Social Icons

Pages

Monday, April 30, 2012

யாழ்ப்பாண கள்ளு “மிச்சம் நல்லம்”

யாழ்ப்பாணம் என்பது இலங்கை தீவின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  பிராந்தியமாகும். இதனுடைய கலாசாரங்கள, பண்பாடுகள், வாழ்கை கோலங்கள் யாவையுமே மாறுபட்டவை இவையே இன்று வரைக்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை பேணி பாதுகாக்கின்றன. என்று கூறலாம்.

யாழ்ப்பாணம் என்றதுமே அதனுடை அடையாளமாக அடையாளப்படுத்தப்படுவது பனை வளமே. இந்த பனை வளத்த்;pல் இருந்து பெறப்படுவது கள்ளு. இதனுடைய முக்கியத்துவம் யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல தென் பகுதி மக்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் அதி முக்கியத்துவமிக்க பானமாக உள்ளது.


யாழ்ப்பாண குடா நாடு இப்போது ஒரு சுற்றுலா தளமாக மாறிக்கொண்டு வருகின்றது. பல இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த இடமாக மாறி விட்டது. யாழ்ப்பாணத்தின் தொன்மைகள், அதனுடைய அழகை, உணவு முறைகளை அனுபவ ரீதியாக அனுபவிப்பதற்க்கு நாள் தோறும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம்.




யாழ்ப்பாண காலநிலையென்பது எப்போதும் ஒரு வெப்பமான காலநிலை. அந்த வெப்பமான காலநிலையில் வெப்பத்தன்மையினை குறைப்பதற்க்கு கணிசமான தென்னிலங்கை உல்லாச பயணிகள், இந்த குடாநாட்டின் தனித்துவமிக்க பானமான கள்ளினையே நாடுகின்றனர்.

யாழ்ப்பாண கள்ளினை ஆய்வுரீதியாக உட்படுத்திய போது இது ஒரு மதுபான வகையினை சார்ந்தது அல்ல என்றும் ஆனால் இது ஒரு மென் பான வகையினை சார்ந்தது. என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.





யாழ்ப்பாண கள்ளு பற்றி கீரிமலை கூவில் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கூறும் போது…




1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் கீரிமலை கோவிலுக்கு வரும் உல்லாச பயணிகள் குறிப்பாக சிங்களவர்கள் இங்க வந்து கள்ளு வாங்கி குடிப்பாங்க அப்போதைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இந்த கூவில் கிராமம் தான் கள்ளுக்கு பிரபல்யம் வாய்ந்தது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் வருவாங்க. இதைவிட யாழ்ப்பாணத்தில இருக்கிற எல்லா இடத்தில இருந்து அந்தியோட்டி கிரியை செய்வதற்க்காக கிரீமலை கோவிலுக்கு வருபர்கள் இங்க வந்து கள்ளு குடிச்சிற்று தான் போவாங்க. அன்றைய காலப்பகுதியில் ஒரு போத்தல் கள்ளின் விலை 15 ரூபா தான். கூவில் கிராமத்தில 60 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தது எல்லாருமே சீவல் தொழில் தான் செய்வார்கள்.

இந்த தொழிலினை பரம்பரைத் தொழிலாக கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு தலமுறை கடந்து செய்யிறம் ஆனால் 1990 ஆண்டு இடம்பெயர்ததால் இப்ப இந்த கிராமத்தில சீவல் தொழில் செய்யுறது குறைஞ்சிட்டு. என்று கூறியதோடு, இந்த கிராமத்து கள்ளு ஏன் அதி சிறப்பு வாய்ந்தது என்றால் அல்லது மக்கள் ஏன் அதிகம் விரும்புறாங்க என்றா, கீரிமலை கடற்கரையின் மண் வள தன்மை. இதனால் கள்ளு அதிகம் பாணி தன்மை கொண்டது. இதன் காரமாண அதிகம் விரும்புறாங்க. இதை விட பனை மரம் சீவுறவங்களின் திறமை இந்த கள்ளின் ருசிக்கு காரணம்.
போட்டி போட்டுக்கொண்டு முந்தின காலத்தில பனை மரம் சீவுவம். ஒரு நாளைக்கு முப்பது மரம் ஏறுவம். நான் பதினேளு வயசில சீவல் தொழிலினை ஆரம்பிச்சனான். ஆரம்பத்தில நன்பர்களோடு சேர்தே பனை மரம் ஏற பழகிக் கொண்டனான்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில புகையிரதம் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது தபால் கொண்டு வருகின்ற வாடிக்கையாளர்களும் அடிக்கடி கள்ளு குடிக்க வருவார்கள்.

மாசி, ஆவணி காலப்பகுதியில் தான் அதிகளவு கள்ளு பனையில உற்பத்தியாகும். அந்த காலத்தில உற்பத்தி அதிகமாகிறதால வருமானமும் கூடும். என்று கூறினார்

யாழ்ப்பாண குடா நாட்டின் பரம்பரை தொழிலில் இதுவும் ஒன்று. ஆனால் குடாநாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் இந்த கள்ளு உற்பத்தியினை பார்த்து பிரம்மிப்பு அடைபவர்களும் இருக்கின்றார்கள். இருந்தும் இத்தொழிலினை செய்கின்ற சமுகத்தினை ஒரு வித்தியாசமான கண்னோட்டத்தில் பார்க்கின்ற வர்க்கமும் எங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு, இதற்கெல்லாம் சாதியக்கட்டமைப்பு யாழ்ப்பாணத்தோடு இன்னமும் ஒன்றிபோய் உள்ளதென்பது தெட்டதெளிவு.



யாழ்ப்பாண கள்ளின் ருசி பற்றி தென்னிலங்கை சுற்றுலா பயணி பஸ்னாயக்கா கூறும் போது…


எங்களுக்கு யாழ்பாணத்து மண்ணுமேல இருக்கிற விருப்பத்தை விட யாழ்ப்பாண கள்ளின் மேல தான் அதிக விருப்பம். “மிச்சம் நல்லம்”  தென் பகுதில இருக்கிற நம்மட ஆக்கள் வட பகுதி கள்ளினை தான் அதிகம் விரும்புவாங்க.இது ஒரு தனித்துவமான கள்ளு என்றாதால இதில ஒரு கொள்ளைப்பிரியம்.
அதனுடைய சுவையினை பாக்கணும் என்று தீராத ஆசை ரொம்ப நாளா எங்களுக்கு. அது தான் எங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டம். நாங்கள் வேலனை, கீரிமலை, தவறணைகளுக்கு போனால் முதலில கொஞ்சம் கள்ளினை எடுத்து ருசி பாப்பம் அதில கடுமையாக இனிப்பும் இருக்க கூடாது, கடுமையாக புளிப்பும் இருக்க கூடாது. அப்படி இருந்தா உடனும் வாங்கி குடிப்பம்.
எங்கட இடத்தில இருக்கிற கள்ளு இத்துள் கள்ளு அதில பெரிதாக நாட்டம் கொள்ளுறது இல்ல. எங்களுக்கு யாழ்ப்பாண கள்ளில எப்படி ஆசை வந்தது என்றா? பனங்கள்ளு குளிர்மையாக இருக்கும் அதோட உடம்பையும் குளிராக வைச்சிருக்கும் என்பதை அறிஞ்சு இங்க வந்தம். யாழ்ப்பாணத்துக்கு வந்தா சனி, ஞாயிறு தினங்களில் தான் கள்ளு தவறணைக்கு குடும்பத்தோட வருவம்.
எங்கட தென் பகுதியில இருக்கிற தென்னங்கள்ளு  உடம்புக்கு கூடாது. கித்துல்லா, இத்துல்லா  என்று இரண்டு வகையான கள்ளு இருக்கு அது கொஞ்சம் தான் தென் பகுதில இருக்கு. அதனால அதுக்கு தனித்துவம் இல்ல. ஆனா யாழ்ப்பாணத்தில அதிகம் பனை தானே இங்குள்ள கள்ளு குருதி சுற்றோட்டத்தை இயல்பாக இயைபாக்கம் அடைவதற்க்கு இது உதவியா இருக்கு. அதவிட நம்மட பசங்களுக்கு நாம இதை குடிக்க கொடுப்பம் ஏனென்றால் இதில மருத்துவ குணம் இருக்கு தானே. இதனால யாழ்ப்பாண கள்ளில அலாதி பிரியம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிகமாக பனை வளம் கொண்ட பிரதேசங்களாக ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு பிரதேசங்களே யாழ் அரச அதிபரினால் அடையாளப்படுத்தப்படுள்ளது. இதனை விட யாழ்ப்பாணத்தில் கள்ளிக்கு அதிக கிராக்கியினை கொண்டது கீரிமலையில் உள்ள “கூவில்” கிராமம். அத்தோடு ஊர்காவற்துறை, நெடுந்தீவு என்பனவும் கிராக்கியில் முன்னணியில் உள்ளன.
கள்ளு பனை மரத்தில் இருந்து எடுக்கும் முறை பற்றி வேலனையை சேர்ந்த சந்திரன் கூறுகையில்…

