யாழ்ப்பாண வைத்திய சாலையில் அதி நவீன வசதிகளுடன் சிறுவர்களுக்கான புற்று நோய் சிகிச்சை பிரிவை அமைக்கும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அயராத பங்களிப்போடு நாளைய சந்ததியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்க்கான நிதி பாரியளவில் தேவைப்பட்டதனால் இலங்கையின் முன்னனி ஆடை உற்பத்தி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளான நாதன்சிவகணநாதன், சதிந்த உடனம்பு அகியோர் களத்தில் இறங்கி இதற்க்கான முயற்சிகளை ஆரம்பித்தனர்.
இவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறாக 200 மில்லியன் அமரிக்க டொலர்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிதியினை இலக்காக கொண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்களை முன்னிலைப்படுத்தி மாபெரும் நடைப்பயணத்தின் மூலம் புற்று நோய் சிகிச்சை பிரிவு அமைப்பதற்க்காக நிதியினை திரட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஜீலை 1 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெய்வேந்திர முனையில் இருந்து 13 பேர் கொண்ட நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்த்தன, டில்சான், குமார் சங்கக்காரா, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோருடன் பிரபல குத்து சண்டை வீரர் மஞ்சு வனினியராட்சியும் இணைய இந்த நடைப்பயணம் மாகாணங்களும் மாவட்டங்களும் தாண்டி 25 ஆம் திகதி யாழ் நகரை வந்தடைந்தது. இந்த நடைபவனி பின்னர் 26 ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து சங்கக்காரா தலைமையில் ஆரம்பமாகி வல்லை சந்தியில் நிறைவடைந்தது. பின்னர் 27 ஆம் திகதி காலை தமது இறுதி இலக்கை நோக்கி இவ் வீரர்களும் ஏனைய வீரர்களும் புறப்பட்டு வட முனை பகுதியில் உள்ள பருத்தித்துறையின் பேதுறு வெளிச்சவீட்டு பகுதியை சென்றடைந்து நடைபவனியை நிறைவுக்கு கொண்டுவந்தனர். 27 நாட்கள் நடந்து 670 கிலோ மீற்றர் தூரத்தை கடந்தனர் இவ் வீரர்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த வீரர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அவர்களின் நடைப்பயணத்தில் இருபத்திரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 27 நாட்கள் கடந்த இந்த நடைப்பயணத்தில் 135 மில்லியன் ரூபா பணம் சேரிக்கப்பட்டது. இதில் இந்த நடைப்பயணம் பருத்தித்துறை செல்லும் வழியில் கரவெட்டி பிரதேச செயலர் நலன்புரிச்சங்கம் ஒரு லட்சம் ரூபாவினையும் பருத்தித்துறை பிரதேச செயலக உறுப்பினர்கள் ஐம்பதினாயிரம் ரூபாவினையும் அன்பளிப்பு செய்தனர். என்பது குறிப்பிடதக்கது.
670 கிலோ மீற்றர் தூரத்தை வெற்றிகரமாக கடந்து முடித்து நிதியினை சேகரித்த வீரர்களை கொளரவிக்கும் நிகழ்வு 27 ஆம் திகதி யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய 13 பேருதம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இதே நாளில் தெய்வேந்திர முனையில் இருந்து நடைபவனியில் எடுத்து வரப்பட்ட கட்டிடத்திற்க்கான அத்திவாரக்கல்லும் யாழ் போதனா வைத்திய சாலையில் நாட்டப்பட்டது.
இந் நடைபவனி பற்றி சங்கக்காரா தன் உள்ள பதிவை இப்படி சொல்லுகிறார்.”நானும் இந்த நடைப்பயணத்தில் பங்கெடுத்ததில் பெருமிதம் அடைகின்றேன் இதில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுத்ததன் மூலம் அதிகளவான நிதியை திரட்ட முடிந்தது. காரணம் இலங்கையில் பெரும்பாலான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட் தான். கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்றிய நாட்களில் அதிகளவான நிதி திரட்ப்பட்டது. மேலும் இந்த வைத்திய சாலை ஆரம்பிப்பதுடன் மட்டும் நின்று விடாது தொடர்ந்தும் இதனை கொண்டு நடத்த வேண்டும். ஏனைய பிரதேசங்களில் இந்த நடைப்பயணத்துக்கு கிடைத்த வரவேற்பை விட யாழ்ப்பாணத்தில் அதிகளவான வரவேற்பு கிடைத்தது எமக்கு. நான் முன்னர் வர்த்தக நோக்கிலான நிறுவனம் ஒன்றிக்காக யாழ்ப்பாணம் வந்தேன் தற்போது சமுக நலனுடைய ஒரு நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன் இவ்வாறான நிகழ்வு எனது வாழிவில் மறக்கமுடியாது”
மேலும் தன் உள்ள பதிவை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.” எனது துடுப்பு மட்டை மற்றும் உடைகள் உட்பட எமது அணியின் ஏனைய வீரர்களின் பொருட்களை புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்;க்கு ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளோம். இந்த நடைப்பயணம் இலங்கையில் மிக முக்கியமான ஒன்றாகும் இதில் அனைவரும் பங்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களின் கட்டியெளுப்ப முன்வர வேண்டும் என்றார்”
போர் நடைபெற்ற காலங்களில் சிகிச்சை பெறுவதற்க்காய் கொழும்பில் உள்ள மகரகம புற்றுநோய் வைத்திய சாலைக்கே சென்று எம் மக்கள் மிகுந்த கஸ்ரத்தினை எதிர்கொண்டனர். ஆனால் இந்த விசேட புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கும் திட்டத்தின் மூலம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மக்கள் யாழ் மத்திய வைத்திய சாலையை அணுகலாம் என்பது மகிழ்ச்சியே.








