கு எதிரான நிறுவனங்கள் இன்றை வரைக்கும் பலமான எச்சரிக்கையினை விடுத்தவண்ணமுள்ளன. இதே போல் உலக சுகாதார ஸ்தாபனமாது புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு தொனிப்பொருளினை முன்வைத்து விழிப்புணர்வை முதன்மைப்படுத்துவதும் வழக்கம்.

இன்றைய சூழ்நிலையில் புகைப்பிடித்தலை தூண்டுவதற்க்காக கவர்சிகரமான ஆண்களையும், பெண்களையும் வைத்துக்கொண்டு சிகரட் கம்பனிகள் தங்களினுடைய சந்தை வாய்ப்பினை பெருக்கி கொள்ளுகின்றன. இன்றைய ஊடகங்கள் புகைத்தல் எதிர்ப்பு தினம் பற்றி வருடம் தோறும் 31 ஆம் திகதி புகைத்தல் தொடர்பான விளைவுகளையும் அது தொடர்பான விழிப்புணர்களையும் ஞாபகபடுத்திவிட்டு பின்னர் அதனை மறந்து விடுகின்றன்.

 புகைப்பிடிக்கும் பழக்கமானது ஒரு சமூக பின்டைவுக்கு முதற் காரணியாக இருந்தாலும். அதனை இன்றைய சமுதாயம் அது பற்றி அலட்டி கொள்ளாத தன்மையே இருக்கின்றது. மரணத்தினை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகைப்பழக்கம் இடண்டாவது இடத்தில் இருந்து தற்போது முதலாவது இடத்திற்க்கு முன்னேறி இருக்கின்றது.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் பற்றி கூறுகிறார்,

 யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியகாலநிதி சி.எஸ். யமுனானந்தா.

புகைப்பிடிப்பவரின் வாய் வெப்பத்தினால் கருகி செவ்விதழ் கருமையாக காணப்படும் நடத்தைகளில் மாற்றம் காணப்படும்.
சமூகத்தில் வன்முறை அதிகரிப்பதற்க்கு இந்த புகைப்பழக்கமே மறைமுக காரணியாக அமைந்து விடுகின்றது. ஏனைய போதைப்பொருள் பாவனைகளுக்கும் இது அடிப்படையாக அமைந்து விடுகின்றது.


எமது சுவாச சிற்றறைகள் 80 சதுர மீற்றர் பரப்பளவினை கொண்டுள்ளது. இது உயிர் வாழ்க்கைக்கு அத்தியவசியமான ஒட்சிசனை குருதிகலன்களுக்கு கொடுத்து காபனீர்ரொட்சையிட்டினை அகற்றுகின்றது. இதனை நெருப்பினால் சிதைக்கும் நபர்கள் தம் உயிர்களுக்கு தாமே கொள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை பலர் விரும்பி செய்கின்றார்கள் பலர் அதனை விலைகொடுத்து செய்கின்றனர். இதனால் வருகின்ற பொருளாதார விளைவினை விட நோயின் தாக்கமே அதிகமானது.

புகைப்பிடிப்பவர்களில் அரைவாசிப்பேர் இதனாலயே இறக்கின்றனர். சுவாசப்புற்று நோய், சுவாசப்பாதை புற்று நோய், சுவாசப்பை அழர்சி, இதய பலவீனம், மாரடைப்பு, பாரிசவாதம், காலுக்கு செல்லும் இரத்ததோட்டம் தடைப்படல், வாய்ப்புற்று நோய் களப்புற்று நோய், இரைப்புண், சிறுநீர்ப்பை புற்றுநோய், என பல நோய்கள் புகைப்பிடிப்பவருக்கும்,

புகைப்பிடிப்பவருக்கு அருகில் நின்று சுவாசிப்பவருக்கும் ஏற்படும். இதனை விட காசநோய் ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும். புகையிலையில் காணப்படும் 4000 வகையிலான இரசாயனப்பதார்களில் 60 வகையானவை புற்று நோய் ஏற்படுத்தும்; தன்னமை உடையன. புகைப்பிடிக்கும் பழக்கத்தினை விலக்கி கொண்டால் நாற்பத்தியெட்டு மணித்தியாலயத்தில் குருதியில் பெரும்பாலான காபன்மொனோட்சையிட்டும், நிக்கொட்டினும் இல்லாது போகும் என்கின்றார்.