முதலில பனையினை பதப்படுத்துவம். பதப்படுத்திய பின்னர் அதில் இருந்து கள்ளு வருவதற்க்கு ஆறு நாட்கள் எடுக்கும். ஆறு நாட்களும் பாளையினை பதப்படுத்துகின்ற வேலை நடைபெறும். இதற்க்கு பிறகு பாளையில் இருந்து கள்ளு வர ஆரம்பிக்கும் அந்த கள்ளினை முற் கள்ளு என்று சொல்லுவம் ஆனா அதனை பாவனைக்கு எடுக்கிறது இல்ல. பிறகு பதப்படுத்திய பாளைக்கு முட்டி கட்டுவம். மறு நாள் காலையில ஒரு போத்தல் அல்லது இரண்டு போத்தல் கள்ளினை எடுக்க கூடியதாக இருக்கும். பின்னர் அதனை தவறனையில் கொண்டுவந்து விற்பனை செய்வம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழம் நடாத்திய ஆய்வில் காலையில் பனை மரத்தில் இருந்து இறக்குகின்ற கள்ளில் அற்ககோல் நொதிப்பு தன்மை காணப்படாது. இந் நிலையில் இக் கள்ளினை  மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் நன்பகல் 1.00 மணியினை தாண்டியவுடன் வளியின் தாக்கம் காரணமாக இக் கள்ளில் அற்ககோல் நொதிக்க ஆரம்பிக்கும். இவ் வேளை கள்ளினை வாங்கி குடிப்பவர்கள் அதனை அளவோடு பாவிப்பார்களானால் உடலுக்கு எத் தீங்கினையும் ஏற்படுத்ததாது.

ஆனால் அதிகமாக குடிக்கும் போது போதை நிலமைக்கு தள்ளிவிடும.; தை, மாசி, பங்குனி மாதங்களில் இந்த பனங்கள்ளு சீசன் களை கட்டும். கள்ளினை சண்டை போட்டு வாங்குகின்ற நிலமையினை ஒவ்வொரு கள்ளு தவறரணையிலையும் காணலாம். ஆனால் இதில் இன்னுமொரு வேடிக்கை என்ன வென்றால் யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டு வெள்ளை இனத்தவரும் குடா நாட்டு கள்ளினையும் ருசித்து பார்க்க தவறுவதில்லை.
யாழ் மாவட்டத்தினை பொறுத்த வரையில் அதிகமாக பல கீழ் மட்ட குடும்பங்களின் சுயதொழிலில் உழைப்பினை ஈட்டி கொள்வது. இந்த கள்ளு உற்பத்தி தான். என்று கூறிக் கொண்டாலும் யாழ்ப்பாண மண்ணின் தனித்துவத்தில் கள்ளின் செல்வாக்கு அதிகம்.

அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றி பிணைந்ததாக உள்ளது. இக் குடா நாட்டின் மூல வளமான பனை அதன் அடியில் இருந்து நுனி வரை அனைத்துமே பயனள்ள முடிவு பொருட்களாக கிடைக்கின்றன.
யாழ் மண்ணை பற்றியும், யாழ்ப்பாணத்தானை பற்றியும் இம் மண்ணை விட்டு போகும் போது நல்லதோர் அனுபவத்தினை பகிர்ந்து கொள்வதற்க்கு யாழ்ப்பாண கள்ளின் சுவையினையும் கூற மறக்கமாட்டார்கள்..

Saturday, April 28, 2012

புண்பட்ட நெஞ்சினை புகைவிட்டால் ஆத்துமா???

புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது எமது சமுகத்திற்க்கு மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தினாலேயே பற்றிக்கொண்;டது. இதனால் இந்த தீய பழக்கத்தினை தவிர்ப்பதற்க்கான அறவழிகள் எமது பழைய இலக்கியங்களில் காணப்படவில்லை.

நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்க புதுப்புது கலாசாரங்களும் புரைபோட்டு ஓடிக்கொண்டு இருக்கின்றன. போதைப்பொருள் பாவனைகளும் இன்று மீதமாகி விட்டன. இதல் புகைப்பிடித்தல் மனித உயிரினத்துக்கு கேடுவிளைவிக்கும் பொருள் என்று யாவரும் தெரிந்ததே! ஆனால் இதனை புரிந்தும் புரியாமல் தவறு இழைக்கின்றார்களா? இம் மானிடர் என்று எண்ண தோண்றுகின்றது.
ஓவ்வெரு வருடமும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகின்றது. உலக வல்லரசுகளில் இருக்கின்ற புகையிலை பாவனையாளர்களுக்கு எதிரான நிறுவனங்கள் இன்றை வரைக்கும் பலமான எச்சரிக்கையினை விடுத்தவண்ணமுள்ளன. இதே போல் உலக சுகாதார ஸ்தாபனமாது புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு தொனிப்பொருளினை முன்வைத்து விழிப்புணர்வை முதன்மைப்படுத்துவதும் வழக்கம்.

இன்றைய சூழ்நிலையில் புகைப்பிடித்தலை தூண்டுவதற்க்காக கவர்சிகரமான ஆண்களையும், பெண்களையும் வைத்துக்கொண்டு சிகரட் கம்பனிகள் தங்களினுடைய சந்தை வாய்ப்பினை பெருக்கி கொள்ளுகின்றன. இன்றைய ஊடகங்கள் புகைத்தல் எதிர்ப்பு தினம் பற்றி வருடம் தோறும் 31 ஆம் திகதி புகைத்தல் தொடர்பான விளைவுகளையும் அது தொடர்பான விழிப்புணர்களையும் ஞாபகபடுத்திவிட்டு பின்னர் அதனை மறந்து விடுகின்றன்.

