Social Icons

Pages

Saturday, December 31, 2011

2011 இல் சமூகவலைத்தள புரட்சி...

ஃபேஸ்புக் டிவிட்டர் உள்ளிட்டவை வெறும் சமூக வலைத்தளங்கள் அல்ல; அவை உண்மையில் சமுக ஊடகங்கள் என உண‌ர்த்திய நிகழ்வுகள் பற்றிய பார்வை இதோ...

2011... சமூக வலைத்தளங்களில் சக்தியை உலகுக்கு உணர்த்திய ஆண்டு. இது பலவிதங்களில் சரித்திர முக்கியத்துவம் மிக்கது.
1917 என்றவுடன் எப்படி ரஷ்ய புரட்சி நினைவுக்கு வருகிறதோஇ 1857 என்றவுடன் எப்படி சிப்பாய் கலகம் நினைவுக்கு வருகிறதோ... 2011 என்றவுடன் துனீசியா எகிப்து என அரபு நாடுகளில் அடுத்தடுத்து புரட்சி வெடித்ததுதான் நினைவுக்கு வரும்.

சரித்திரத்தில் இதற்கு முன்னர் ஒரே காலகட்டத்தில் இத்தனை புரட்சி வெடித்துள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் வெடித்த புரட்சிஇ உடனே எகிப்தில் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு அதன் தொடர்ச்சியாக பகரைன் ஏமன் சவுதி அரேபியா சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளில் மாற்றத்துக்காக மக்களை ஏங்க வைத்து வீதியில் இறங்கி போராடவும் வகை செய்தது.

துனீசியாவை முன்னுதாரணமாக கொண்டு எகிப்தில் அரங்கேறிய புரட்சி வெற்றி பெற்ற செய்தி பரவத் துவங்கியதுமே அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களை குரல் கொடுக்க வைத்து அடுத்த புரட்சி எந்த நாட்டில்? என கேட்க வைத்தது. நாளிதழ்களும் சர்வதேச மீடியாவும் அடுத்த புரட்சி சிரியாவிலா ஏமனிலா எனறு ஆருடம் கூறத் துவங்கின. ஆட்சியில் இருந்தவர்கள் மத்தியிலும் இதே கிலியை ஏற்படுத்தியது.



இந்தப் புரட்சி அலையை உலகம் எதிர்பார்க்கவில்லை. மாற்றத்துக்கான மக்கள் போராட்டங்கள் சர்வாதிகார தேசங்களில் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டதை தான் உலகம் இது வரை கண்டுள்ளது. ஆனால் இப்படி மக்கள் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் சர்வாதிகார அதிபர்கள் பதவியை துறந்து நாட்டை விட்டு ஓடியதை உலகம் பார்த்து வியந்தது.
இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னே இருந்தது டிவிட்டரும் பேஸ்புக்கும் தான்.

 இந்த சமூக வலைப்பின்னல் தளங்களின் உதவியோடு யூடியூப் ஜி-மெயில் மற்றும் ஃபிளிக்கர் போன்ற தளங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் செய்திகளையும் தகவலையும் பகிர்ந்து கொண்டதோடு தங்கள் போராட்டத்தையும் ஒருங்கிணைத்து கொண்டனர்.
இந்த போராட்டதின் மற்றொரு முக்கிய அம்சம்இ முன்னின்று வழிநடத்த தலைவர் என்று யாரும் இல்லாமல் அதிருப்திக்கு ஆளான மக்கள் தாங்களாகவே இணைந்து மாபெரும் இயக்கமாக வலுப்பெற்றது தான். அதன் காரணமாகவே இந்த இயக்கங்களை ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனை சாத்தியமாகியதும் டிவிட்டரும் பேஸ்புக்கும் தான்.





பழ வியாபாரி பற்ற வைத்த தீ...

இந்தப் புரட்சிக்கான முதல் விதை துனீசியாவில் ஒரு அப்பாவியின் மரணத்தில் தான் விதைக்கப்பட்டது.
துனீசியா வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நாடு. படித்த இளைஞர்கள் எதிர்காலம் பற்றிய கவலையோடு வேலை வாய்ப்புக்கு அதிக வழிகள் இன்றி தவித்து கொண்டிருந்தனர்.
இத்தகைய இளைஞர்களில் ஒருவர் தான் முகமது பவுவாசிசி. பட்டதாரியான முகமது வேலையில்லா திண்டாட்டம் பற்றி புலம்பிக் கொண்டிருக்கவில்லை. பட்டதாரி என்றபோதும் கெளரவம் எல்லாம் பார்க்காமல்இ கையில் இருக்கும் பணத்தை கொண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

ஆனால் அந்தத் தொழிலுக்கும் சோதனை வந்தது. ஒருநாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது தள்ளுவண்டியை பறிமுதல் செய்ததோடுஇ பழம் விற்பதற்கான உரிமம் பெறவில்லை என்று கூறி முகமதுவை லஞ்சம் கேட்டு அவர் துன்புறுத்தினார். கைதும் செய்துவிட்டார்.
இந்தச் சம்பவத்தால் அவமானமும் விரக்தியும் அடைந்த முகமது வேதனையின் உச்சத்துக்கு சென்று தீக்குளித்துவிட்டார். 2010 டிசம்பர் 17-ல்
இந்தச் சம்பவம் நடந்தது.  தீக்காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஜனவரி 4-ம் தேதி இறந்துபோனார்.

டிவிட்டர் பேஸ்புக் ஆயுதம்...

அந்த இளைஞனின் மரணம் அந்நாட்டையே உலுக்கியது. குறிப்பாக இளைஞர்கள் கோபத்தால் கொந்தளித்து போயினர். இதுபோன்ற ஊமை கோபம் அவர்களுக்கு பழக்கபட்டது தான். இதற்கு காரணமான ஆட்சியை எதிர்த்தோஇ அதிபரை எதிர்த்தோ அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆர்ப்பாட்டம் கிளர்ச்சி எல்லாம் அடக்கப்பட்டுவிடும். அதற்கு பயந்தே பலரும் வீதியில் இறங்கி போராடியதில்லை.


ஆனால் இந்த முறை துனீசிய இளைஞர்கள் தங்கள் குமுறலை பகிர்ந்து கொள்ள  தீர்மானித்தனர். மாற்றம் வரவே வராதா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள துடித்தனர். வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். முகமது தற்கொலை செய்துகொண்ட சிடி நகரில் இளைஞர்கள் ஆர்பாட்டங்களை நடத்தினர்.

முகமது தீக்குளித்த காட்சி யூடியூப் விடியோவாக்கப்பட்டு துனீசியாவின் நிலைமை இதுதான் பாருங்கள் என்பது போல ஃபேஸ்புக் பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அந்த கோர காட்சியை பார்த்தவர்கள் கொதித்துப் போயினர்; அதே வேதனையோடு அதனை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.


டிவிட்டரிலும் குறும்பதிவுகளாக இந்த ஆவேசமும் குமுறலும் வெளிப்பட்டன. மாற்றமே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை குறும்பதிவுகளாக கொட்டித் தீர்த்தனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டால்இ அந்தத் தகவலையும் தயங்காமல் ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டனர். கூடவே அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கான திட்டத்தையும் பகிர்ந்து கொண்டனர். இதற்காகவே காத்திருந்தவர்கள் போல ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடத் துவங்கினர்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளியாகி கொண்டிருந்த ஆவேச குறும்பதிவுகள் போராட்டத்தை குறிக்கும் குறிச்சொற்களோடு சேர்த்து வெளியிடப்பட்டு (டிவிட்டர் மொழியில் ஹாஷ்டேக்) டிவிட்டரில் தகவல் நதியாக பெருகி ஓடின. சிடி முகமது ஒபிதுனீஷியா என பல்வேறு பதங்களில் போராட்ட குறும்பதிவுகள் ஒன்றிணைக்கப்பட்டன. இவற்றை படித்தவர்கள் தாங்களும் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர்.
வழக்கமான போராட்ட முறைகளை காட்டிலும் இது போலீஸார் மற்றும் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி ஒன்றாக திரள சுலபமாக இருந்தது. போராட்டத்தின்போது அடக்குமுறைக்கு ஆளாக அந்தத் தகவலையும் டிவிட்டரில் வெளியிட்டனர்.



போலீஸாரின் நடமாட்டம் தென்படும் பகுதியில் அதனை முன்கூட்டியே பகிர்ந்து கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்ளவும் டிவிட்டர் கைகொடுத்தது.
இப்படி கட்டுப்படுத்தவே முடியாமல் மக்கள் போராட்டம் தீவிரமான நிலையில்இ மேற்கத்திய மீடியா இந்த எழுச்சி பற்றி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தன. துனீசியாவில் டிவிட்டர் புரட்சி அரங்கேறி கொண்டிருப்பதாக அடைமொழியும் கொடுத்தன.

ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டம் ஓயவே ஓயாது என்னும் நிலை உண்டாக 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த அல் அபிடின் பென் அலி பதவி விலகியதோடு நாட்டை விட்டே வெளியேறினார்.
இந்த மாற்றத்தை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகமே துனீசியாவில் உண்டான மாற்றத்தை வியப்போடு பார்த்தது.

எகிப்தில் எதிரொலி...

துனீசியாவில் நிகழ்ந்தவற்றை பார்த்த எகிப்து நாட்டு மக்கள் தங்களுக்கும் இதேபோன்ற விடிவு காலம் வராதா என்று ஏங்கினர். துனீசியப் புரட்சியும் அதன் பயனாக மாற்றமும் சாத்தியம் என்றால்இ எகிப்திலும் இந்த மாயத்தை நிகழ்த்திக்காட்டலாமே என்று நம்பினர்.

ஃபேஸ்புக் பக்கம் ஒன்றின் மூலம்தான் அந்த நம்பிக்கை முதலில் விதைக்கப்பட்டது. 'நாம் எல்லோரும் காலித் தான்' என்னும் பெயரில் அந்த ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டது.
'காலித்' என்பவர் எகிப்து அரசின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து அதிகாரிகளின் வன்முறைக்கும் சித்ரவதைக்கும் ஆளாகி பலியானவர். அவரது பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கம் அமைக்கப்பட்டு இந்த வன்முறையும் சித்ரவதையும் தொடர வேண்டுமா என கேள்வி கேட்கப்பட்டது.

இந்த ஃபேஸ்புக் பக்கம் பெருந்தீயாக பற்றிக் கொண்டது. ஆயிரக்கணக்கானோர் இந்தப் பக்கத்தின் ஆதரவாளராக சேர்ந்து இதில் உள்ள தகவல்களை தங்கள் ஃபேஸ்புக் வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். ஒரு பொதுக் கூட்டத்தில் ஏற்படும் விளைவை - ஏன்.. அதை விட அதிகமாகவேஇ இந்தப் பக்கம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.
ஜனவரி 25-ம் தேதி 'பொறுத்தது போதும்; பொங்கி எழுவோம்' என அழைப்பு விடுக்கப்பட்டபோது 'அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்' என்னும் கோஷத்தோடு பல்லாயிரகணக்கானோர் கெய்ரோவின் பிரதான இடமான தாகிர் சதுக்கத்தில் திரண்டனர். இதைப் பார்த்து மேலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். தாகிர் சதுக்கமே 31 ஆண்டுகளாக பதவியில் இருந்த அதிபர் முபாரக்குக்கு எதிரான கோஷங்களால் குலுங்கியது.

அரசும் அதிகாரிகளும் தங்கள் வழக்கமான அச்சுறுத்தலையும் அடக்குமுறையையும் கையாண்டு பார்த்தனர். ஆனால் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டு போராட்டம் வலுப்பெற்றது. அடி வாங்க வாங்க உடனே அதையும் டிவீட் செய்தனர்.
நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெறவே முபாரக் வேறு வழியில்லாமல் பணிந்து பதவி விலகினார்.

அடுத்தடுத்து இரண்டு நாடுகளில் சமூக வலைத்தளங்களின் உதவியோடு சாமானிய மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததைப் பார்த்த பக்ரைன் சிரியா ஏமன் போன்ற ( ஜனநாயக ஆட்சியில் இல்லாத ) நாட்டு மக்களும் மாற்றத்துக்காக குரல் எழுப்பியபடி வீதியில் இறங்கி போராடித் துவங்கினர்.
விளைவு.. அடுத்த புரட்சி எங்கே வெடிக்கும்? என பரபரப்பாக பேச வைத்தது. பல நாடுகள் இன்டெர்நெட்டுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டுக்கும் வாய்ப்பூட்டு போடப் பார்த்தன. ஒரு சில நாடுகளில் தேர்தல் நடத்துவது பற்றி பேசவும் ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டனர்.
அரபு நாடுகள் முழுவதும் மாற்றத்துக்கான மக்கள் எழுச்சி அலை வேகமாக வீச சீனாவும் வடகொரியாவும் லேசாக நடுங்கிப்போயின.
சர்வாதிகார அதிபர்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை தணிக்கை செய்வது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் போனதே இந்தப் போராட்டங்களின் முதுகெலும்பாக அமைந்தன.



அடக்குமுறைக்கு கற்பிக்கப்பட்ட பாடம்...

ஃபேஸ்புக் டிவிட்டர் மூலம் எவரும் விரும்பிய தகவல்களை வெளியிட்டு பொதுகருத்தின் அடிப்படையில் ஆதரவு திரட்டலாம் என்னும் சாத்தியம் சாமானியர்கள் மத்தியிலும் போராட்ட உணர்வை ஊட்டியது.
அடக்குமுறையை பிரயோகம் செய்ய அரசுக்கு ஆயிரம் வழிகள் இருந்தால் அதனை எதிர்த்து நிற்கவும் ஆயிரம் வழிகள் உள்ளன‌ என்பதை ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் உண‌ர்த்தின.

இதனிடையே நடந்தது டிவிட்டர் புரட்சி தானா இதற்கு டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் தான் மூலக்காரணமா என்றெல்லாம கூட பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. டிவிட்டர் போன்ற‌ தளங்களின் பங்கு தேவையில்லாமல் மிகைப்படுத்தப்படுவதாகவும் கூற‌ப்பட்டது.
இந்த விவாதம் ஒரு புற‌ம் இருக்க டிவிட்டரும் ஃபேஸ்புக்கும் செய்தி வெளியீட்டு சாதனமாகவும் இருப்பதையும் சாதாரண மக்கள் அடக்குமுறைக்கு எதிராக அதனை ஆயுதமாக பயன்ப‌டுத்தலாம் என்ப‌தும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமானது.


உயிர் காத்த டிவிட்டர்!

துனீசியாவில் புரட்சி புயல் வீசிக்கொண்டிருந்தபோது வெளியான குறும்பதிவுகளில் ஒன்று 'டிவிட்டர் என் உயிர் காத்தது' என்று தெரிவித்தது. புல்லட் ஸ்கான் என்னும் டிவிட்டர் பெயர் கொண்ட இளைஞரின் குறும்பதிவு அது.

அனறைய தினம் தனது வீட்டில் இருந்து எட்டிப்பார்த்தபோது தெருவில் முகமூடி அணிந்த கூலிப்படையினர் திரிவதை பார்த்த அந்த இளைஞர் டிவிட்டரில் அந்த தகவலை வெளியிட்டார். அந்த தகவல் மேலும் பலரால் ருவீட் செய்யப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் பயனாக சிறிது நேரத்தில் எல்லாம் ராணுவம் அங்கே ரோந்து வந்தது. இதனால் கூலிப்படைகள் காணாமல் போகஇ  அந்த இளைஞர் டிவிட்டருக்கு நன்றி தெரிவித்தார்.

பேஸ்புக் அமைச்சர்!



துனீசியா போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவராக வலைப்பதிவாளர் ஸ்லிம் அமாமொவு கருதப்படுகிறார். போராட்டத்தின்போது தான் கைது செய்யப்பட்ட விவரத்தை அவர் டிவிட்டர் மூலம் உலகுக்கு அறிவித்தார். அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டதையும் டிவிட்டரில் வெளியிட்டார்.
புரட்சிக்கு பின் புதிய அரசாங்கம் அமைந்தபோது இவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. இணைய கட்டுப்பாடு தொடர்வாதாக கூறிஇ அவர் ராஜினாமா செய்து விட்டாலும் வலைப்பதிவாளர் ஒருவர் அமைச்சரானது வரலாறு தான்!

பொதுவாக அமெரிக்காவும் அமெரிக்கர்களும் தான் உலகுக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அந்நாடே எகிப்து எழுச்சியை பார்த்து ஊக்கம் பெறுகிற‌து என்றாக உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தானே பொருள்.
இந்த மாற்றத்துக்கு வித்திட்ட ஆண்டாக சமூக வலைத்தள ஊடகம் என்று சொல்லப்படும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்திய ஆண்டாக‌ 2011-ஐ நினைவுகூரலாம்



 

Saturday, December 24, 2011

புரட்சி தலைவரின் கடந்த பாதை....



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம் மண்ணில் எமக்காகப் பிறந்தது: 1917.01.17  கண்டி இலங்கையில் பிறந்தவர்

பெற்றோர்கள்:
தந்தை மருதூர் கோபாலமேனன் (வழக்கறிஞர்இ நீதிபதி)
தாய்: அன்னை சத்தியபாமா
சகோதரர்கள்: இரண்டு சகோதரி இரண்டு சகோதரன் மக்கள் திலகம் 05 ஆவது கடைசிப் பிள்ளை
மறைந்தவர்கள்: இரண்டு சகோதரி ஒரு சகோதரன் தந்தை உட்பட நான்கு பேர் 1920

தமிழ் நாடு வருகை: 1921 இல் அன்னை சத்தியபாமா அண்ணன் திரு.சக்கரபாணி

குடியேறிய இடம்: கும்பகோணம்

படித்தபள்ளி: ஆணையடி

பயின்றகல்வி: 03ஆம் வகுப்பு

முதல் நாடகம்: மகாபாரதம் 1924 ஏற்றவேடம் நத்திரன்இ சம்பளம் 05 ரூபாய்

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பனி: உரிமையாளர் எம்.எஸ்.சச்சிதானந்த பிள்ளை

நடித்த தேசபக்தி நாடகங்கள்: கதர்பக்திஇ கதிரின் வெற்றி பதிபக்தி தேசியக்கொடி, தேசபக்தி

பணியாற்றிய நாடக கம்பனிகள்: கிருஸ்ணன் நாடகக் கம்பனிஇ யுரைதூர் முகைதீன் நாடகக் கம்பனிஇ மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பனி



கவர்ந்த தலைவர்: நேதாஜி காந்திஜி

கவர்ந்தது: கதாராடை, தீண்டாமை, ஒழிப்பு, மதுவிலக்கு சுதந்திர கொள்கை

பின்பற்றியவை: கதாராடை அணிவது, கொள்கைகளை நேசிப்பது

சென்னை வருகை: 1932 சென்னை கவுனி அம்பாள் வீதி வாடகை வீடு

திரையுலகம் அறிமுகம் செய்தவர்: திரு கந்தசாமி முதலியார்

முதல் திரைக்காவியம்: சதிலீலாவதி(100 ரூபாய் சம்பளம்)

முதல் திருமணம்: 1941இல் திருமதி தங்கமணி என்ற பார்க்கவியை மணந் தார். மனைவி மரணம் 1942 இல் தங்கமணி மாரடைப்பால் மரணமடைந்தார்.

02 ஆவது திருமணம் 1944 இல் திருமதி சதானந்தவதியை திருமணம் செய்தார்



முதல் கதாநாயகன்: 1947 இல் இராஜகுமாரி  அறிமுகம் செய்த நிறுவனம் ஜுபிடர் பிக்சர்ஸ்.

தாய் மரணம்: 1952 இல் அன்னை சத்தியபாமா அவர்கள் மறைந்தார்.
02ஆவது மனைவி மரணம்  1945 ஆம் ஆண்டு முதல் 1961 வரை காசநோயால் பாதிக்கப்பட்ட திருமதி சதானந்தவதி அவர்கள் 16 ஆண்டுகள் கழித்து மரணமடைந்தார்.

03 ஆவது மனைவி: வி.என்.ஜானகி அவர்களை 14.06.1962 இல் மணந்தார்.

அண்ணாவின் தி.மு.க: டி.வி . நாராயண சாமி மூலம் நட்புறவு ஏற்பட்டு 1953 இல் தி.மு.கவில் இணைந்தார்.

சொந்த நாடக கம்பனி: எம்.ஜி.ஆர். நாடக மன்றம்.
1952 இல் திருப்பு முனை செய்த திரைக்காவியங்கள்: நாடோடி மன்னன், திருடாதே, மர்மயோகி, மலைக்கள்ளன்.

மேல்சபை உறுப்பினர்: 1962 முதல் 1964 வரை இரண்டு வருடங்கள்.

சட்டமன்ற உறுப்பினர்: 1967 முதல் 1987 வரை (21 வருடங்கள்)

புதிய இயக்கம்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17.10.1972

முதல்வர் பதவி: 03 முறை 1977 முதல் 1987 வரை (11 வருடங்கள்)

திரைப்படங்கள்             1936 முதல் 1946 வரை சிறிய கதாபாத்திரங்கள் 20 திரைப்படங்கள் கலர்படங்கள்    மொத்தம் 40. அலி பாபாவும்  4 0  திருடர்களும் முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை கதாநாயகன் 1947 முதல் 1978 வரை இராஐகுமாரி முதல் மதுரை மீ.சு.பாண்டியன் வரை


மரணத்தை வென்ற மக்கள் திலகம்  


01.1959 இல் சீர்காழி அட்வக்கேட் அமரர் நாடகத்தின் போது காலில் முறிவு ஏற்பட்டது.

02.1967 இல் நடிகர் எம்.ஆர் இராதா அவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்

03.1984 இல் உடல் நலமின்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்

மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்  தெலுங்கு 62இ இந்தி 06 மலையாளம் 02
            மொத்த திரைப்படம்136




தி.மு.காவில் புரட்சி நடிகர்   1953 முதல் 1972 ஒக்ரோபர் வரை (19 வருடங்கள்)

நாடகத்துறையில் தொடர்ந்து   1924 முதல் 1963 வரை 40 வருடங்கள்.

திரையுலகில் பொன்மனச்செம்மல்  1936 முதல் 1978வரை 42 வருடங்கள்

அரசியல் வானில் புரட்சித்தலைவர்  1932 முதல் 1987 வரை 55 வருடங்கள்

ஈழத்தமிழர் இதயங்களில்  1917 முதல் 2011வரை 94 வருடங்கள்



மக்கள் மனங்களில் 24.12.1987 ஆங்கில வருடத்தில் முதல் ஜனவரி மாதம் பிறப்பு. மக்கள் திலகம் கடைசி வாழ்க்கை இறுதி மாதம் மார்கழியில் இறப்பு இதுவும் ஒரு சாதனைதான். தமிழ் மாதத்தில் தைபிறந்தால் நல்வழி பிறப்பது போல் சாதனை தமிழ் மாதத்தில் பிறந்தால் மார்கழியில் இறந்தால் மோட்சம் என்பதற்கு மார்கழி மாதத்து பூவாக மறைந்தார் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்தார். 


எம்.ஜி.ஆர். ஓர் உலக அதிசயம்

சிறந்த நாடக மேடை நடிகர்
எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.
 

உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.
 

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி
 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.
 

சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.
 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.
 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
 

திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்
 

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின்  வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை
 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.
 

நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.
 

ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.
 

திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.
 

சிறந்த கதாசிரியர்இ சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).
 

அண்ணா நாளிதழின் நிறுவுனர்
 

சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்
 

பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.
 

நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்
 

02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
 

ஒளவை இல்லத்தின் அறங்காவலர்
 

வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.
 

இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967  1979).
 

03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.
 

சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.
 

சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.



எம்.ஜி.ஆரின் எளிமையான வாழ்க்கை முறை

காலை உதயத்தின் தாயின் உபசரிப்பு.
 

உடலின் வலிமைக்கு நித்தம் ஒரு உடற்பயிற்சி.
 

தியான உணர்வில் தினமும் ஒரு தியானம்.
 

காலை நேரப்பொழுது குளியலின் ஒரு புத்துணர்ச்சி.
 

ஈர ஆடையுடன் தாயின் பிரார்த்தனையும் கடவுள் நம்பிக்கையும்.
 

காலை தேநீர், பழைய சாதத்தின் நீராகாரம் பருகுதல்.
 

காலை நேரத்து உணவு யாராவது ஒருவருடன் சாப்பிடுதல்.
 

அறிவு நூல்களை படிப்பதற்கு வீட்டில் ஒரு நூலகம்.
 

தண்ணீரில் தியானம் செய்வதற்கு நீச்சல் குளம்.
 

வந்தவர்களை அன்புடன் வரவேற்று வாயாற உணவளித்தல்.
 

முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கூற அண்ணாவின் புனித அறை.
 

வெளியே செல்லும் போது தாயை வணங்க தாய்க்கு ஒரு கோயில்.
 

கடமை உணர்வோடு காவல்புரியும்  காவலர்களுக்கு ஒரு வீடு.
 

தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகைக்கு வரும் மக்களுக்கு உணவளிக்க ஒரு இடம்.
 

செய்தித்தாள், நண்பர்கள் பேட்டி, புகைப்படம் எடுக்க வசதியான இடம்.
 

தன்னை காணவரும் மக்களுக்கு பணிவிடைசெய் மனுக்களை ஏற்றுக்கொள்ள தன் வீட்டில் தனி வசதி.
 




புரட்சித் தலைவருக்குப் பிடித்தது

கொள்கை வழி பின்பற்றுபவர்.

கொடுப்பதில் சலிப்படையாதவர்.
 

எதிரிகளை நண்பனாக நினைப்பவர்.
 

நம்பினவர்களை வாழ வைக்கும் நல்லெண்ணம்.
 

பெற்ற தாயை தெய்வமாக பூசிப்பவர்.
 

சங்க இலக்கிய நூல்களை விரும்பிப் படிப்பவர்.
 

பிறர் குற்றம் பொறுப்பதுஇ திறமையான வர்களை பாராட்டும் தன்மை.










ஈழம் பற்றிய எம்.ஜி.ஆா் இன் பக்கங்கள்

 விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.

 சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோதுஇ முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடுஇ தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயேஇ “ஈழத் தமிழர்களோஇ விடுதலைப் புலிகளோஇ தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும் பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்துஇ ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்.இ தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹொட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டுஇ பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர். ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டுஇ ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும் திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகுஇ அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:

“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும்இ ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும்இ ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

Tuesday, December 20, 2011

ஆதித் தமிழனின் ஆற்றுகையை அரங்கேற்றிய ஆடலரசு…..


ஒடுக்கப்படுகின்ற இனங்கள் எல்லாம் தமது விடுதலைக்கான அடையாளமாக தமது பாரம்பரிய கலைகளையே பயன்படுத்துகின்றனர். நாங்களும் தப்பு(பறை) இசையை விடுதலைக்கான ஆயுதமாகவே பார்க்கின்றோம் பேச்சால் சொல்ல முடியாததை பாட்டாலும் இசையாலும் உணர்ச்சியுடன் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். திரிபு வாதத்திற்க்கு ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்ட ஆயுதமாகவே நாம் இதனை பயன்படுத்துகின்றோம். நான் இந்தியன் என்று சொல்வதை விட ஒரு தமிழன் என்று என்னை அடையாளப்படுத்துவதற்க்கான ஆயுதமாகவே தப்பு (பறை) இசையை கருதுகின்றேன். குரல் விடுதலைக்கான ஆயுதம் என்கிறேன்…..இது யாழ்ப்பாண மண்ணில் கால்பதித்த போது ஆடலரசுவின் வார்த்தைகளில் இருந்து உதிர்ந்தவை.


ஆடலரசு என்கின்ற வேணு அவர்களை நான் முதன் முதலாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது இந்திய பயணம் தான். எமது பாரம்பரிய கலைகளை வளர்க்க வேண்டும் வெறியோடு இருக்கின்ற ஓர் துடிப்புள்ள இளைஞனை பார்த்து வியந்தேன். இதே துடிப்புள்ள இளைஞன் எங்கள் மண் ஈழத்தில் அதுவும் யாழ் மண்ணில் தடம் பதித்தது பெருமிதத்திற்கொரு விடையம். இன்றைய நவீன யுகம் எம் அனைவரையும் பரபரப்புக்கு ஆழ்த்தி விடுகின்ற சமயத்தில் எங்களின் பாரம்பரிய கலைகள் மருவி போகின்ற துர்பாக்கியம் நிலவுகின்ற நேரத்தில் இவரின் வருகையால் இந்த பாரம்பரிய கலைகள் புத்துருவாக்கம் பெறுகின்றது.


     


இவரைப்பற்றி குறிப்பிடுகின்ற போது சென்னையில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்ற முறிச்சம்பேடு கிராமத்தை தனது பூர்வீகமாக கொண்டவர். சுட்டத்தரனி பட்ட படிப்பை முடித்து விட்டு தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) இதழியல் கற்றுகொண்டு இருக்கின்றார். இவரின் எதிர்கால திட்டம் சட்ட துறையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். “என்னையும் எனது தம்பி தங்கச்சியையும் படிப்பித்தவர் என்ர மாமா தான் எங்க கிராமத்தில நான் தான் முதலாவது பட்டதாரி….” என்று கூறும் ஆடலரசு ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் கலைக்குழு தலைவராக தற்போது பணியாற்றுகின்றார்.



                 

ஒடுக்கப்படுகின்ற இனத்தின் விடுதலைக்கான ஆயுதமாகவே கலையினை எப்போதும் பார்க்கவேண்டும். அப்போது தான் அந்த இனத்தினுடைய வலிமை இன்னும் அதிகரிக்கும் தொல்குடி தமிழர்களின் அடையாள சின்னமாக தப்பு இசை இருக்கின்றது அதனை அடையாளப்படுத்துவதற்க்கும் மீண்டும் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்க்கும் வேணு அவர்கள் அயராது உழைத்து வருகின்றார்.

                     

காலகட்டத்தில் எம் மூதாதரை பயன்படுத்திய மிகசிறந்த தொடர்பு சாதனம் சாதனம் தான் தப்பு என்று சொல்லப்படுகின்ற பறை வாத்தியம். சாதிக்கட்டமைப்பில் இருந்து பார்க்கின்ற போது தப்பு இசையை ஒரு தாழ்த்தப்பட்ட இசையாகவே இப்போதும் பார்க்கின்ற நிலைமை நம் சமூகத்தில் உள்ளது. பரதநாட்டியம் போன்றவற்றை உயர்வாக பார்க்கின்ற போது தப்பு இசையை தாழ்வாக பார்ப்பது, ஒடுக்கப்பட்டோர் தொடர்ந்து வறுமையில் வாடுவதும், சினிமாவின் ஊடாக நாட்டார் கலைகள் பற்றி கொடுக்கப்படுகின்ற பிழையான கருத்துக்களும் இந்த பாரம்பரிய கலைகளை மேலும் விரிவு படுத்துவதில் ஏற்படுகின்ற தடைக்கற்களாகும்.
அந்த வகையில் ஆடலரசு அவர்கள் இரண்டு கிழமைகள் யாழ்மண்ணில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களுக்கும், செயற்திறன் அரங்க இயக்க மாணவர்களுக்கும் ஆதித்தமிழனின் பாரம்பரிய கலையினை பயிற்றுவித்தார். ஐந்து வகையான நடனங்களை பயிற்றுவித்து அரங்கேற்றினார். கும்மி ஆட்டம், தப்பாட்டம், சாட்டைகுச்சி ஆட்டம், ஆதிவாசி ஆட்டம், ஒயில் ஆட்டம். என்பனவாகும்.


இதோ அவர் ஆற்றுகை செய்த நடனங்கள் பற்றியதான ஓர் அறிமுகத்தை உங்களுக்கு தருகிறேன்

01
இதில் ஒயில் ஆட்டம் பற்றி இவர் கூறுகின்ற போது. துமிழக மக்களினுடைய பாரம்பரிய கோயில் நடனம் ஒயில் ஆட்டம் ஆகும் அந்தந்த ஊரை சார்ந்த மக்களின் மொழியின் அடிப்படையில் ஒயில் ஆட்டம் ஆடப்படுகின்றது. இது சாதாரணமாக விதை விதைத்தல் அல்லது தானியங்களை காய வைக்கின்ற போது காக்கை குருவிகள் அதனை கொத்தி திண்று விடுமோ என்ற அச்சத்தில் ஒரு மூதாட்டி தன்னுடைய கையில் ஒரு துணியினை எடுத்து அதில் ஒரு கல்லை வைத்து கட்டி சுழற்றி வீசுகின்ற போது அந்த கல் பறவை மீது பட்டு பறவை பறக்கும் இது இவர்கள் இந்த ஆயுதத்தை எடுத்ததற்;க்கு காரணம் சொல்லப்படுகின்றது. இதன் காரணத்தால் தான் ஒயில் ஆட்டம் இன்று சிறப்பை பெறுகின்றது. இதுவே ஒயிலாட்டத்தின் பின்புல கதை.


02
அடுத்து பறை ஆட்டம்(தப்பு) பற்றி இவர் பேசுகின்ற போது.கறுப்பின மக்கள் ஒடுக்கப்பட்ட போது பறை இசைத்தார்கள் என்று சொல்லப்படுகின்ற வரலாற்றுக்கதை அதே போல்த்தான் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து மீள் உருவாக்கம் செய்யப்பட்டது தான் இந்த தப்பு இசைக்கலை. இன்று தமிழகம் முழுவதும் வடக்கு, கிழக்கு, தெற்க்கு, மேற்க்கு போன்ற பகுதிகளில் பல்வேறு பரிநாம வளர்ச்சியில் பேசப்படுகின்றது. குறிப்பாக தென்மாவட்டமான மதுரையில்
 இந்த பறையை “கொட்டு” என்று சொல்கிறார்கள். கொட்டு என்றால் அடித்தல் என்று பொருள்படும். அத்தோடு தஞ்சாவூர் மாவட்டத்pல் “தப்பு” என்று சொல்வார்கள். தப்பு என்றால் அடிக்கப்பட்டது என்று பொருள்படும். கோயம்புத்தூர் பகுதியில் இந்த பறை இசையை பெரிய நிலம் என்று சொல்வார்கள். சென்னையில் வாளும் மக்கள் இதனை மேளம் என்று அழைப்பார்கள்.

எல்லா பகுதிகளிலும் இந்த பறையாட்ட கலை என்பது ஒன்று தான். ஆனால் சொல்லாடல்களும், வழக்குமுறைகளும் மட்டுமே வேறுபட்டு நிக்கின்றன. மதுரையில் உள்ள ஆதிக்குடிகள் பறையினை அடித்து ஆடத்தெரிந்தவர்கள். தஞ்சாவூரில் உள்;ள மக்கள் தவிலை பயன்படுத்தி ஆடும் அதேவேளை பெண்களும் இந்த கலையினை ஆடக்கூடியவர்களாக இருக்கின்றனர். மதுரையில் உள்ள மக்கள் பெண்களை தவிர்த்தே இந்த பறையினை ஆடுவார்கள் ஏனென்றால் சாவுக்கும், கோயில் திருவுளாவிற்க்கும் இந்த பறையினை பயன்படுத்துவதே ஆகும். ஆனால் சென்னையை அண்டி வாழும் மக்கள் சற்று வித்தியாசமாக பறையோடு சேர்த்து ஒப்பாரி பாடலையும் பாடி ஆடுவார்கள்.



03
அடுத்து கும்மி ஆட்டம் பறையை தட்டி ஆடுவது மட்டுமல்ல இந்த ஆட்டம். இந்த ஆட்டத்தோடு கலையும், அறிவியலும், அரசியலும் கலந்திருக்கிறது. ஒரு குடும்பம்பத்தில் நல்ல நிகழ்வு நடக்கின்ற போது அந்த நல்ல  செய்தியினை தம் உறவினர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த கும்மி ஆட்டம் ஆடப்படுகின்றது. இதிலே அறிவியல் எப்படி தொடர்புபட்டிருக்கிறது என்றால் கைதட்டி ஆடும் போது உள்ளங்கையில் இருக்ககூடிய செல்கள் புத்துனர்சி பெறக்கூடிய வாய்ப்பை கும்மி ஆட்டம் கொடுத்திருக்கிறது.



04
அடுத்து ஆதி வாசிகள் நடனம் இது தென்னிந்தியாவின் மலையக பகுதிகளில் தான் ஆடப்படுகிறது. அதாவது கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி பகுதிகளில். இந்த நடனத்திற்க்கு குரும்பர் நடனம் என்ற மறு பெயரும் வழங்கப்படகிறது. ஏனென்றால் ஆதிவாசி இனத்தில் குரும்பர் இன பிரிவினரே இதனை அதிகமாக ஆடுவதனால் இதற்க்கான காரணப்பெயராக தோன்றியது. குரும்பர் இனத்தின் குலம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும் போது இந் நடனத்தினை ஆடும் வழக்கத்தினை இவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.


05
அடுத்து சாட்டைக்குச்சி ஆட்டம் இது தென்னிந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் வாடக்காய் மண்ணில் அதிகமாக ஆடப்படுகின்ற ஓர் கலை வடிவம்.

 இம் மண்ணில் விவசாயம் செய்யும்  மக்கள் தம்முடைய அலுப்பை களைப்பை போக்குவதற்க்காக ஆடப்பட்டு வருகின்ற ஓர் கலை வடிவமே இது. இந்த ஆட்டமானது மாடு கலைக்க பயன்படும் குச்சியினை பிரதானமாக கொண்டே இது ஆடப்படுகின்றது. அதாவது இக் குச்சியினை வைத்து சிறிய சண்டை போடுவார்கள் அவ்வேளை ஒருவர் இன்னொருவரை தாக்க மற்றவர் அதனை தடுக்க இவ்வாறு உருவானதே இந்த சாட்டைக்குச்சி ஆட்டம்.



ஆடலரசு என்கின்ற வேணுகோபால் தன் எண்ண உணர்வுகளை வெளிப்படுத்தகையில் யாழ் மண்ணில் நான் கொண்ட காதலின் பால் இம் மக்களை சந்திக்கவும் இம் மண்ணில் நான் எனது கலைகளை ஆற்றுகை செய்வதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன். ஒடுக்கப்பட்ட மக்கள் தமது பாரம்பரிய கலைகளை வைத்துக் கொண்டே தமது வாழ்வியலை இந்த உலகிற்கு காட்டியுள்ளார்கள். பூச்சியம் என்ற வடிவம் இல்லையென்றால் கணிதத்திற்க்கு இந்த சொல் அறிமுகமாகி இருக்காது. அது போலத்தான் இந்த பாரம்பரிய கலைகளும். என்னிடம் கலையினை பயின்ற் மாவர்களில் ஆயிரத்தின் துளிகளாக ஈழத்து யாழ் மண்ணின் மாவர்கள் இருப்பது பெருமிதம் தருகிறது…





இக் கலையினை பயின்ற மாவர்களின் எண்ணங்கள்………

பறையை மறையாகப்பார்க்கின்ற சமூகத்தில் இவ்வாற்றுகையானது ஒரு புதிய தேடலை தந்திருக்கின்றது. குறுகிய காலப்பகுதியில் நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது “ஒரு எல்லையிலே நிற்கின்ற இராணுவ வீரனை விரட்டியடித்து அந்த இடத்தினை கைப்பற்றியபோது ஒரு போராளிக்கு இருக்கும் மகிழ்ச்சியை கொடுப்படுபோல் எனக்கும் இவ்வாறு மகிழ்ச்சியை தந்தது” என்கின்றார் இதனைப்பழகிய மாணவர் ஒருவா. ;இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாம் பர்iவையாளரின் கைகளில் இருந்து வந்துபோன கரகோசத்தில் இருந்து இந்த மகிழ்கச்சியை நாம் பெற்றுக்கொணடோம் என்கின்றார் உற்சாகத்துடன்..



நீண்டகாலமாக வாழ்வியலோடு சம்மந்தப்பட்ட கிராமியக்கலை யாழ் மண்ணில் இல்லாமல் அழிந்து போயிடிச்சு இப்ப ஆடல் அரசு எங்கள்  யாழ்ப்பாணத்தில் இதனை பயிற்றிவித்து அரங்கேற்றியுள்ளார் என்கிறார் இன்னொரு மாணவி . இப்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறு நவீனத்தவங்கள் நிகழ்ந்து வருகின்ற வேளையிலே இந்தக்கலையை நாம் கற்று ஆடுவதென்பது மிகவும் சிறப்பான ஒன்றே. என்னதான் சினிமாவில் பல்வேறு ஆட்டங்கள் கூத்துக்களை பார்த்தாலும் நாம் பயின்ற இந்தக்கலையானது புனிதமானதாகவும் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்து விளக்குவதாகவும் அமைந்துள்ளது என்கின்றார்…..




ஆடலரசு என்கின்ற வேணுகோபால் தன் ஆற்றுகைகளை நிகழுத்துகின்ற ஒவ்வொரு சமயத்திலும் இந்த உலகத்திற்க்கு எம்மையெல்லாம் அறிமுகம் செய்த நடமாடும் தெய்வத்தை பற்றி பாடல் பாடுவது வழமை. அப்பாடல் மூலம் எல்லோரும் மெய்மறந்து லயித்து போய்விடுவார்கள்.

“ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்தை போல தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்ன பொத்த வேணும்.....”


                          ”  ஈரத்தில காயும் போது வானவில்லா தெரியும்
                           இத்து போன சேலையில் உன் சோக கதை புரியும்
                           கஞ்சி கொண்டு போகும் போது சும்மாடையா இருக்கும்
                           சேலை கட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்...”

அடுத்த பதிவின் உங்களோடு நான் இணைகின்றேன்............

Monday, December 19, 2011

தமிழரின் தொன்மை நாகரிகத்தை சொல்லிய ”பாலை” திரைப்படம்

தமிழ்த் திரைப்படம் ஒன்று முதல் முதலாக தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

சங்க காலத் தமிழர் வாழ்க்கையை இலக்கியங்களில் மட்டுமே படித்துள்ள நமக்கு அதனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் ம.செந்தமிழன். பாலை என்ற இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.


தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கும் வந்தேறிகளுக்கும் இடையில் நடந்த போரே படத்தின் மய்யக் கரு. வளமான நிலப் பகுதியில் வாழ்ந்துவரும் முல்லைக்குடி மக்களை வந்தேறிகளான ஆய்க்குடியினர் விரட்டி அடித்து நிலத்தைக் கவர்ந்து விடுகின்றனர். தமது சொந்த மண்ணை இழந்த மக்கள் வறண்ட பாலை நிலத்திற்கு வேறு வழியின்றி குடிபெயர்கின்றனர். அங்கு நிலவும் வறட்சியால் கடும் துன்பம் அடையும் அவர்கள் மீண்டும் தம் மண்ணை மீட்கப் போராடுவதே படத்தின் கதை.


தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மிக நுணுக்கமாகப் படமெங்கும் காட்சியாக்கியிருக் கிறார்கள். தொடக்கத்தில் தமிழர்களிடம் கடவுள் என்ற ஒன்று கிடையாது. அது பின்னாட்களில் நம்மீது திணிக்கப்பட்டது. அதனைச் சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதாவது கடவுள் குறித்தோ, கடவுள் நம்பிக்கை குறித்தோ  எந்தக் காட்சியும் படத்தில் இல்லை. . ஏனென்றால் தமிழர் வாழ்வில் இல்லாத கடவுளால்தான் இன்று மதங்களும்.ஜாதிகளும் தமிழனைப் பிரித்து வைத்து நமக்குள்ளே மோதிக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நம் சமூகத்தில் கடவுள் இல்லை என்பதைச் சொல்லவேண்டியது தமிழர் சமூக வரலாறு குறித்து எழுதுபவர்கள்,பேசுபவர்கள், படம் எடுப்பவர்களின் கடமை. இது நேர்த்தியாக உள்ளது இத்திரைப்படத்தில்


தோல்வியில் இருந்து பாடம் கற்றல், அனுபவ சாலிகளின் அறிவுரை கேட்டல், மணவாழ்க்கைக்கு முந்தைய உடன்போக்கு, அனைவரும் கூடி அமர்ந்து கள் உண்ணுதல் உள்ளிட்ட அன்றைய சமூகக் கூறுகளும், ஒற்றைக் காலடித் தடத்திலேயே ஊரார் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகக் கால்வைத்து நடந்து தப்பிச் செல்லுதல், மீன் பிடிக்க வலை அமைத்தல், வண்டிகள் தொலைவில் வருவதை அறிதல் போன்ற உத்திகளும் காட்சிகளாக விரிந்தது அருமை.

”பாலை” திரைப்படம் பற்றி கூறுகிறார் இயக்குனர் செந்தமிழன்



சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, ’பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’ என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது.
‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

                     
தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.
‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

Sunday, December 18, 2011

இலங்கையில் நிகழ்ந்து போன நிகழ்வுகள்!

அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள்.
                                          
ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.


எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன்.

 அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.

எங்களை ஓரளவு மிகவும் குரூரமான அனுபவங்களுக்கு ஆளாக்கியது அஸவேதுவாவின் வெள்ளைக்கார ஆளுனர்கள். அவர்கள் இங்கு செய்த குரூரமான குற்றங்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஊவா வெல்லஸ்ஸயில் கலவரத்தை முன்னெடுத்த ப்றவுன்ரிக் ஆளுனர் எமது மக்களை மிகவும் கொடுமையாக நடத்தியமையை அவரிட்ட சட்டங்களே தெளிவுபடுத்துகிறது. அச் சட்டங்களுக்கேற்ப மனிதர்கள் மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நிழல் வழங்கும் மரஞ்செடி கொடிகள் கூட அழிக்கப்படக் கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும் அவை அவ்வாறே செயல்படவில்லையென 'டேவ்' சொல்கிறது. இராஜசிங்க அரசன், எஹெலபொல இளவரசியிடம் அவளது குழந்தைகளை அவளைக் கொண்டே உரலிலிட்டு இடித்ததாகச் சொல்லப்படும் கதையும் கூட ஆங்கிலேயர்களால் அரசனை அவமானப்படுத்த பரப்பப்பட்ட வதந்தி என்று இன்று கருதப்படுகிறது.

                         
                          

எமது நாட்டில் முதன்முதலாக இனக் கலவரம் உருவானது 1956க்குப் பிறகே. வேறு மொழியொன்றைப் பேசுவதனாலேயே நாம் அதுவரையில் எம்முடனேயே ஒன்றாக இருந்த நேச ஜனங்களை பரம எதிரியாக நோக்கினோம். நிராயுதபாணிகளாக இருந்த அவர்களை நாம் முடிந்தளவு வதைக்குள்ளாக்கி வேதனைப் படுத்தினோம். நாம் எல்லோருமே இப்படிச் செய்யவில்லை என்பது உண்மைதான். எனினும் எங்களில் அனேகர் வெறுமனே பார்த்திருந்தோம்.

மக்களின் வாக்குகளால் பதவியேற்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டம் தெற்கில் 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் வடக்கில் போராளிகள் சிலரால் எமது இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டதும் நாங்கள் மீண்டும் அப் பழைய இனவாத ஆவேசத்தை தலைகளில் ஏற்றிக் கொண்டோம். எங்களில் சிலர் அவர்களுடனிருந்த, வடக்கிலிருந்து வந்திருந்த நண்பர்களைக் கூட குடும்பத்தோடு உயிருடன் வாகனங்களிலேற்றி எரித்தோம். அதையும் எங்களில் அனேகர் பார்த்திருந்தோம். அரசு உறக்கத்திலிருந்தது.

1958 ஆம் ஆண்டுக் கலவரத்தை மகாராணி நியமித்த ஒலிவர் குணதிலக நிறுத்தினார். எனினும் 1983இல் எங்களுக்கிருந்தது மக்கள் நியமித்த ஜே.ஆர். ஜெயவர்தன. அவர் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இடம்கொடுத்து வெறுமனே பார்த்திருந்தார். துரதிஷ்டவசமாக முழு உலகத்தினரும் இதனைக் கண்டார்கள்.

 தெற்கில் எங்களுடன் ஒன்றாக இருந்த தமிழர்கள், வீடு வாசல்களைக் கை விட்டுவிட்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். ஒரு கணத்துக்கேனும் நிராயுதபாணிகளாக இருந்த அவர்களது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொடுக்க தெற்கிலிருந்த எங்களுக்கும், அதே போல அரசாங்கத்துக்கும் முடியாமல் போனது. ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஒரு மக்கள் குழுவினரது வாழும் உரிமையை காப்பாற்றிக் கொடுக்காதிருக்கையில், அதைக் காப்பாற்றும் வேறொரு அரசாங்கம் குறித்த கனவுகளைக் காண்பது என்பது மிகவும் இயல்பானது.

                         


அதன்பிறகு 1989 இல் தெற்கில் மீண்டும் மிகப் பெரிய கலவரமொன்று தோன்றியது. ஐயோ..அவ்வாறானதொரு கொடுமை. அப்பாவிகளைக் கொன்றது மாத்திரமல்லாது பிணங்கள் கூட அவமானப்படுத்தப்பட்டன. வீதிகள் தோறும் பிணங்கள்..டயர் சுடலைகள். ஒழுங்கமைக்கப்பட்ட குரூரமொன்றை நாங்கள் இங்கு காட்டினோம். மோதிய இரு புறமும் போட்டிக்கு குரூரமாகின. யார் செய்திருந்தாலும் விஜேசுந்தர, ரிச்சர்ட் சொய்ஸா போன்றவர்களின் படுகொலையானது மிகக் குரூரமான செயல். இக் குரூரமானது நாடு முழுவதிலும் பரவியது. வடக்கிலும் பரவியது. வடக்கில் மரணத்தை வாழ்க்கையாகக் கொண்டு வரும் மனித வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டன. ஊர் முழுவதுமான, பேரூந்துகள் முழுவதுமான மக்கள் மாண்டனர். ஜனத்திரள் நிறைந்த வீதிகளில் பாரிய குண்டுகள் வெடித்தன. அதுவும் மிகப் பயங்கரமான யுகமொன்று. நாங்கள் தவறுதலாகவோ மிலேச்சத்தனத்தை வீரமாகப் பார்க்கப் பழகினோம். அவ்வாறு இல்லையேல் யாரேனும் எங்களை அப்படிப் பார்க்கும் நிலைக்குத் தள்ளினார்கள்.

இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இளவரசர்கள் கூட யுத்த களத்துக்கு அனுப்பப்படும் கட்டாய இராணுவ சேவையொன்று இங்கில்லை. எனவே எங்களில் அனேகர் வாழ்வதற்கு வேறு வழியேதுமின்றியே யுத்த களத்துக்குச் சென்றார்கள். வடக்கிலும் வசதியிருந்தவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு யுத்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளே. இரு புறத்திலுமே யுத்தத்துக்காக இணைக்கப்பட்டவர்கள் ஒருபொழுதேனும் யுத்தத்துக்குச் சென்றிராதவர்கள். ஆரம்ப காலத்திலென்றால் மனிதத்தன்மை நிறைந்த கொப்பேகடுவ போன்ற படையினர் இருந்தனர். இறுதிக் காலத்திலிருந்த பெரும்படையினர் இப்பொழுது எங்களையே சிறையிட்டு விலங்கிடுகிறார்கள். எனவே இங்கு நடந்த யுத்தம் குறித்து பிற மக்கள் ஒவ்வொரு விதத்தில் தீர்மானிக்கிறார்கள். சிலர் நாங்கள் மிகக் குரூரமானவர்கள் எனச் சொல்கிறார்கள்.

குடிக்கத் தண்ணீர், வயிற்றுக்கு உணவு, மருந்தேதும் இல்லாமல் மாதக் கணக்கில் சிறிய பாலைவனமொன்றில் அடைக்கப்பட்டுள்ளவர்களது அச்சம், துயரம், வலியை அறிந்தவர்கள் அவ்வாறு சிறைப்பட்டவர்கள் மாத்திரமே.

                        

 அவ்வாறு சிறைப்பட்டவர்கள் இங்குமிருந்தார்கள் என்பதை அக் காலத்தில் நாம் சற்று மறந்திருந்தோம். நாங்கள் 70,000 பேருக்கு உண்ணக் குடிக்க அனுப்பி வைத்தோம். பார்க்கும்போது அங்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறான இடத்தில் மரணத்தை எதிர்நோக்கியவாறிருந்த சமூக சேவையாளர்களும் அகன்றிருந்தால்  அம் மக்களுக்கு என்ன நடந்ததென்று உலகுக்குச் சொல்லத் தெரிந்த பிற மனிதனொருவன் இல்லை. எனினும் வானத்திலிருக்கும் செய்மதி இங்கு நடந்த எல்லாவற்றையும், இரவு பகல் பாராது பார்த்திருந்திருக்கிறது. பார்த்திருந்தவற்றை அறிவித்திருக்கிறது.


மிலேச்சத்தனத்துக்கு மிலேச்சத்தனத்தாலேயே முகம்கொடுக்க வேண்டும் என்பது கடினமான அனுபவப் பழமொழி. பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற சொற்தொடருக்கு அது சமனாகிறது. எனினும் பின்பொரு காலத்தில் நேசத்துக்குரியவர்களின் மிலேச்சத்தனமானது ஓரளவு பலவீனமடைந்த பிற்பாடு நாங்களும் மிலேச்சத்தனம் எனும் ஆயுதத்தைக் கை விட்டிருக்க வேண்டும்.

எனினும் நாங்களும் இயலாதபட்சத்தில் மிலேச்சத்தனத்தை மிலேச்சத்தனத்தால் வெற்றி பெற்றோம் எனக் கொள்வோம். எங்களால் உலகுக்கு சமாதானம், சந்தோஷம், அமைதி போன்றவற்றைக் காட்டிக் கொள்ள முடியும்.எனினும் நாங்கள் இன்னும் எங்களது மிலேச்சத்தனத்தின் நிர்வாணத்தையே காட்ட முயற்சிக்கிறோம். அந் நிர்வாணத்தை நாங்கள் மூட முயற்சிப்பது அதற்கு சற்றும் சளைக்காத கட்டளைகளால். ஆகவே மூட மூட நிர்வாணம் இன்னுமின்னும் தென்படுகிறது.


எங்களது நாடு புத்தரின் தேசமென இப்பொழுது சிலர் சொல்கிறார்கள். புத்த புத்திரர்கள் ராஜ சபைகளில் உட்காந்திருப்பதுவும் இப்படியாக மட்டுமே. அவர்கள், உலகுக்கு அமைதியை வழிகாட்டுமொன்றை உருவாக்கப் பாடுபடுவதைத்தான் காண முடியவில்லை. இன்னும் சிலர், நாடு முழுதும் கோபத்தினதும் குரோதத்தினதும் நினைவுத்தூபிகளைக் கட்ட முயற்சிக்கிறார்கள்.

 இவ்வாறு செல்கையில் இன்னுமொரு மஹிந்த (புத்தரைக் குறிக்கிறது. புத்தரின் நாமம் மஹிந்த) இந்தியாவிலிருந்து இங்கு வரக் கூடும். எனினும் இன்று அங்கு அசோக மன்னர்கள் இல்லை. நாங்கள் எங்களது கௌரவத்தைக் காத்துக் கொள்ள வேண்டியிருப்பது சிங்கங்கள், புலிகளாக எங்களை நாங்களே அடித்துக் கொன்று கொண்டு நாங்கள் அதில் வீரர்கள் என்று உலகுக்குக் காட்டுவதன் மூலமல்ல.

எங்கள் எல்லோராலுமே மனிதர்களாக சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக ஒன்றாக இருக்க முடியுமென உலகுக்குக் காட்டுவதன் மூலம்தான்.

Monday, December 12, 2011

பிடெல் கஸ்ரோ- கருத்துப் போரில் ஒரு வர்க்கப் போராளி.

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ரோ 85 வயதை தாண்டியவர். கடந்த நான்கு வருடமாக நோய் வாய்பட்டுக் கிடந்த அவர் மீண்டும் எழுந்து நடமாடத் தொடங்கியுள்ளார். இன்றைய உலகின் அதிக வயது கூடிய கொமியூனிசத் தலைவர் அவர்தான்.


கொமியனிசம் தோல்வியுற்றதாக வரலாறு இல்லை.பொருளாதார, அரசியல் சமூக மாற்றங்களுக்கு அமைவாக கொமியூனிசம் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.அதன் கருத்தியல் அடிப்படையில் மாற்றமோ நிராகரிப்போ இல்லை.சீனாவைப் பாருங்கள்.அது கொமியூனிச நாடு என்றாலும் சுத்தமான முதலாளித்துவ நாடு.கம்மியூனிச கட்சி மேலாளர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள. பொருளாதார வரன்முறைகளை மனமுவந்து மாற்றத் துணிந்தவர்கள் அரசியல் முறைமையை மாற்ற உறுதியாக மாறுகின்றனர்.

கொமியூனசத்தின, அதாவது பொதுவுடமைச் சித்தாந்தத்தின் புதிய முகத்தை நவசீனாவில் காண்கிறோம்.பழந்பெரும் மாக்சிசச் சித்தாந்தத்தில் விடாப்பிடியாக நிற்கும் கியூபாத் தீவில் மாற்றங்களுக்கு இடமுண்டா பொறுத்துப் பார்ப்போம். கஸ்ரோ என்ன சொல்கிறார் கேட்போம்.
                                      
1959ல் கியூபா புரட்சியைத் தோற்றுவித்த பிடல் கஸ்ரோ கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவின் நெஞ்சில் தைத்த முள்ளாக இடம் பெற்றார். இன்றும் பெறுகிறார். அவர் கடைப்பிடித்தது நடைமுறை படுத்திய பொதுவுடைமை கருத்துக்கள் அமெரிக்காவிக்கு மிரட்சி ஊட்டின.
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கியூபா ஒரு சின்னஞ்சிறிய நாடு பத்துக்கு மேற்பட்ட அமெரிக்கா ஜனாதிபதிகள் அவரை கொல்ல முயற்சி எடுத்தார்கள். உளவுத்துறையான சி.ஐ.ஏ அவர் மீது கொலைக் கும்பல்களை ஏவி விட்டது. 1961ல் சனாதிபதி கெனடி கிய+பா மீது படு தோல்வியில் முடிந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

பெரும் தரைப்பரப்பையும் இராணுவ பலத்தையும் பொரளாதார வலுவையும் கொண்ட வல்லரசுகள் தமது பக்கத்தில் உள்ள சிறய நாடுகளையும்,நாடுகளாக பாரிணமிக்க  எந்தனிக்கும் மக்கள் கூட்டங்களையும் ஏன் அழிக்க முயற்சிக்கின்றன?.

                                     
                      
எல்லாம் அச்சம்தான்.அந்த நாடுகளும் மக்கள் கூட்டங்களும் எந்தக் கருத்தகளை அல்லது நடைமுறை படுத்துகின்றனவோ அதை கண்டு அஞ்சுகிறார்கள், மிரட்சி அடைகிறார்கள் ஒரு விதத்தில் தமது சொந்தப் பலத்தில் அந்த வல்லரசுகளுக்கு நம்பிக்கை இல்லைப் போலும்.
கியூபா மீதான தாக்குதலாகட்டும் தமிழீழ மக்கள் மீதான தாக்குதலாகட்டும் பெரிய வித்தியாசம் இல்லை. யூலை 21,  2006ம் ஆண்டில் ஆர்கென்ரீனா நாட்டில் நடந்த தென்னமரிக்க அரசுத் தலைவர்கள் உச்சி மானாட்டில் பிடல் கஸ்ரோ இப்படி பேசினார்.

“எண்பது வயதுவரை உயிர் வாழ்வதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். உலகின் பலமான அயல் நாடு என்னை ஓவ்வொரு நாளும் கொல்ல முயற்சிக்கும் போது நான் உயிர்தப்புவேன் என்று எண்ணவில்லை”.
மேற்கு நாடுகளின் சனநாயக மற்றும் பொருளாதார அளவுகளின் படி  கியூபா பின்னடைந்து காணப்பட்டாலும்  மூன்றாம் உலகின் அளவீடுகளின் படி கியூபாவின் செயல்முறை திருப்தி அளிப்பதாக உள்ளது. பருமனுக்கு மிஞ்சிய வரலற்றுப் பணியை அது ஆற்றியிருக்கிறது.சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பின்பும் அது தாக்குப் பிடிக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது.

மாக்சிசவாதியாக இருந்தாலும் கஸ்ரோ அணிசேரா இயக்கத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஆபிரிக்க நாடுகள் விடுதலை பெறுவதற்கு உதவினார். 350,000 போர் வீரர்கள் கொண்ட கியூபா அணியை அவர் அங்கோலாவுக்கு அனுப்பினார். தென்னாபிரிக்கக் வெள்ளை நிற வெறி அரச அனுப்பிய படைகளை அங்கோலாவில் வைத்து அந்த அணிவிரட்டியடித்தது.



அதைத் தொடர்ந்து நபீபியா நாடு உதயமாகியது. தென்னாபிரிக்காவில் வெள்ளையர் ஆடசியின் முடிவு வேகமாக எட்டப்பட்டது. கியூபாப் படையணிகள் வியற்நாம் களத்தில் அமெரிக்காவுக்கு எதிராகப் போரிட்டன.
கியூபாவில் ஒரு சமச்சீரான அரசை உருவாக்க கஸ்ரோ தீவிர முனைப்புக் காட்டினார். நன்கு வளர்ச்சி பெற்ற முதலாம் உலக நாடுகளுக்கு நிகரான சுகாதார ஆராச்சியிலும, சேவை வழங்கலிலும் முதன்மை பெற்றுள்ளனர். கியூபா மருத்துவர்களுக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சுகயீனம் காரணமாக கஸ்ரோ தனது பதவியை உடன்பிறப்பு ராகுல் கஸ்ரோவிடம் கையளித்துள்ளார்.

பதவி மாற்றம் மேற்குலகின் கட்சி அரசியல், வாக்களிப்பு போன்றவற்றிற்கு வழிவிட வேண்டுமென்று மேற்குலகம் நெருக்குதல் கொடுக்கிறது. கஸ்ரோ
 சகோதரர்கள் உறுதியாக மறுத்து விட்டார்கள்.

எனினும் கியூபாவில் மாற்றங்கள் தொடங்கி விட்டன என்பதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. கியூபா அரசு 90 வீதத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களையும் உயர் நிலைப் பணியாளர்களையும் அரச சேவையி;ல் ஈடுபடுத்துகிறது. இந்த விகிதத்தை குறைக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

பொருளியல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. 20 விகிதமான தொழிலாளர்கள் புதிதாகத் தொடங்கிய தனியார் துறைக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிறிய பொருளாதார முயற்சிகளைத் தொடங்குவதற்கு கியூபா மக்களுக்கு முதன் முறையாக இடமளிக்கப் பட்டுள்ளது.

அழகு நிலையங்கள் போன்ற சுற்றுப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையங்கள் திறப்பதற்கும் பயணிகள் தொடர்பான தனியார் சேவைகள் வழங்குவதற்கும் அரசு அனுமதி கிடைத்துள்ளது. விவசாயிகள் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதற்கும் விவசாயக் கருவிகள் உள்ளீடு ஆகியவற்றை அரசிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

பிடெல் கஸ்ரோ விட்டுக் கொடுப்புக்களை மாற்றம் என்பது மாறாத விதி என்பதற்கு அமைவாக செய்கிறார் ஒழிய மேற்குலகின் நிற்பந்தத்தின் காரணமாகவல்ல என்பது வெளிப்படை.

நசுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தும் படைஅணி அனுப்பியும் உதவிய பிடெல் கஸ்ரோ தமிழீழ மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்ற ஆதங்கம் எம்மிடம் உண்டு.

Sunday, December 11, 2011

கடாபியின் எழுச்சியும், வீழ்ச்சியும் புகைப்பட பார்வை.....































































































1. அரபு தேசத்தின் கதட்ஃபா (ஞரயனாயனாகய) எனும் பூர்வீக குடியினத்தில் 1942மஆண்டு ஜூன்இ 7ம் திகதி பிறந்தார். பலஸ்தீன எழுச்சிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார். 1948ம் ஆண்டு இஸ்ரேலிடம் பலஸ்தீனம் தோல்வி அடைந்த போது மிகுந்த மனவேதனை அடைந்தார்.

 
2.அப்போதைய எகிப்திய அதிபர் கமல் அப்தெல் நாஸரை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். ஐரோப்பாவின் ஐக்கிய இராச்சியத்தில்இ சில காலம் தங்கியிருந்து பட்டப்படிப்பை மேற்கொண்டார். அவர் இங்கிலாந்தின் சாண்ட்டூர்ஸ்ட் (ளுயனொரசளவ) இல் உள்ள அரச இராணுவ அகடமியில் பயின்றதாக ஒரு வதந்தி அந்த காலத்தில் படு பிரபலம். தான் பிரபலமாவதற்கு இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.


3. 1969 அப்போதைய லிபிய அதிபர்இ கிங் ஐட்ரிஸ் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த போது  இரத்தமின்றி இராணுவ சதி புரட்சி மூலம்இ ஆட்சியை கைப்பற்றினர். அன்றிலிருந்துஇ லிபியாவை ஆட்சி செய்தார்.


4. அரச பரம்பரையில்லாதவர்களில் உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளராக வரலாற்றில் பதியப்பட்டார்.
(ஆட்சிக்காலம் 42 வருடங்கள்)


5. தனது தத்துவவியல் பார்வையை விளக்கும் வுhந புசநநn டீழழம எனும் புத்தகத்தை 1975ம் ஆண்டு எழுதினார்.


6. 1979ம் ஆண்டு தன்னை பிரதமர் என்பதை அழைக்க கூடாது. மாறாக புரட்சியின் வழிகாட்டி. சகோதர தலைவன் என அழைக்க வேண்டும் என கட்டளையிட்டார். மன்னர்களின் மன்னர் எனவும் அவரை அழைத்ததுண்டு.


7. கடாபியின் சர்வாதிகார ஆட்சியினால் லிபியாவை Pயசயiயா ளுவயவந (தாழ்த்தப்பட்ட பிரதேசம்) என மேற்குலகம் அழைக்க தொடங்கியது.


8. எண்ணெய் நிறுவனங்களால் கடாபி சம்பாதித்த மில்லியன் டாலர் சொத்துக்கள் குறித்து டச்லாந்து முதன் முறையாக விசாரணையை ஆரம்பித்தது. ஐரோப்பா முழுவதும் தனது சொத்துக்களை பரவலாக சேமித்து வைத்துள்ளதாகவும் கூறியது.




9. 1986ம் ஆண்டு லிபியாவில் குண்டு வெடித்தது. 1993ம் ஆண்டு ஐ.நா பல பொருளாதாரஇ சமூக தடைகளை லிபியா மீது விதித்தது. இப்பிரச்சினைகளால்இ மேற்குலகத்துடன் நட்புறவை பேண தொடங்கினார்.  தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் எனும் குற்றச்சாட்டை அடுத்து  விசாரணைகளுக்கு அனுமதித்தார். அணு ஆயுத திட்டத்தை கைவிட்டார். விளைவு 2003 இல் பொருளாதார தடையை நீக்கியது.


10. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளால் பிடிபட்ட 6 வது நாள்இ தனது பாரிய ஆயுத களஞ்சியங்களை அழித்துவிடுவதாக மீள் அறிவிப்பு செய்ததுடன்இ அதனை சர்வதேசம் ஆய்வு நடத்தவும் அனுமதித்தார்.
                                    

11. ஐக்கிய ஆபிரிக்காவின் (ருnவைநன ளுவயவநள ழுக யுகசiஉய) ஆட்சியாளராவதற்கு எப்போதும் ஆசைப்பட்டிரகடாபிஇ 2009-2010 காலப்பகுதியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.


12. துனிசியாஇ எகிப்து நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து 2011 பெப்ரவரி மாதம் கடாபியின் அரசுக்கு எதிரான சிவில் யுத்தம் ஆரம்பமானது.


13. இப்போராட்டத்தில் வெல்வேன்இ அல்லது வீரமரணமடைவேன் என சபதமெடுத்தார்.


14. பிரான்ஸ்இ இங்கிலாந்துஇ அமெரிக்கா கூட்டுப்படை நேட்டோக்களின் துணையுடன் புரட்சிக்குழு பெங்காஸியிலிருந்து முக்கிய ஒவ்வொரு நகரமாக கைப்பற்ற தொடங்கியது.


15. ஜூன் 27இ 2011 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்இ கடாபி மற்றும்இ அவரது மகன்களை கைது செய்வதற்கு பிடி ஆணை பிறப்பித்தது.


16. ஆகஸ்ட்இ 2011 இல் புரட்சிப்படையிடம் லிபிய தலைநகர் திரிபொலி வீழ்ந்தது. செப்டெம்பர் 16இ 2011 இல் இடைக்கால நிர்வாக அரசுஇ ஐ.நாவில் லிபியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்தது.


17.அக்டோபர் 20இ 2011 புரட்சிப்படையினரால் சேர்த் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து அல்லது உயிருடன் பிடிபட்டு பின்னர் மரணமடைந்தார்.