Social Icons

Pages

Monday, December 12, 2011

பிடெல் கஸ்ரோ- கருத்துப் போரில் ஒரு வர்க்கப் போராளி.

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ரோ 85 வயதை தாண்டியவர். கடந்த நான்கு வருடமாக நோய் வாய்பட்டுக் கிடந்த அவர் மீண்டும் எழுந்து நடமாடத் தொடங்கியுள்ளார். இன்றைய உலகின் அதிக வயது கூடிய கொமியூனிசத் தலைவர் அவர்தான்.


கொமியனிசம் தோல்வியுற்றதாக வரலாறு இல்லை.பொருளாதார, அரசியல் சமூக மாற்றங்களுக்கு அமைவாக கொமியூனிசம் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.அதன் கருத்தியல் அடிப்படையில் மாற்றமோ நிராகரிப்போ இல்லை.சீனாவைப் பாருங்கள்.அது கொமியூனிச நாடு என்றாலும் சுத்தமான முதலாளித்துவ நாடு.கம்மியூனிச கட்சி மேலாளர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள. பொருளாதார வரன்முறைகளை மனமுவந்து மாற்றத் துணிந்தவர்கள் அரசியல் முறைமையை மாற்ற உறுதியாக மாறுகின்றனர்.

கொமியூனசத்தின, அதாவது பொதுவுடமைச் சித்தாந்தத்தின் புதிய முகத்தை நவசீனாவில் காண்கிறோம்.பழந்பெரும் மாக்சிசச் சித்தாந்தத்தில் விடாப்பிடியாக நிற்கும் கியூபாத் தீவில் மாற்றங்களுக்கு இடமுண்டா பொறுத்துப் பார்ப்போம். கஸ்ரோ என்ன சொல்கிறார் கேட்போம்.
                                      
1959ல் கியூபா புரட்சியைத் தோற்றுவித்த பிடல் கஸ்ரோ கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவின் நெஞ்சில் தைத்த முள்ளாக இடம் பெற்றார். இன்றும் பெறுகிறார். அவர் கடைப்பிடித்தது நடைமுறை படுத்திய பொதுவுடைமை கருத்துக்கள் அமெரிக்காவிக்கு மிரட்சி ஊட்டின.
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கியூபா ஒரு சின்னஞ்சிறிய நாடு பத்துக்கு மேற்பட்ட அமெரிக்கா ஜனாதிபதிகள் அவரை கொல்ல முயற்சி எடுத்தார்கள். உளவுத்துறையான சி.ஐ.ஏ அவர் மீது கொலைக் கும்பல்களை ஏவி விட்டது. 1961ல் சனாதிபதி கெனடி கிய+பா மீது படு தோல்வியில் முடிந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

பெரும் தரைப்பரப்பையும் இராணுவ பலத்தையும் பொரளாதார வலுவையும் கொண்ட வல்லரசுகள் தமது பக்கத்தில் உள்ள சிறய நாடுகளையும்,நாடுகளாக பாரிணமிக்க  எந்தனிக்கும் மக்கள் கூட்டங்களையும் ஏன் அழிக்க முயற்சிக்கின்றன?.

                                     
                      
எல்லாம் அச்சம்தான்.அந்த நாடுகளும் மக்கள் கூட்டங்களும் எந்தக் கருத்தகளை அல்லது நடைமுறை படுத்துகின்றனவோ அதை கண்டு அஞ்சுகிறார்கள், மிரட்சி அடைகிறார்கள் ஒரு விதத்தில் தமது சொந்தப் பலத்தில் அந்த வல்லரசுகளுக்கு நம்பிக்கை இல்லைப் போலும்.
கியூபா மீதான தாக்குதலாகட்டும் தமிழீழ மக்கள் மீதான தாக்குதலாகட்டும் பெரிய வித்தியாசம் இல்லை. யூலை 21,  2006ம் ஆண்டில் ஆர்கென்ரீனா நாட்டில் நடந்த தென்னமரிக்க அரசுத் தலைவர்கள் உச்சி மானாட்டில் பிடல் கஸ்ரோ இப்படி பேசினார்.

“எண்பது வயதுவரை உயிர் வாழ்வதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். உலகின் பலமான அயல் நாடு என்னை ஓவ்வொரு நாளும் கொல்ல முயற்சிக்கும் போது நான் உயிர்தப்புவேன் என்று எண்ணவில்லை”.
மேற்கு நாடுகளின் சனநாயக மற்றும் பொருளாதார அளவுகளின் படி  கியூபா பின்னடைந்து காணப்பட்டாலும்  மூன்றாம் உலகின் அளவீடுகளின் படி கியூபாவின் செயல்முறை திருப்தி அளிப்பதாக உள்ளது. பருமனுக்கு மிஞ்சிய வரலற்றுப் பணியை அது ஆற்றியிருக்கிறது.சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பின்பும் அது தாக்குப் பிடிக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது.

மாக்சிசவாதியாக இருந்தாலும் கஸ்ரோ அணிசேரா இயக்கத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஆபிரிக்க நாடுகள் விடுதலை பெறுவதற்கு உதவினார். 350,000 போர் வீரர்கள் கொண்ட கியூபா அணியை அவர் அங்கோலாவுக்கு அனுப்பினார். தென்னாபிரிக்கக் வெள்ளை நிற வெறி அரச அனுப்பிய படைகளை அங்கோலாவில் வைத்து அந்த அணிவிரட்டியடித்தது.



அதைத் தொடர்ந்து நபீபியா நாடு உதயமாகியது. தென்னாபிரிக்காவில் வெள்ளையர் ஆடசியின் முடிவு வேகமாக எட்டப்பட்டது. கியூபாப் படையணிகள் வியற்நாம் களத்தில் அமெரிக்காவுக்கு எதிராகப் போரிட்டன.
கியூபாவில் ஒரு சமச்சீரான அரசை உருவாக்க கஸ்ரோ தீவிர முனைப்புக் காட்டினார். நன்கு வளர்ச்சி பெற்ற முதலாம் உலக நாடுகளுக்கு நிகரான சுகாதார ஆராச்சியிலும, சேவை வழங்கலிலும் முதன்மை பெற்றுள்ளனர். கியூபா மருத்துவர்களுக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சுகயீனம் காரணமாக கஸ்ரோ தனது பதவியை உடன்பிறப்பு ராகுல் கஸ்ரோவிடம் கையளித்துள்ளார்.

பதவி மாற்றம் மேற்குலகின் கட்சி அரசியல், வாக்களிப்பு போன்றவற்றிற்கு வழிவிட வேண்டுமென்று மேற்குலகம் நெருக்குதல் கொடுக்கிறது. கஸ்ரோ
 சகோதரர்கள் உறுதியாக மறுத்து விட்டார்கள்.

எனினும் கியூபாவில் மாற்றங்கள் தொடங்கி விட்டன என்பதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. கியூபா அரசு 90 வீதத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களையும் உயர் நிலைப் பணியாளர்களையும் அரச சேவையி;ல் ஈடுபடுத்துகிறது. இந்த விகிதத்தை குறைக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

பொருளியல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. 20 விகிதமான தொழிலாளர்கள் புதிதாகத் தொடங்கிய தனியார் துறைக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிறிய பொருளாதார முயற்சிகளைத் தொடங்குவதற்கு கியூபா மக்களுக்கு முதன் முறையாக இடமளிக்கப் பட்டுள்ளது.

அழகு நிலையங்கள் போன்ற சுற்றுப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையங்கள் திறப்பதற்கும் பயணிகள் தொடர்பான தனியார் சேவைகள் வழங்குவதற்கும் அரசு அனுமதி கிடைத்துள்ளது. விவசாயிகள் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதற்கும் விவசாயக் கருவிகள் உள்ளீடு ஆகியவற்றை அரசிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

பிடெல் கஸ்ரோ விட்டுக் கொடுப்புக்களை மாற்றம் என்பது மாறாத விதி என்பதற்கு அமைவாக செய்கிறார் ஒழிய மேற்குலகின் நிற்பந்தத்தின் காரணமாகவல்ல என்பது வெளிப்படை.

நசுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தும் படைஅணி அனுப்பியும் உதவிய பிடெல் கஸ்ரோ தமிழீழ மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்ற ஆதங்கம் எம்மிடம் உண்டு.

No comments: