Social Icons

Pages

Sunday, February 26, 2012

பாரத பயணம் தந்த பதிவுகள் (பதிவு – 01)

வலைபூக்கள் நன்பர்களுக்கு வணக்கம் நான் ஒரு ஊடகத்துறை மாணவன். நான் படித்த ஊடக கல்வியில் மேதிக அறிவையும், கல்வியையும் பெறும் நோக்குடன் இந்தியாவின் சென்னை பல்கலைக்கழக தொடர்பியல் மற்றும் இதழியல் துறை மாணவர்களுடன் பதினைந்து நாள் கொண்ட புத்தாக்க பயிற்சிக்காக இந்தியாவின் தமிழக தலைநகர் சென்னைக்கு சென்றேன். அங்கு பதினைந்து நாள் தங்கி இருந்து நான் பெற்ற ஊடக அறிவையும், அனுபவங்களையும் இதர பல சுவார்ஸ்ய சம்பவங்களையும், அங்கு நின்ற போது என் உணர்வுகளில் ஏற்பட்ட மாறுதல்களையும், என் மனம் வேதனைப்பட்ட நொடிப்பொளுதுகளையும் இப்பதிவின் ஊடே பகிர்ந்து கொள்கிறேன். இப்பதிவு யாரையும் காட்டி கொடுப்பதற்க்காகவே அல்லது அவர்களின் மனதினை நோகடிப்பதற்காகவே அல்ல. அடியேன் பெற்ற அனுபவத்தனை கூறுவதற்க்காக மட்டுமே….ஆனால் இதனுடன் சம்மந்த பட்டவர்களின் பெயர்களை கூறுவதை நான் தவிர்த்து கொள்கிறேன்.



                                                                     சென்னை பல்கலைக்கழகம்


வாழ்கையில் முதன் முதலில் சொற்ப நாட்களில் பழகி விட்டு பிரிந்து போனதை இப்போது நினைத்து பார்க்கின்றேன். பிறப்பில்லா தேசத்தில் இருந்து நானும் பிறந்த தேசத்தில் இருந்து அவர்களுமாக என்னையும் அவர்களையும் இணைத்து வைத்தது எது தமிழன் என்ற உணர்வு. அதில் தொப்புள் கொடி என்ற சொந்தம். சென்னையில் தங்கி இருந்த 15 நாட்கள்  எம் தமிழக சொந்தங்களோடு ஏற்பட்ட அழகிய அன்பு இன்னும் மறக்கமுடியவில்லை. அந்த 15 நாட்களும் ஒன்றாக கல்வி கற்று ஒன்றாக உணவுண்டு ஒன்றாக பிரயாணம் செய்து ஒன்றாக ஆடிப்பாடிய பொழுதுகள் எனக்கு எப்போதுமே இனித்திடும் சொர்க்கம் தான் ஆனாலும் இப்போது கடல் தாண்டிய தேசத்தில் இருந்து நினைத்து பார்க்கையில் மீண்டும் அந்த தருணம் வராதா என்ற ஏக்கம் குடிகொள்கிறது மனதில்.
அறிமுகம் இல்லாமல் பழகிய நன்பர்களுடன் நான் நெருக்கமாக பழகுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. அதிலும் கார்த்திக், ஸ்றீபன் நன்பர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் அளவில்லாத சந்தோசத்தை தந்தது. பேருந்து பயணத்தின் போது பல பொழுதுகளில் எங்களுக்குள் சம்பாசனைகள் சங்கமிக்கும் சம்பாசனைகள் பிறக்கின்ற போதெல்லாம் ஆரோக்கியமா பதில்களுடன் மௌனங்களும் பதிலாக வரும் பலவேளைகளில் சறுக்கிய வார்த்தைகளால் பிரதிவாதங்களும் பிறந்தன.



ஆம் எனது ஊடகத்துறை பயணங்களில் நான் பாரத தேசத்துக்கு பயணித்த கன்னி பயணம் இது. என் சிந்தனையில்; மாறுபட்ட புத்துனர்ச்சியினை ஏற்படுத்திய முதற் பயணம். ஊடகத்துறையில் மேலதிக கல்வியினையும் அனுபவத்தினையும் பெறும் நோக்கில் ஊடத்துறை மாணவர்கள் இந்தியாவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர். நானும் அதில் இணைந்து கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.
இந்த பயணம் எங்களுக்கு பல அனுபவங்களை தந்து சென்றது. இது முழுமையாக நடைபெற்று நிறைவுறுவதற்க்கு இதற்கு பின்னால் உழைத்தவர்கள் பலர். ஓவ்வொரு மாணவர்களும் தங்களின் தனிப்பட்ட ஆளுமையை விருத்தி செய்வதற்க்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகமும், சுவீடன் நாட்டு போஜோ நிறுவனம், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய இயக்குனர் திரு. தேவானந், சென்னை பல்கலைக்கழமும், சென்னை பல்கலைக்கழக  தொடர்பியல் மற்றும் இதழியல் துறை தலைவர் திரு. இரவீந்திரன், மற்றும் சென்னை பல்கலைக்கழக தொடர்பியல் மற்றும் இதழியல் துறை மாணவர்களும் தங்களை எங்களுக்காக அயராது அர்ப்பணித்தவர்கள்.

சரி நன்பர்களே! வாங்க போலாம் இதோ என்னுடைய அனுபவம் ஆரம்பம் ஆகின்றது…..

முதல் நாள் பயணம் (16.10.2011)


 யாழ்ப்பாண பல்கலைக்கழககழத்தில்(MRTC); காலை 8.30 மணி  அளவில் நாங் கள் எல்லோரும்  ஒன்று கூடினோம். எல்லா சக நன்பர்களும்   பரபரப்பாக இருந்தனர் நானும் கூட அப்படித்தான். நானும் என் பயண பொதியினை அடிக்கடி சரி பார்த்தேன் ஏதாச்சும் MISS பண்ணிறேனோ என்று. ஏனென்றால் என்னுடைய முதல் வெளிநாட்டு பயணம் இது. பின்னர் 9.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் ஞா.ஞானகுமாரன் அவர்கள் எமது பயணம் தொடர்பான அறிவித்திலினையும் ஆலோசனையினையம் வழங்கினார். அதில் மிக முக்கியமானது.இது ஒரு சுற்றுலா பயணம் என்பது கிடையாது இது உங்கள் ஊடக கல்வியின் ஓர் அங்கம் என்றும், நித்திரைக்கு செல்லாமல் அதிக நேரம் விழித்திருந்து உங்களுக்கு தரப்படுகின்ற றிப்போட்களை செங்து முடிக்க வேண்டிய கடப்பாடு உங்களுக்கு இருக்கு அதனால உங்களின் உடல்நிலையினை பாதுகாக்க வேண்டிய பொறுப்புனர்வு உங்களிடம் தான் என்றும், பல்கலைக்கழத்தின் பெயர் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது இவையாவற்றையும் மனசில வைச்சு கொண்டு, அங்கிருந்து 12.15 மணிக்கு பஸ்சில் ஏறி எமது பயணத்தினை ஆரம்பிச்சோம். இடையில் மதிய உணவினையும் முடித்துக்கொண்டு முறிகண்டி பிள்ளையார் கோவிலையும் கும்புட்டு கொண்டு எங்கட  பயணம் தொடர்ந்திச்சு.  எங்களுக்கு பொறுப்பாக வந்த சேர் நமக்கு அட்வைஸ் மேல அட்வைஸ் சொல்லுறார் அந்த ரைம் நான் அவர்கிட்ட பேச்சு வாங்கிற்றன்.


 எனக்கு பஸ்சுக்குள்ளேயே சனியன் புடிச்ச மாதிரி இருந்திச்சு. சரி எல்லாத்தையும் சமாளிச்சு கொண்டு போவம் எண்டு என்னை நான் சுதாகரித்து கொண்டேன். பஸ்சுக்குள்ள ஆட்டம் பாட்டத்துக்கு குறைவில்ல ஆனாலும் எல்லா ப்ரென்ஸ்சும் என்ஜோய் பண்ற மாதிரி தெரியல அவர்களின் மனதில் ஏதோ ஒன்று ஆட்டி படைக்கிறது என்று என்னால் ஊகிக்க முடிந்தது. இதற்க்கு காரணம் ஒரு நன்பன் சொன்னான் இதற்க்கு முதல் கொழும்புக்கு புத்தாக்க பயிற்சிக்காக போனபோது வந்த சந்தோசம் இப்ப இல்ல மச்சான் என்றான். அவன் எத மனசில வைச்சு சொல்லுகிறான் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்.

ஆனா ஒரு சில பேர் ரொம்ப சந்தோசமா ஆடிற்று வந்தம் இடையில் நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. இரவு 10.30  இருக்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தம் அடுத்த நாள் விடியற்காலை தான் எங்களுக்கு FLIGHT இரவு பொழுதினை விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் கழிக்க வேண்டிய தேவை இருந்தது. என் நன்பன் ஜனாவும் நானும் எப்பவுமே ஒன்றாக தான் இருப்பம் அவனுக்கு இந்த இந்திய பயணம் திடீரென நிச்சயிக்க பட்ட பயணம் அதற்கு என்ன காரணம் என்று சொல்ல போனால் இவன் சில காலம் ஊடக கற்கையில்  ஒழுங்கில்லாமல் இருந்தான். இதனால் அப்பப்ப பேச்சு வாங்குவான் சேர்கிட்ட. அந்த நடு நிசியிலும் பேச்சு வாங்கிற்றான் அவனோட சேர்த்து எனக்கும் தான். நமக்கு தானே எல்லாம் பழகிப்போச்சு என்றாகிற்று அவன் FEEL பண்ண ஆரம்பிச்சிட்டான்.

நேரம் 11.00 மணியை தாண்டிக் கொண்டு இருந்தது. நான் ஒரு மரத்தின் கீழே அமர்ந்து இருந்தன். அரிகரன் என்ற என் நன்பன் ஒருத்தன் வந்தான் யாரோ அவனை பேசி இருக்கணும் என்று நினைச்சன். அது நிஜமாய் போச்சு. அந்த ஆதங்கத்தால் தன் காதல் கதையினை என்கிட்ட போட்டு உடைத்தான் அடுத்தவனின் காதல் கதையினை கேட்கிறதில எனக்கொரு ஆர்வகோளாறு. ஒவ்வொன்றையும் அடுக்கி,அடுக்கி சொல்லி கொண்டிருந்தான் இவன் கதையை கேட்டதுமே  சேர் எனக்கு பேசியது மறந்தே போச்சு.

இத்தனைக்கும் நேரம் 1.00 மணியை தாண்டி விட்டது. தூக்கமே இல்ல ஆனா எப்படி நேரம் போச்சுதோ என்று தெரியல.

இரண்டாம் நாள் பயணம் (17.10.2011)
                                      கட்டுநாயக்கா விமான நிலையத்தில் காலை 7.00 17.10.2011

அதிகாலை 4.00 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலைய BORDING PASS க்குள் சென்றுவிட்டோம். விமான நிலையத்தில் இடம்பெற்ற பல சோதனைகளை கடந்து வந்தம் 7.25 மணிக்கு FLIGHT . அது வரைக்கும் என்ன பேசுறது என்று எனக்கு தெரியல.விமானத்தில் ஏறினோம். வுpமானத்தில் ஏறியதும் என்ன பேசுறது என்று தெரியல நன்பர்களின் முகத்தை மாறி மாறி பார்த்து சிரித்தது தான் மிச்சம். சுரியாக  8.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்து இறங்கியாச்சு. இறங்கியதும் நான் சொன்னேன் “வணக்கம் சிங்கார சென்னை” என்று அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அந்த நொடி பொழுதில் நான் ஒரு வேற்று தேசத்தில் நின்றுகொண்டு இருக்கின்றேன் என்ற உணர்வு எனக்கு தோன்ற வில்லை என் தாய் தேசத்தில் நிற்பது போன்ற உணர்வு எனக்குள் பரிணமித்தது. சென்னையில் நான் கால் தடம் பதித்ததும் என் செவிக்கு எட்டிய முதல் ஒலி “பயணிகளின் கவனத்திற்க்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து….” என்ற ஒலியே….
சரி நன்பர்களே என்னுடைய பயண அனுபவம் தொடரும்..............

Thursday, February 23, 2012

பழமையிலும் ஒரு புதுமை யாழ் மண்ணில் உலாவும் கார்கள்

உலகத்தில் ஆங்காங்கு அரும்பொருட்காட்சிச் சாலைகளில் மட்டுமே தற்போது காணப்படும் மானிஸ்மைனர், கேம்பிறிச் இரக கார்கள் யாழ்ப்பாணத்தில் இன்னமும் போக்குவரத்தில் ஈடுபடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்.. யாழ்ப்பாணத்து மக்கள் பலர் இந்த வகைக் கார்களைக் கண்டு ஆச்சரியத்தில் வாய்பிளந்திருக்கலாம். ஆனால் பலருக்கு இது ஒரு ஆச்ரியமாகசேவ இருக்கிறது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கார்கள் இன்னமும் உள்ளனவா? அதுவும் யாழ்ப்பாணத்து வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனவா என்று புருவமுயர்த்தும் பலர் இன்னமும் இருக்கின்றனர்.

யாழ்ப்பாண போதன வைத்திய சாலையலக்கு முன்பாக நோயாளர்களை ஏற்றி இறக்கும் சவாரியில் இப்போதும் இந்த கார்கள் ஈடுபடுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிகாலத்திலேயே  இந்த கார்களின் பயன்பாடு  யாழ் மண்ணில் இருந்தது.



1960 ஆம் அண்டு இங்கிலாந்து தயாரிப்பான மானிஸ் மைனர் வகையினை சேர்ந்த காரினை வாங்கினேன். யாழ்ப்பாணத்தில் டக்ஸி சங்கம் இருந்த போது அதில் நூற்றிஐம்பது கார்கள் இருந்தன. ஆனா இப்ப இது குறைஞ்சு கொண்டு போச்சுது. என்று வேதனையுடன் கூறினார் நாகராச என்ற கார் சாரதி.






தற்போது அதிகளவான ஆட்டேக்கள் வந்ததற்க்கு பிறகு எங்களுக்கு உழைப்பு குறைஞ்சிற்று. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே உழைப்பு இருக்கும் ஓட்டோ சவாரிக்கு எவ்வளவு பணமோ அதே பணம் வாங்கிறம் அதவிட கூட வாங்கினால் எங்களுக்கு சவாரி நடக்காது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பழைய மொடல் கார் என்று பார்த்தவுடன் சவாரிக்கு வருவாங்க. ஆனா இதே காரினை வைச்சு இன்னும் ஐம்பது வருடம் ஓட முடியும் என கூறினார்.
கார் சவாரி பற்றிய தகவலினை மானிப்பாயை சேர்ந்த ஜெகதீசிடம் கேட்ட போது


நான் இந்த பழைய மொடல் காரினை வைச்சு இருபத்தைந்து வருடமாய் ஓடுறன். முன்ப யாழ்ப்பாணத்தில அதிகளவான கார்கள் இருந்தன ஆனா இப்ப பதினைந்து கார்கள் மாத்திரமே சவாரியில் ஈடுபடுவது இப்போதைய காலத்தில லீசிங்கில அதிகமாய் ஆட்டோக்ககள் வந்ததால யாருமே கார் பக்கம் வாராங்க இல்ல ஓட்டோ பக்கம் தான் போறாங்க அதோட அம்புலன்ஸ் வண்டிகளை யாழ்ப்பாண வைத்தியசாலையினர் ஒழுங்குபடுத்தி இருப்பதனால் யாருமே கார் சவாரி பக்கம் வருவதில்ல என்னுடைய கார் ஆரம்பத்தில பெற்றோல்ல தான் ஓடினது ஆனா இப்ப மண்ணென்ணையில் ஓடுறார்.
முன்பெல்லாம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு போறது என்றா இந்த காரினையே சவாரிக்கு பயன்படத்துறது ஆனா இப்ப யாழ்ப்பாணத்து ஆக்கள் காசதானே பாப்பாங்க இதனால அதிகமாய் காசுகுடுத்து சவாரி செய்வதை தான் விரும்புறாங்க. ஆனா உல்லாச பிரயானிகளுகம் வைத்திய சாலைக்கு போகின்ற பெண்களுமே தங்களின் வசதிக்காக இப்பவும் இந்த காரினை பயன்படத்துறாங்க. என்றார்

அந்தக் காலத்தில் இத்தகைய கார்கள் ஒரு நபரின்  கௌரவச் சின்னமாக இருந்தது. ஆனால் இன்று இவற்றை வாய்பிளந்து வெடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் மக்கள். இத்தகைய பழைய ரக கார்களில் சவாரி செய்வதை கௌரவக் குறைவாகக் கூட இன்னும் பலர் பார்க்கின்றனர்.
ஆயினும் பல மில்லியன் பெறுமதியான புதிய ரக கார்கள் இருந்தாலும் யாழப்பாணம் வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வன இந்த வகை பழைய கார்களே…பழமையின் பெருமை தெரிந்தவர்கள் அவர்கள்..