Social Icons

Pages

Thursday, June 30, 2011

கதை சொல்லும் படங்கள்


உதய சூரியன் மண் அஸ்தமிக்கும் சோகம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மீளமுடியாத துயராக ஆற்ற முடியாத வேதனையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
வட புலத்தின் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கச்சாய் எனும் இடத்தில் உதய சூரியன் எனும் வெளிச்சமில்ல கிராமம் சோகத்தோடு இருக்கிறது.
அரசாங்ஙத்திற்கு சொந்தமாக இருக்கும் இக் கிராமத்தின் காணிகள் மக்களின் பெயருக்கு மாற்றப்படாமைக்கு காரணம் தான் என்ன?
ஐம்பது வருடங்களுக்கு மேலாக மிகுந்த கஸ்ரத்தின் மத்தியில் மழை, வெள்ளம் என துன்பங்களையும் தாங்கிக் கொண்டு இரண்டு தலைமுறைகள் வாழும் இந்த கிராமம் மக்கள் இன்னும் கவனிக்கப்படதல் இருப்பது வேதனைக்குரியது.





எத்தனையோ நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்ட வந்த போது சொந்த காணி இல்லாத சோகத்தால் இன்னும் கொட்டில் வீடுகளில் கழிந்து போகிறது இவர்களின் காலம். கல்வீடு கட்டி கரண்டு வாங்க ஆசைப்படுகிறார்கள் சொந்த காணி  இல்லையே என்ன செய்வது.
சொல்ல முடியாத சோகம் ஒன்று பத்து வருடம் ஆனபின்னே அவர்களின் வீதிகள் கொஞ்சம் கரண்டு வெளிச்சத்தை சுவாசிக்க தொடங்கி உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்வில் இன்னும் தான் ஒளி என்பது எட்டாக்கனியாக உள்ளது.





அவர்களின் சோகம் சொல்ல நிறைய கதைகள் அடுக்கிக் கொண்டு போனாலும் ஆனால் இந்த காட்சிகள் பெரிய கதையினை தன்னுள்ளே வைத்துள்ளது.










No comments: