வேலனை பிரதேசம் புவியியல் ரீதியில் அதன் அமைவானது கடலுக்கருகில் இருக்கின்றது. இதனால் இம் மண்ணில் கடல் நீரின் உப்புத்தன்மையின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. பன்நெடுங்காலமாக உப்புத்தண்ணீரில் தம் வாழ்க்கையை ஓட்டும் இம் மக்களின் தீராத சோகம் எப்போது முற்றுப் பெறுமோ? கால் வலிக்க வரிசையில் நின்று குடி தண்ணீர் எடுத்து அதனை வீடு கொண்டு சேர்க்கும் வரை அவர்கள் படும் சோதனை சொல்லி மாளாது.
ஆம் அம் மண்ணின் ஒரு கிராமத்திற்கு நேரில் சென்று பார்ப்பதற்கு எனக்கும் என் நண்பர்களுக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர்களின் பிரச்சனைகளின் பிரதிவிம்பம் என் புகைப்பட கருவியினுள் சிக்கின. அவற்றுள் சிலவற்றை நேரில் கண்ட சாட்சியங்களாக உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.
என் ஊடகப்பயண வரலாற்றில் ஒவ்வொரு பயணமும் வித்தியசமான அனுபவத்தையே என்னுள் விதைக்கிறது. அந்த வகையில் அந்த கிராமக்களின் ஏக்கம் அவர்களின்பால் எங்களை ஈர்க்க வைத்து விட்டது. தன்னுள்ளே ஆயிரம் கதைகளை சொல்லும் படங்களின் ஊடாக நீங்களும் அவர்களின் சோகங்களை உணருங்க
இதற்க்கான வீடியோ இங்கே...
இது தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகிய எனது படைப்புக்கள் இங்கே....











3 comments:
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...
keep it up castro
thaxx anna
Post a Comment