 புகைப்பிடிக்கும் பழக்கமானது ஒரு சமூக பின்டைவுக்கு முதற் காரணியாக இருந்தாலும். அதனை இன்றைய சமுதாயம் அது பற்றி அலட்டி கொள்ளாத தன்மையே இருக்கின்றது. மரணத்தினை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகைப்பழக்கம் இடண்டாவது இடத்தில் இருந்து தற்போது முதலாவது இடத்திற்க்கு முன்னேறி இருக்கின்றது.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் பற்றி கூறுகிறார்,

 யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியகாலநிதி சி.எஸ். யமுனானந்தா.

புகைப்பிடிப்பவரின் வாய் வெப்பத்தினால் கருகி செவ்விதழ் கருமையாக காணப்படும் நடத்தைகளில் மாற்றம் காணப்படும்.
சமூகத்தில் வன்முறை அதிகரிப்பதற்க்கு இந்த புகைப்பழக்கமே மறைமுக காரணியாக அமைந்து விடுகின்றது. ஏனைய போதைப்பொருள் பாவனைகளுக்கும் இது அடிப்படையாக அமைந்து விடுகின்றது.


எமது சுவாச சிற்றறைகள் 80 சதுர மீற்றர் பரப்பளவினை கொண்டுள்ளது. இது உயிர் வாழ்க்கைக்கு அத்தியவசியமான ஒட்சிசனை குருதிகலன்களுக்கு கொடுத்து காபனீர்ரொட்சையிட்டினை அகற்றுகின்றது. இதனை நெருப்பினால் சிதைக்கும் நபர்கள் தம் உயிர்களுக்கு தாமே கொள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை பலர் விரும்பி செய்கின்றார்கள் பலர் அதனை விலைகொடுத்து செய்கின்றனர். இதனால் வருகின்ற பொருளாதார விளைவினை விட நோயின் தாக்கமே அதிகமானது.

புகைப்பிடிப்பவர்களில் அரைவாசிப்பேர் இதனாலயே இறக்கின்றனர். சுவாசப்புற்று நோய், சுவாசப்பாதை புற்று நோய், சுவாசப்பை அழர்சி, இதய பலவீனம், மாரடைப்பு, பாரிசவாதம், காலுக்கு செல்லும் இரத்ததோட்டம் தடைப்படல், வாய்ப்புற்று நோய் களப்புற்று நோய், இரைப்புண், சிறுநீர்ப்பை புற்றுநோய், என பல நோய்கள் புகைப்பிடிப்பவருக்கும்,

புகைப்பிடிப்பவருக்கு அருகில் நின்று சுவாசிப்பவருக்கும் ஏற்படும். இதனை விட காசநோய் ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும். புகையிலையில் காணப்படும் 4000 வகையிலான இரசாயனப்பதார்களில் 60 வகையானவை புற்று நோய் ஏற்படுத்தும்; தன்னமை உடையன. புகைப்பிடிக்கும் பழக்கத்தினை விலக்கி கொண்டால் நாற்பத்தியெட்டு மணித்தியாலயத்தில் குருதியில் பெரும்பாலான காபன்மொனோட்சையிட்டும், நிக்கொட்டினும் இல்லாது போகும் என்கின்றார்.

புகைத்தலுக்கு அடிமையாகி இருக்கின்ற 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கூறுகையில்.

அண்மைக்காலமாக தான் இந்த பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனை இப்போது நிறுத்தி கொள்ள முடியாதநிலை காரணம் புகைப்பிடித்தால் தான் புத்துணர்சி கிடைக்கின்றது. நாளாந்தம் புகைப்பிடிப்பாற்க்கு 200 ரூபா செலவாகின்றது.

இதனை விட, சந்தோசமான நிகழ்வு என்றாலோ அல்லது துக்கமான நிகழ்வென்றாலோ எனக்கு அதிகமாக புகைப்பிடிபதிலேயே பிடிப்பாக இருக்கின்றது. ஆனால் இதன் முலம் ஆபத்து இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. இருந்தும் திருமணம் செய்தால் விவகாரத்து செய்யக் கூடாது என்ற நிலையே இந்த புகைப்பிடித்தல் பழக்கம் எனக்கு ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஒருவர் புகைப்பழக்கத்திற்க்கு உள்ளாகுவதற்க்கான சூழல் பற்றி வைத்தியர் கூறுகையில்.
ஏதுவான காரணிகள்

புகைப்பிடிக்கும்  நடத்தையில் இருந்து விடுபடுபட அதற்க்கு ஆளான உளச்சமூக காரணியை முதலில் ஆராயவேண்டும். சில குடும்பங்களில் பெற்ரோர், சகோரதர்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக காணப்படினின் பிள்ளைகளும் அப்பழக்கத்திற்க்கு ஆளாகுகின்றனர். புகைப்பிடித்தல் எவ்வாறு இருக்கும் என்ற ஆவால் சிறுவர்களை புகைப்பிடிக்க தூண்டுகின்றது. இதற்க்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளும், விளம்பரங்களில் வரும் காட்சிகளும் காரணமாக இருக்கின்றன.

நன்பர்களின் கூட்டு பலரின் புகைப்பிடிக்கும் பழக்கத்pனை தூண்டுகின்றது. பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள், ஒன்றாக தொழில் புரிவோர். அத்துடன் மரண வீடு, திருமண வீடு மற்றும் களியாட்டங்களின் போது இலவசமாக கிடைக்கின்ற சூழலே சிறுவர்களையும், இளைஞர்களையும் புகைப்பிடிக்க தூண்டுகின்ற காரணியாக அமைந்து விடுகின்றன. புகைப்பிடித்தல் தங்களுக்கொரு வேறுபட்ட சூழலினை ஏற்படுத்தி தருமென முரண்நோக்கில் இப்பழக்கத்தினை ஆரம்பிக்கின்றனர்.

 வேறு சிலர் தம்முடைய எல்லைகள் கடந்த சுதந்திரத்தினை புகைப்பழக்கம் மூலம் வரையறுக்க முயல்கின்றனர்.என்கின்றார் வைத்திய கலாநிதி சி.எஸ.யமுனானந்தா.


இன்றைய உலக ஒழுங்கில் அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள் புகைத்தல் காரணமாக பலியாகும் அபாயம் ஏற்படும் என உலக சுகாதார தாபனம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. புகைப்பழக்கத்தினால் பீடிக்க பட்டோருக்கு நூறு பேரில் ஐம்பது பேருக்கு புற்றுநோய் மற்றும் மாரடைப்பு காரணமாக இறக்கின்றனர் என உலக சுகாதார தாபனத்தின் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன் புகைத்தல் தொடர்பான ஒரு சமுகத்தினரிடையே காணப்படுகின்ற மாறுபட்ட சிந்தனைகள் பற்றி யமுனானந்தா அவர்கள் குறிப்பிடுகையில்
தவறான எண்ணங்கள்
பலர் புகைப்பிடிக்கும் போது பதகளிப்பு குறையும் என்கின்றார்கள். இது தவறானதும் எதிர்மறையானதுமான எண்ணக்கருவாகம். புகைப்பிடிப்பதால் பதகளிப்பு அதிகரித்து மேலும் மேலும் புகைப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள். இதனை விட புகைப்பிடிக்கும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் அதுவும் முற்றிலும் தவறான சிந்தனையே. வேறு சிலர்  புகைப்பிடிப்பதால் மனம் ஆறுதல் அடைகின்றது என்பர் இதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிலர் புகைப்பிடிப்பதனால் சந்தோசமான மனநிலை அடையும் நம்பிக்கையில் புகைக்கின்றனர். இது ஒரு உளவியல் பிரமையாகும். இது திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரங்கள் என்பவற்றால் ஏற்பட்ட விளைவு ஆகும். உடல் ஆரோக்கியமான விளையாட்டு வீரர்களையோ, நடிகர்களையோ மையப்படுத்தி புகைத்தல் தொடர்பான விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன.

இதனை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கிரமம் தவறாது காட்சிபடுத்துகின்றனர். இதனை பார்த்து சாதாரண மனிதன் புகைத்தலினை செய்தால் தானும் அந்த நடிகனைப்போலவோ அல்லது விளையாட்டு வீரனை போலவோ சந்தோசம் அடையலாம் என்ற நிலை உருவாகுகின்றது. புகைப்பிடிப்பதனால் காசநோய் வருவதனையோ அல்லது புற்று நோய் ஏற்பட்டு அவதிப்படுவதனையோ புகைத்தலுடன் சேர்த்து காட்சிபடுத்தினால் மறுகணமே புகைத்தல் பற்றியதான மிகைப்படுத்தப்பட்ட எழுச்சி மறைந்து விடும். என்கின்றார் டாக்டர் யமுனானந்தா

இந்த புகைப்பழக்கம் இளைஞர்களை அல்லது சிறுவர்களை அதிகமாக பீடித்து கொள்வதற்க்கான காரணம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற தன்மையே. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதனுடைய தாக்கம் விரிந்திருக்கின்றது. என்றே கூறலாம் எல்லா கடைகளிலும் இதனை இலகுவாக பெறுகின்ற நிலையே இம்மாற்றத்திற்க்கு முக்கிய காரணம். முன்பு இருந்த எங்களின் சமூகத்திற்க்கும் இப்போது இருக்கின்ற சமூகத்திற்க்கும் பாரிய மாற்றங்கள் இருக்கின்றது. முந்தைய காலங்கிளல் ஒரு கட்டுப்போப்புடன் வாழ்ந்த எங்கள் சமூகம் அதாவது சிறுவர்கள் தங்களினுடைய தேவைகளை பூர்தி செய்ய பெரியவர்களை நாடுகின்ற தன்மையே இருந்தது. ஆனால் இன்றைய நிலமை அவ்வாறு இல்லை கைகளில் இலகுவாக பணம் கிடைப்பதனால் தங்களின் விருப்பங்களை தாங்களே நிறைவேற்றி கொள்கின்ற தன்மை இப்போது மாறிவிட்டது. இதனால் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்ற வேகம் அதிகரிக்கின்றது.

எனவே புகைப்பிடிப்பதனை சமூகத்தில் இருந்து முற்றாக தடுக்க விழிப்புனர்வு முக்கியமானது. இதில் ஊடகங்கள் முக்கிய பங்கினை வகிக்க வேண்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களில் புகைப்பிடித்தல் தொடர்பான காட்சிகளை தடைசெய்ய வேண்டும். இதனை விட கிராமங்கள், வேலைத்தளங்களில் இது பற்றியதான விளைவுகளை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தினை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்..

Wednesday, April 18, 2012

லீசிங் சித்திரவதை!!

யாழ்ப்பாணத்தில் போருக்கு பின் வேரூண்றி இருக்கின்ற முதலாளித்துவ கம்பனிகள் தங்களினுடைய உற்பத்திகளை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை தான் முக்கிய நோக்கமா  கொண்டுள்ளனர்.
அந்த உற்பத்தி பொருட்களை வாங்குகின்ற அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்ளுகின்ற மக்களிடம்; தங்களின் பொருட்களை கொடுத்து வசூல் செய்தவதனையே பிரதாமக முன் நிறுத்தியுள்ளார்கள்.
முதளாளித்துவ கம்பனிகளின் முக்கிய கொள்கையாக தங்களின் உற்பத்திகளை சந்தையில் கொண்டுபோய் சேர்ப்பதை தவிர வேறெதுவும் இருக்காது.
இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து வைத்துள்ளார்களாக என்று பார்க்கையில் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.  யாழ். மண்ணில் வேரூண்றிய கம்பனிகள் தாங்கள் விரிக்கின்ற வலையில் மக்களை சிக்க வைத்து  சீரழிய வைக்கின்றார்கள். முற்றிலுமாக மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த மக்களுக்கு பொருட்கள் திணிக்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் வாழ்க்கை செலவீனம் அதிகரித்து செல்லச் செல்ல அதற்கேற்றாற் போல் மக்களும் இசைந்து ஓடவேண்டிய தேவை உள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் போர்க்கால சூழலில் இருந்து விடுபட்டு இப்போது அபிவிருத்தி என்ற புதிய சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். புதிய வரவுகள் யாழ்ப்பாண மக்களை ஓரளவேனும் நவீனமயப்படுத்தியுள்ளது. இச் சூழலில் இவர்களுக்கான தேவைகளும் வாழ்க்கை செலவும் அதிகரித்தே உள்ளன.



இந்த வாழ்க்கை செலவினை ஈடு செய்வதற்க்கு புதிய தொழில் முறைகளையும், நுட்பங்களையும் யாழ்ப்பாண மக்கள் தேடி செல்ல வேண்டி நிர்ப்பந்திக்கபட்டுள்ளார்கள். பெருமளவாக நடுத்தர வர்க்கத்தை கொண்ட யாழ்ப்பாண மக்கள் இந்த சூழலை சமாளிக்க முடியாதவர்காகவே இருக்கின்றனர்.
போர் ஓய்ந்த பின் வடக்கு நோக்கி குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி படையெடும் கம்பனிகள் பல. அதில் முக்கிய இடத்தினை பெற்றிருப்பது லீசிங் கம்பனிகள். இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் இலகு தவணைமுறை மூலம் பணத்தினைச் செலுத்தி எந்தவொரு வாகனத்தையும் உடன் பெற்றுக்கொள்ள வழி செய்கின்றன.

இத்தகைய முறை போருக்குப் பின்னர் கடந்த சில வருடங்களாகவே யாழ்ப்பாண மக்களிடம் மிகப் பெரியளவில் திணிக்கப்படுகின்றது என்று கூறலாம்.  இதற்க்கு முன்னைய காலங்களில் இம் முறை பற்றி இம் மக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த முறையில் வாகன கொள்வனவில் முக்கிய இடம் பிடித்திருப்பது முச்சக்கர வண்டி.


யாழ்ப்பாண நகர வீதிகளில் அதிகளவில் நொடிக்கொரு தடவை பார்க்க கூடிய வாகனங்களில் முச்சக்கர வண்டிகளும் முக்கியமானவை.
இலகு தவணை முறையில் தானே கொள்வனவு செய்கின்றோம் உழைச்சு காசு கட்டலாம் என்ற எண்ணத்தில் முச்சக்கர வண்டியினை ஓடும் ஓட்டுனர்கள் பின்னாளில் இதன் முலம் கிடைக்கின்ற இலாபத்pனை விட நட்;டத்தினையே எதிர் கொள்வதோடு பாரிய சவால்களையும் எதிர் கொள்ளுகின்றனர்.
இது பற்றி நல்லூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஜெயக்குமார் கூறுகையில்.


“ஓரு லட்சம் ரூபா காசு முற்பணமாக கட்டி முச்சக்கர வண்டியினை வாங்கினேன். அதற்க்கு மாதாந்தம் ஒன்பதாயிரம் கட்டவேண்டியுள்ளது. நான்கு வருடத்துக்குள் முழுக்காசும் கட்டிமுடிக்கவேண்டும்.  இப்போது இரண்டு வருடத்திற்கான பணம் கட்டி பூர்த்தி செய்து விட்டேன.; மூண்று மாதத்துக்கு காசு கட்டவில்லை என்றால் ஆட்டோவினை லீசிங் கம்பனி பறிமுதல் செய்துவிடும். ஒரு நாளைக்கு 500 அல்லது 600 தான் உழைக்கமுடிகின்றது. யாழ்ப்பாணத்துக்கு ஓட்டத்துக்கு நான் வந்தா என்ற சாப்பாட்டிக்கே 200 அல்லது 300 ரூபா வேணும். பெற்ரோலுக்கு ஒரு தரம் ஓடிவர 150 ரூபா தேவை என்றார்.

சங்கத்தில் பதிவு இல்லாத முச்சக்கர வண்டிகள் தற்போது யாழப்பாணத்தில் அதிகமாக ஓடுகின்றன. ஆனால் இந்த முச்சக்கர வண்டிகள் யாவும் லீசிங் முறையில் பெறப்பட்டவை. நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்க்கு இந்த உழைப்பு போதுமானதாக இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் சாப்பாட்டிக்கு 1000 ரூபா கூட காணாது. எப்படிதான் உழைத்து லீசிங் காசு மாதாந்தம் கட்டுறது?

எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களினுடைய தேவையினையே பூர்தி செய்வது ரொம்ப கடினமாக இருக்கின்றது. லீசிங்கில ஆட்டோவ வாங்கினதால அதை உழைச்சு கட்டுறதுக்கு போதுமான வருமானம் இல்ல, முயற்சி இருக்கு ஆனா உழைப்பு இல்ல” என்று கூறினார்.




யாழ்ப்பாண நகரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இதில் இலகு தவணை கொடுப்பனவு முறையில் பெறப்பட்டு வேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிகம்.
மாதாந்த தொகையினை லீசிங் கம்பனிகளுக்கு செலுத்துவதற்க்கு உரிமையாளர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளுகின்றனர். மாதந்தம் முச்சக்கர வண்டி மூலம் போதுமான வருமானம் கிடைக்க வில்லை என்றால் தங்கள் வீட்டு நகைகளை அடமானம் வைச்சே அந்த பணத்தினை செலுத்துகின்ற நிலை பல முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கடன்களை பெற்று அந்த நகையினை அடமானத்தில் இருந்து எடுத்துக்கொள்கின்றார்கள். இவ்வாறு இவர்களின் நிலமை காணப்படுகின்றது.

திருமணம் செய்து பிள்ளைகளோடு இருக்கின்றவர்களின் குடும்ப பொருளாதார நிலைக்கும் திருமணம் ஆகாமல் இருக்கின்றவரின் குடும்ப பொருளாதார நிலைக்கும் சற்று வித்தியாசம் இருக்கின்றது. திருமணம் ஆகாமல் இருக்கின்றவர் தன் பொருளாதாரத்தினை ஏனைய குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து சமநிலை படுத்தினாலும் இலகு தவணை கொடுப்பனவு முறை மூலம் கொள்வனவு செய்த முச்சக்கர வண்டிக்கு மாதாந்த பணத்தினை செலுத்துவதற்க்கு பாரிய சவாலினை எதிர் நோக்குகின்றனர்.

இது பற்றி ஓட்டுமடத்தை சேர்ந்த கிருசாந் கூறுகையில்,



“எனக்கு 21 வயது நானும் தம்பியும் தான் குடும்பத்தை பார்க்கின்றம். அப்பாவுக்கு கண்ணில வருத்தம் அவர் வேலை செய்ய மாட்டார். மாசம் லீசிங்கிற்க்கு பத்தாயிரத்தி ஐந்நூறு ரூபா கட்டுறன். இந்த காசு குறிப்பிட்ட திகதிக்குள் கட்டாமல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கட்டினா வட்டியும் சேர்த்து கட்டவேண்டும். ஆறு மாசமா கட்டிக்கொண்டு இருக்கிறன். சில வேளையில கட்ட காசு இல்லையென்றால் வீட்டில இருக்கின்ற நகையினை அடமானம் வைச்சு தான் கட்டுவன். இப்ப தூர பயண ஓட்டங்கள் வாரது இல்ல. காரணம் இப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு ஆட்டோ வாங்கி வைச்சிருக்கினம். இப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்து போறதெல்லாம் அதில தான். ஆதனால எங்களுக்கு தூர பயண ஓட்டங்கள் வாறது இல்ல. 100 அல்லது 150 ரூபா வரக்கூடிய ஓட்டங்கள் தான் வருகின்றது. “இப்போ 500 ரூபாவுக்கு பெற்ரோல் அடிச்சா தான் கட்டுப்படி ஆகுது. லீசிங்கில எடுத்த ஆட்டோக்களுக்கு மண்ணெண்னை கலந்து பெற்ரோல் அடிக்கேலாது தனி பெற்ரோல் தான் அடிக்கணும்”. என்று கூறினார்.




இப்போது ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை 150 ரூபாவாக இருக்கின்றது. ஆனால் அது இன்னும் பதினைந்து ரூபாவால் அதிகரிக்கபடவிருக்கின்றது. இது இவ்வாறு இருக்க பெற்;ரோலின் விலை அதிகரிததன் காரணமாக முச்சக்கர வண்டிக்கான சவாரிக் காசும் அதிகரிக்க வேண்டிய தேவை உரிமையாளர்களுக்கு உண்டு.

ஆனால் இவ்வாறு அதிகரித்தால் பயணம் செய்ய யாரும் விரும்புவது இல்லை. அதனை விட சில உரிமையாளர்கள் பழைய விலையிலேயே சவாரி செய்வதால் பயணிகளும் அவர்களையே நாடிச்செல்லுகின்றனர். இதனால் பெற்றோல் விலையேற்றத்தினையும் இனி அதிகரிக்கப்பட இருக்கும் விலையேற்றத்தினையும் சமாளிக்க முடியாதவர்களாக முச்சக்கர வண்டி  உரிமையாளர்கள் திண்டாடுகின்றனர்.

“இப்ப லீசிங் முறை என்றது எங்களை ஒட்டுமொத்தமாக சித்திரவதை செய்யுது”. என்கிறார் நல்லூரைச் சேர்ந்த பாஸ்கரன்.




 “இந்த முறையானது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். ஆனா சாதாரண தொழிலாழிக்கு 100 வீதம் கஸ்ரத்தினையே கொடுக்கும். ஒரு மாத்தில பத்து நாள் திருமண சடங்கு, செத்தவீடு என்று ஒதுக்கினால் இருபது நாள் உழைக்கிறம் இதில பதினைந்து நாள் உழைத்து ஐந்து நாள் வீட்டுக்கு உழைக்கிறம். வீட்டுக்கு உழைக்கிறதா? அல்லது லீசிங்கிற்க்கு உழைக்கிறதா? என்று தெரியல.

மூன்று இலட்சம் பெறுமதியான ஆட்டோ வாங்கினா, அதுக்கு லீசிங் கட்டி, வட்டி கட்டும் போது ஆறு இலட்சம் ஆகுது.  யாழ்ப்பாணத்துக்கு இந்த லீசிங் முறை புதுசாக இருக்கிறதால சரியாக மேற்கொள்ள தெரியவில்லை. ஆனா கொழும்பில உள்ளவங்களுக்கு இது பழக்கப்பட் விடயம். இதனை சரியான முறையில் செய்வாங்க.”
என்று கூறினார்

இலகு தவணை கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிக்கான தொகையினை 3 மாதங்கள் கடந்தும்  வாடிக்கையாளர் செலுத்தாத பட்சத்தில் அவை  பறிமுதல் செய்யப்பட்டு விடும் என்பதும் இவர்களின் பயம்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால்  நாற்பதாயிரம் அல்லது ஐம்பதாயிரம் செலுத்தியே முச்சக்கர வண்டியை மீளப் பெற வேண்டும். அப்படி அவர் இத் தொகையினை செலுத்தி ஆட்டோவை மீள பெற்றுக்கொள்ளதா சந்தர்ப்பத்தில் அவர் அந்த வண்டிக்காக செலுத்தி வந்த பணமும் அவ்வளவு தான்.
காரணம் முச்சக்கர வண்டி சந்தைக்கு விடும் போதே ஒரு இலட்சம் அதன் பெறுமதியில் குறைந்து விடும்.

“லீசிங் தொகையினை செலுத்தி முடிப்பதற்க்கு நான்கு வருடங்களே மட்டுப்படுத்தப்பட்டிருக்கு. நான்கு வருடத்திற்கு மேல் ஒரு வாடிக்கையாளர் கேட்பாராக இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டம். காரணம் 4 வருடத்துக்கு மேல் முச்சக்கர வண்டியின் பெறுமதி குறைந்து விடும். தற்போது ஒரு முச்சக்கரவண்டியின் பெறுமதி ஐந்து லட்சத்தி பன்னிராயிரத்தி ஐநூறு கொண்டது”. லீசிங் கம்பனி ஊளியர் ஒருவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் லீசிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே சித்திரவதை என்பது போல உணர்கிறார்கள் பெருமளவான யாழ்ப்பாணத்து ஆட்டோ சாரதிகள். வேர்வை சிந்தி உழைக்கும் வர்க்கம் ஒருபக்கம். தயவு தாடவனியமே இன்றி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் சில முதலாளித்துவ லீசிங் கம்பனிகள் மறுபக்கம்.

இவர்களிடம் இருந்து தொழிலாளர்களைக் காப்பாற்றப் போவது யார்? அல்லது அவர்களாகவே விளிப்புணர்வு பெறுவது எப்போது…..?