Social Icons

Pages

Tuesday, November 12, 2013

Who is this Callum Macrae

இந்த கலம் மெக்ரே எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு சார்பான விதத்தில் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த கலம் அநீதி இழைக்கப்பட்ட சமூகங்களில்; புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே தோண்டி எடுத்தவர் என்று சொல்பவர்களும் இல்லாமல் இல்லை.

நைஜீரியாவிலும், ஸ்கொட்லாந்திலும் வளர்ந்த இவர் தற்போது பிரித்தானியாவின் ஊடகவியலாளராக இனங்காணப்படுகின்றார். குறிப்பாக ஈராக், உகண்டா, ஹைட்டி, செனகல், ஜோர்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை இவர் தனது ஆவணப் படங்கள் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

ஈராக் யுத்தத்தில் பிரிட்டிஷ் துருப்புக்களால் சிறைக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், இரகசியக் கொலைகளையும் விளக்கும் On Whose Orders என்ற ஆவணப் படத்தின் மூலமாகவும், ஈராக் யுத்த காலத்தில் பல பில்லியன் ஈராக் பணம் கூட்டுப்படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வர்ணிக்கும் Iraq's Mission Billions (2006) என்ற தொகுப்பும், உகண்டாவின் சிவில் யுத்தம் தொடர்பான Unreported World (2003) என்ற தொகுப்பும், இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய Sri Lanka's Killing Fields மற்றும் No Fire Zone: The Killing Fields of Sri Lanka (2013) என்ற தொகுப்பும் கெலம் மெக்ரேயின் தயாரிப்புக்களாகும்.

பிரித்தானியாவில் தனது குடும்பத்தோடு வாழ்ந்து வந்தாலும், அந்நாட்டின் யுத்தக் குற்றங்களையும் கூட இவர் தொட்டுக் காட்டியவர் என்பதற்க சான்றுகள் உண்டு.

ஆனால், இவர் தொழில் ரீதியாக ஒரு ஊடகவியலாளர் போலவே, ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கின்றார். அதனால், அவரின் காணொளிகளின் அசல் தன்மை குறித்து சிலரை சந்தேகம் கொள்ள வைக்கின்றது.