Social Icons

Pages

Monday, November 28, 2011

ஆண் பாவம்!!!

 கால்டசின் தங்கையரை கரையேற்றி களைப்பாறி
கடைக்குட்டி தம்பியைக் கல்வியில் முன்னேற்றி
ஈன்றாரின் நோயோடு இழுபட்டு பணி செய்து
நாரிநிமிர்த்தி நாற்பது வயதான பின்பு

சாதகத்தை தரகரிடம் சமர்ப்பித்துக் காத்திருக்டிக
சாத்திரம் சரியாக கோத்திரம் குறுக்கிழுக்க
கோத்திரம் பொருந்திவர சாத்திரம் சறுக்கிநிற்க
மேலும் இருவருடம் வீணாய்க் கழிந்ததுவே!

ஓடுமீன் ஓடி உறுமீனைக் காத்திருக்க
தாடிமயிர் வெளுத்து தலைமண்டை வெளியாச்சு
வாடிய என் வாழ்வை மலர்விக்க இனியொருத்தி
நாடி வருவாளா நான் செய்த பாவம் என்ன?

பெண்களோடு சோதரனாய் பிறந்த குற்றம்
பெற்றாரைத் தெய்வமென மதித்த குற்றம்
பிறப்போடு கிரகங்கள் பகைத்த குற்றம்
புரையோடி கெடுக்கின்ற சமூகக் குற்றம்

இத்தனையும் சோ்ந்ததென்னை தரிசித்த
எம் பாவம் பேசுதற்க்கோ எவருமில்லை
பெண்பாவம் பேசுகின்ற எழுதுகின்ற
பெரியீரே எமக்கும் இருவரி ஒதுக்கும்!

Friday, November 25, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே!!


 “ இந்த எலக்சன் ரைம்ல கூட இந்த குப்பைக்கு மேல வந்து நிண்டு தான் ஓட்டு கேட்டாங்க….” இது லாக் ஏரியாவில் வசிக்கும் மக்களினுடைய வெறுப்போடு வந்த வார்த்தைகள் இவை.
                  சேரிப்புற மக்களிளுடைய வாழ்க்கை முறை துன்பகரமானது. இந்த நிலம் தான் எமக்கு வேன்டும் இதே நிலத்தில் தான் எங்களுக்கான வளங்கள் இருக்கிறது என்று எண்ணிக்கொள்பவர்கள் இந்த “லாக் ஏரியா” மக்கள்.
               


  
தெருவெங்கும் அமைந்திருக்கும் வீடுகள், மரங்களுக்கு கீழான சமையல், அதற்கு பக்கத்திலேயே ஆடு, மாடு கட்டி வளர்க்கப்படுகின்றது. இந்த வாழ்க்கை முறை இவர்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதோ தெரியவில்லை. ஆனாலும் அது பார்ப்பவர்களின் சிந்தனையை பல கோணங்களில் தூண்டி விடுகின்றது.
                  
 இந்த “லாக் கேரிய” மக்களுக்கு அரசாங்கம் ஆற்றுக்கு பக்கத்தில் சின்ன கொட்டகை வீட்டில் இருந்த சமயம் அரசாங்கம் அந்த மக்களுக்கு முப்பது அடி அடுக்கு மாn குடியிருப்பினை அமைத்துக் கொடுத்தது. அந்த குடியிருப்பினுள் வாளும் மக்கள் மிக நெருக்கமாக இருந்து தங்களுடைய வாழ்க்கையினை நகர்த்துகின்றனர். கூடவே பிரச்சினைகளுக்கு மத்தியில்.
                    இரண்டு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு நடுவே தான் இந்த மக்கள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு அற்ற நிலையில் இவ்வாறு செயற்படுகின்றார்களோ? என்ற எண்ணம் தோண்றுகின்றது. ஏன் எனில் மேல் வீட்டில் இருப்பவர்கள் தங்களினுடைய வீட்டு கழிவுகளை கீழே ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தாமல் மேலே இருந்தவாறே குப்பைகளை கீழே வீசுகின்றனர். வீசப்படும் கழிவுகள் கீழே கழிவு நீருக்குள் கலக்கின்றது. இத் தேக்கத்தால் ஏற்படும் நாற்றம் இவை அனைத்தும் சாதாரண ஒருவரால் ஜீரணிக்க முடியாததொன்றே. ஆனாலும் அங்கு இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களும் வசதி வாய்ப்புடன் வாழ்கின்றனர். ஓவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி, குளிரூட்டி, மோட்டார்சைக்கிள், மடிக்கணனி, குளிரூட்டப்பட்ட சிறிய அறை என அவர்களின் வாழ்க்கை முறை நவீயமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகமாக சம்பாதிக்கின்றவர்களாக உள்ளனரே என்று எண்ண தோண்றுகின்றது.
                   அங்கு இருக்கும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்ற பாடசாலை சில காலங்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. காரணம் அந்த குடும்பத்தில் இருக்கின்றவர்களுக்காகவே தான் அது ஆரம்பிக்கப்பட்டது அங்கு படிக்கின்ற பிள்ளைகளில் சிலர் பள்ளி நேரத்தில் பாதியிலே வீட்டுக்கு சென்று விடுவார்களாம். இதகால் தான் இந்த தொடக்கப்பள்ளி மூடப்பட்டது என்பது நேரில் சென்று விசாரித்தபோது தெரியவந்தது.
                    அத்தோடு இந்த லாக் ஏரியாவில் கழிவு நீரும் ஒழுங்காக அகற்றப்படாத தன்மையே காணப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டுக்கழவுகளும் அருகிலே ஓடும் “கூவ” நதியுடன் தான் கலக்கின்றது.
                     ஒட்டு மொத்தத்தில் இந்த மக்கள் வசதிவாய்ப்போடு வாழ்ந்தாலும் தங்களுக்கு ஏற்படும் இவ் சுகாதார பிரச்சினையைத் தீர்த்து கொள்ளாதவர்களாக உள்ளனர். இதற்க்கு இவர்களே ஒரு காரணமாக இருக்கின்றார்கள் என்பது வேதனையே!



 இது எனது இந்திய பயணம் தந்த முதல் அனுபவம்…இன்னும் பல அனுபவங்களோடு அடுத்த பதிவில் இணைகின்றேன்………

தமிழக பத்திரிகைகளில் இலங்கைத் தமிழர் விவகாரம் பார்க்கப்பட்ட விதம்


இலங்கையில் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்தது. தற்போது போர் மேகங்கள் மறைந்து விட்டனவே தவிர, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இது தொடர்ந்தும் நகர்த்தப்படுகின்ற நாட்களாகவே இருந்து கொண்டு இருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு சாவும், கண்ணீரும், அகதிவாழ்வும் நாளாந்த நிகழ்வாக பதியப்பட்டு இருக்க, தமிழ் இனத்துக்காக ஆயுதம் தரித்த போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மூண்ட சண்டைகள், சமாதான பேச்சுக்கள், தீர்வுகள் எட்டப்படாது முடிந்த பேச்சுக்கள் யாவற்றையும் தமிழக ஊடகங்கள் எப்படி பார்த்தன? இப் பிரச்சனைகளை அவ் ஊடகங்கள் வெளிகொணர்ந்த விதம் எவ்வாறு என்பது பற்றி தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற முதன்மை சஞ்சிகையான “விகடன்” சஞ்சிகையின் செய்தியாளர் முரளிதரன் என்ற சொந்த பெயரினையுடைய தமிழ்க்கனல் அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் சென்னையில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சியின் போது பகிர்ந்து கொண்ட விடயங்கள் இவை.
                              எப்போதுமே ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பாக விகடன் சஞ்சிகை நடுநிலையாகவும் வெளிப்படையாகவுமே செய்திகளை தெரிவித்து வந்தது தெரிவித்துக்கொண்டு இருக்கின்றது. அத்தோடு விகடனில் “வீழ்ந்து விடுவேனோ என நினைத்தாய்” என்ற தொடர் தற்போதும் வெளிவந்தவண்ணமுள்ளது. பொதுவாகவே இலங்கையில் உள்ள மலையக தமிழர்கள் பற்றி இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட மறந்து விட்டன என்றே கூறலாம். ஆனாலும் 1980 காலப்பகுதியில் இந்த மலையக மக்களின் பிரச்சனைகள், சவால்கள், தோட்டபுறங்களில் அவர்களுக்கு நேர்ந்த துன்பங்கள் என்பன பற்றிய செய்திகளை வெளியிடுவதில் இக்கால பகுதியில் ஒரு காத்திரமான பங்கை இவ் ஊடகங்கள் வகித்தன.
                   தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்திய ஈழத்து   
இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி அவர்களின் போராட்டங்களையும் வளரசெய்தது. ஆரம்ப காலங்களில் குறிப்பாக 1980 காலப்பகுதியில் தமிழக அரசிடம் இருந்து இந்த உபசரிப்பு கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய இராணுவம் அமைதி படையாக அனுப்பிவைக்கப்பட்டபோது யாழ் மண்ணுக்கு இந்திய இராணுவம் வந்ததை “~கிண்டு பிறிண்டன்” என்ற பத்திரிகை சொன்னது போராளிக்குழுக்களுக்கு இடையில் போட்டி உள்ளதாக என்று தங்களின் கருத்தாக அப்பத்திரிகை செய்தியினை வெளியிட்டது.
                           இதே வேளை இக்கால பகுதிகளில் “துக்கலம்” வார இதழ் ஈழத்து போராளிகளுக்கு எதிராக செய்திகளை எழுத தொடங்கியது ஆனாலும் தமிழகத்தில் இருந்து வெளிவரும் முதன்மை நாளிதழ்களில் ஒன்றான தினமணி ஈழப்போராட்டத்திற்க்கும் போராட்ட குழுக்களுக்கும் ஆதரவாக செய்திகளை வெளியிட தொடங்கியது. ஆனாலும் “தினதந்தி” நாளிதழ் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு இருக்கின்றது என்று கூறமுடியாது.
                       இதெல்லாம் இவ்வாறு இருக்க இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி தற்கொலை குண்டு தாரிகளால் கொலைசெய்யப்பட்ட போது ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்காக வந்த ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட சம்பவங்களும் பத்திரிகைகளில் நடந்தேறியுள்ளன. இக்கால பகுதியில் இந்தியாவில் இயங்கி வந்த வானொலிகள் யாவும் அரச கட்டுப்பாட்டின் கீழே இயங்கி வந்தது. அந்த வகையில் அகில இந்திய வானொலி, ஆகாச வாணி என்பன இலங்கையில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் எதிர்மறை நோக்குடன் உடனுக்குடன் சொல்லி வந்தது. இதனோடு இணைந்த இந்த காலப்பகுதியில் நாளிதழ்களும், வாரஇதழ்களும் தனியே விமர்சனங்களையே தாங்கி வந்தன.
                         அத்தோடு இலங்கையில் சமாதானம் தோண்றும் வரைக்கும் இலங்கை விவகாரம் தமிழ்நாட்டில் எதிரானதாகவே பார்க்கப்பட்டது. இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள், விடயங்கள் விளம்பர நோக்கமாகவே வெளியிடப்பட்டன. அத்தோடு 2007 இல் ஈழத்தமிழர் பற்றி பேசவேண்டும் என்ற கருத்துநிலை உருவாக்கப்பட்டது. இதற்க்கு மக்கள் தொலைக்காட்சி மாத்திரமே உறுதுணையாக இருந்தது.
                       மேலும் அவர் தெரிவிக்கும் போது தமிழக ஊடகங்கள் ஏஜென்சிகள் மூலமே இலங்கை பிரச்சினை தொடர்பான பெற்று கொண்டன.
இதே போன்ற பல அனுபவ பகிர்வுகள் என் இந்திய பயணத்தில் உள்ளன அனை நான் அடுத்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்