புகைத்தலுக்கு அடிமையாகி இருக்கின்ற 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கூறுகையில்.

அண்மைக்காலமாக தான் இந்த பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனை இப்போது நிறுத்தி கொள்ள முடியாதநிலை காரணம் புகைப்பிடித்தால் தான் புத்துணர்சி கிடைக்கின்றது. நாளாந்தம் புகைப்பிடிப்பாற்க்கு 200 ரூபா செலவாகின்றது.

இதனை விட, சந்தோசமான நிகழ்வு என்றாலோ அல்லது துக்கமான நிகழ்வென்றாலோ எனக்கு அதிகமாக புகைப்பிடிபதிலேயே பிடிப்பாக இருக்கின்றது. ஆனால் இதன் முலம் ஆபத்து இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. இருந்தும் திருமணம் செய்தால் விவகாரத்து செய்யக் கூடாது என்ற நிலையே இந்த புகைப்பிடித்தல் பழக்கம் எனக்கு ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஒருவர் புகைப்பழக்கத்திற்க்கு உள்ளாகுவதற்க்கான சூழல் பற்றி வைத்தியர் கூறுகையில்.
ஏதுவான காரணிகள்

புகைப்பிடிக்கும்  நடத்தையில் இருந்து விடுபடுபட அதற்க்கு ஆளான உளச்சமூக காரணியை முதலில் ஆராயவேண்டும். சில குடும்பங்களில் பெற்ரோர், சகோரதர்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக காணப்படினின் பிள்ளைகளும் அப்பழக்கத்திற்க்கு ஆளாகுகின்றனர். புகைப்பிடித்தல் எவ்வாறு இருக்கும் என்ற ஆவால் சிறுவர்களை புகைப்பிடிக்க தூண்டுகின்றது. இதற்க்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளும், விளம்பரங்களில் வரும் காட்சிகளும் காரணமாக இருக்கின்றன.

நன்பர்களின் கூட்டு பலரின் புகைப்பிடிக்கும் பழக்கத்pனை தூண்டுகின்றது. பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள், ஒன்றாக தொழில் புரிவோர். அத்துடன் மரண வீடு, திருமண வீடு மற்றும் களியாட்டங்களின் போது இலவசமாக கிடைக்கின்ற சூழலே சிறுவர்களையும், இளைஞர்களையும் புகைப்பிடிக்க தூண்டுகின்ற காரணியாக அமைந்து விடுகின்றன. புகைப்பிடித்தல் தங்களுக்கொரு வேறுபட்ட சூழலினை ஏற்படுத்தி தருமென முரண்நோக்கில் இப்பழக்கத்தினை ஆரம்பிக்கின்றனர்.

 வேறு சிலர் தம்முடைய எல்லைகள் கடந்த சுதந்திரத்தினை புகைப்பழக்கம் மூலம் வரையறுக்க முயல்கின்றனர்.என்கின்றார் வைத்திய கலாநிதி சி.எஸ.யமுனானந்தா.


இன்றைய உலக ஒழுங்கில் அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள் புகைத்தல் காரணமாக பலியாகும் அபாயம் ஏற்படும் என உலக சுகாதார தாபனம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. புகைப்பழக்கத்தினால் பீடிக்க பட்டோருக்கு நூறு பேரில் ஐம்பது பேருக்கு புற்றுநோய் மற்றும் மாரடைப்பு காரணமாக இறக்கின்றனர் என உலக சுகாதார தாபனத்தின் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன் புகைத்தல் தொடர்பான ஒரு சமுகத்தினரிடையே காணப்படுகின்ற மாறுபட்ட சிந்தனைகள் பற்றி யமுனானந்தா அவர்கள் குறிப்பிடுகையில்
தவறான எண்ணங்கள்
பலர் புகைப்பிடிக்கும் போது பதகளிப்பு குறையும் என்கின்றார்கள். இது தவறானதும் எதிர்மறையானதுமான எண்ணக்கருவாகம். புகைப்பிடிப்பதால் பதகளிப்பு அதிகரித்து மேலும் மேலும் புகைப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள். இதனை விட புகைப்பிடிக்கும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அதுவும் முற்றிலும் தவறான சிந்தனையே. வேறு சிலர்  புகைப்பிடிப்பதால் மனம் ஆறுதல் அடைகின்றது என்பர் இதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிலர் புகைப்பிடிப்பதனால் சந்தோசமான மனநிலை அடையும் நம்பிக்கையில் புகைக்கின்றனர். இது ஒரு உளவியல் பிரமையாகும். இது திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரங்கள் என்பவற்றால் ஏற்பட்ட விளைவு ஆகும். உடல் ஆரோக்கியமான விளையாட்டு வீரர்களையோ, நடிகர்களையோ மையப்படுத்தி புகைத்தல் தொடர்பான விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன.

இதனை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கிரமம் தவறாது காட்சிபடுத்துகின்றனர். இதனை பார்த்து சாதாரண மனிதன் புகைத்தலினை செய்தால் தானும் அந்த நடிகனைப்போலவோ அல்லது விளையாட்டு வீரனை போலவோ சந்தோசம் அடையலாம் என்ற நிலை உருவாகுகின்றது. புகைப்பிடிப்பதனால் காசநோய் வருவதனையோ அல்லது புற்று நோய் ஏற்பட்டு அவதிப்படுவதனையோ புகைத்தலுடன் சேர்த்து காட்சிபடுத்தினால் மறுகணமே புகைத்தல் பற்றியதான மிகைப்படுத்தப்பட்ட எழுச்சி மறைந்து விடும். என்கின்றார் டாக்டர் யமுனானந்தா

இந்த புகைப்பழக்கம் இளைஞர்களை அல்லது சிறுவர்களை அதிகமாக பீடித்து கொள்வதற்க்கான காரணம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற தன்மையே. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதனுடைய தாக்கம் விரிந்திருக்கின்றது. என்றே கூறலாம் எல்லா கடைகளிலும் இதனை இலகுவாக பெறுகின்ற நிலையே இம்மாற்றத்திற்க்கு முக்கிய காரணம். முன்பு இருந்த எங்களின் சமூகத்திற்க்கும் இப்போது இருக்கின்ற சமூகத்திற்க்கும் பாரிய மாற்றங்கள் இருக்கின்றது. முந்தைய காலங்கிளல் ஒரு கட்டுப்போப்புடன் வாழ்ந்த எங்கள் சமூகம் அதாவது சிறுவர்கள் தங்களினுடைய தேவைகளை பூர்தி செய்ய பெரியவர்களை நாடுகின்ற தன்மையே இருந்தது. ஆனால் இன்றைய நிலமை அவ்வாறு இல்லை கைகளில் இலகுவாக பணம் கிடைப்பதனால் தங்களின் விருப்பங்களை தாங்களே நிறைவேற்றி கொள்கின்ற தன்மை இப்போது மாறிவிட்டது. இதனால் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்ற வேகம் அதிகரிக்கின்றது.

எனவே புகைப்பிடிப்பதனை சமூகத்தில் இருந்து முற்றாக தடுக்க விழிப்புனர்வு முக்கியமானது. இதில் ஊடகங்கள் முக்கிய பங்கினை வகிக்க வேண்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களில் புகைப்பிடித்தல் தொடர்பான காட்சிகளை தடைசெய்ய வேண்டும். இதனை விட கிராமங்கள், வேலைத்தளங்களில் இது பற்றியதான விளைவுகளை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தினை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்..

No comments: